திங்கள், 28 டிசம்பர், 2015

சென்னை மழை வெள்ளம் : ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆக்கிரமிப்புகள் ! 1000 கட்டிடங்களுக்கும் மேலாக....அத்தனையும் அவுகதாய்ன்.

ias-encroachment-1
வினவு.com சென்னை மழைவெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குடியிருப்பும் காரணமா?’ என்ற தினகரன் செய்தியை பார்த்துவிட்டு அப்படி எந்த இடத்தில் ஆக்கிரமித்துள்ளனர் என தேடி புறப்பட்டோம். நெற்குன்றம், விருகம்பாக்கம் பகுதியில் சுற்றி அலைந்ததில் ஒரு இடத்தில் மிகப்பெரிய கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு சென்று விசாரித்ததில் அதுதான் நாம் தேடிச்சென்ற இடமென தெரிந்துவிட்டது. விருகம்பாக்கம் ஏரிக்கு – அதாவது பெரியார் நகர், முத்தமிழ் நகர் போன்ற நகர்களுக்கு – எதிரில் உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில்தான் அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன.

சுமார் 1000 கட்டிடங்களுக்கும் மேலாக, 20 மாடி கட்டிடங்கள் ஒரு வரிசையிலும், 12 மாடி கட்டிடங்கள் மற்றொரு வரிசையிலுமாக பிரமாண்டமான கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து கொண்டிருந்தன. அண்ணாந்து பார்த்தது கழுத்து வலித்ததால், கீழே குனிந்து பார்த்தால் நேற்றிரவு பெருமழை பெய்திருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பும்படி மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துக்கொண்டிருந்தது. ஊடகங்களில் செய்தி வெளியாகி விட்டதால், பிற ஊடகங்கள் வரிசையாக படையெடுக்கும் என்ற அச்சத்தில் அவசர, அவசரமாக நீரை மோட்டார் வைத்து வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.
புதிதாக கொட்டப்பட்டிருந்த குளோரின் பவுடரைத் தாண்டி கொசுக்களின் உற்பத்தி மையங்கள் ஒவ்வொரு வாசலிலும் கிளை திறந்திருந்தன. வீடுகளுக்குள் புகுந்திருந்த பகுதிகளை சூழ்ந்த வெள்ளத்தை வெளியேற்றுகின்றனர் என விசாரித்தோம்.
ias-encroachment-2“நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ இங்க இருக்கிற காவாயில குளிச்சிருக்கேன்” என ஒருவர் மண்தரையைக் காட்டி சொன்னார். அதனுடைய முனையில் கால்வாயின் மிச்ச சொச்சங்களாக சிமெண்ட் காரை கொஞ்சம் தென்பட்டது. “20 அடி அகலம் பத்தடி ஆழமிருக்கும்” என சொல்லி காணாமல் போன கால்வாயைப்பற்றி அடுத்த அதிர்ச்சியை கிளப்பினார்.
அந்தப் பகுதிக்கு எதிர்ப்புறமிருந்த பெரியார் நகர், முத்தமிழ் நகர் போன்ற பகுதிகள் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவையாம், எழுபது வயது முதியவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்த விருகம்பாக்கம் ஏரியின் உபரி நீரை கூவம் நதிக்கு கொண்டு செல்வதற்காகத்தான் அந்த கால்வாய் பயன்பட்டதாக தெரிவித்தார். அதன் இருகரையோரமும் முப்போகம் விளைவித்ததாகவும், அதன் பின்னர் செங்கல் சூளை வேலை நடந்து வந்ததாகவும் அந்த காலம் – இரண்டு தலைமுறைகளாக தாங்கள் இங்கயே வசித்து வருவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
ias-encroachment-5“எங்கப்பா சின்னபுள்ளையா இருக்கிறப்போ இங்க விவசாயம் நடந்துனு இருந்துச்சு, அப்போ வேலை செய்யறதுக்காக இங்க வந்து குடிசை போட்டு வாழ்ந்து வர்ரோம். இதோ, இன்னிக்கு என் புள்ளை பெரியவன் ஆயிட்டான், இத்தன வருசத்துல இங்க பெய்யிற மழைக்கு வீட்டுக்குள்ள தண்ணி வந்ததில்ல, ஆனா இந்த பில்டிங் கட்டறதுக்காக இந்த காவாய தூத்துட்டாங்க, அப்புறம் சின்ன சின்ன மழைக்கு கூட வூட்டுக்குள்ள தண்ணி பூந்துரும்” 45 வயதுள்ள அம்மா ஒருவர் தெரிவித்தார்.
கால்வாயாகவும், விளைநிலமாகவும் இருந்த நிலத்தை கடந்த நான்காண்டுகளுக்கு முன்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான மலிவுவிலை வீடு கட்டிக்கொடுக்க ஆக்கிரமித்துள்ளது அரசு. இரண்டாண்டுகளுக்கு முன்னர் குடியிருப்புகள் கட்டத் தடையாக இருந்த 20 அடி அகல கால்வாய் முழுவதுமாக மண் கொட்டப்பட்டு தூர்க்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 600 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், 120 குரூப் 1 அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள 200 அரசு அதிகாரிகளுக்கு இந்த குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படவுள்ளன.
ias-encroachment-9“இவ்வளவு பெரிய காவாய தூர்த்தாங்களே, நீங்க எதுவும் செய்யலையா?” என நாம் கேட்டபோது, “கால்வாய மட்டுமா தூர்த்தாங்க, நாங்க குடிசையில் இருந்தாலும் காசு போட்டு எங்களுக்குனு கக்கூஸ் பாத்ரூம் கட்டியிருந்தோம். அந்த இடத்தயும் பில்டிங்குக்கு ரோடு போடனுமுனு சொல்லி ஏரியா கவுன்சிலர் மோகன வச்சி இடிச்சித்தள்ளிட்டானுங்க. அதுக்கு எதிரா அப்பவே போராட்டம் பண்ணுனோம். அப்பதான் 200 போலிச வச்சி போராட வுடாம பண்ணுனாங்க. அவ்ளோ போலிச எப்படி தடுக்கிறது?” என பரிதாபமாக கேட்கிறார் ஒரு தாய்.
இப்படி கால்வாயை தூர்த்துவிட்டதால் சமீபத்தில் பெய்த கனமழையில் மொத்த குடிசைகளும் மூழ்கிப் போயுள்ளன. “நடுராத்திரி, திடீர்னு ஒரு குடிசை வீட்டுல தீப்புடிச்சிடிச்சு. கரண்ட் பாக்ஸ் வெடிச்சு தீப்புடிச்சதால நாங்க எல்லாரும் பயந்துட்டோம். ஏற்கனவே மழை தண்ணி வூட்டுக்குள்ள பூந்ததனால எல்லாரும் வீட்டை பூட்டிட்டு மேட்டுக்கு ஓடிட்டோம். நைட்டெல்லாம் ஒரு சத்திரத்துல தங்கிட்டு காலையில வந்து பார்த்தா மொத்த வீடுகளும் மூழ்கிடுச்சு. அப்புறம் இவ்வளவு நாள் கழிச்சி நாலு நாள் முன்னாடிதான் இங்க வந்தோம். வந்து பார்த்தா இன்னமும் தண்ணி வடியல” வெள்ளம் வந்த நாளை வேதனையுடன் நினைவு கூறுகின்றனர். மற்ற பகுதிகளை போலவே, இங்கும் பொதுமக்களும், தன்னார்வலர்களுமே வந்து உதவிகள் செய்ததாக தெரிவிக்கின்றனர். ஏரியா கவுன்சிலர் உட்பட யாரும் வந்து பார்க்கவில்லை. துணைமேயர் சாலையோடு வந்து அப்படியே சென்று விட்டார்.
ias-encroachment-6பெண்கள வீட்டு வேலைக்கும், ஆண்கள்  கொத்தனார் வேலைகளுக்கும் சென்று சேர்த்து வைத்திருந்த கொஞ்ச நஞ்ச சொத்துகளும் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. திரும்ப வாழ்வை துவக்க வழியே இல்லாத சூழலில் இருக்கின்ற இடத்தை விட்டும் அவர்களை துரத்தியடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது அதிகார வர்க்கம்.
ஏரி, கால்வாய்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட்டு கால்வாய் ஓரமாக குடிசை போட்டுள்ள – அதுவும் 25 ஆண்டுகளாக குடிசையிலிருக்கும் இந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என சொல்லுகிறது அதிகார வர்க்கம். தேங்கியுள்ள மழைநீருக்கு காரணம் கால்வாயை ஆக்கிரமித்ததுதான் என போராடியதற்காக, இப்போது நீர்பிடிப்பு பகுதிகளை இந்த மக்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிட வேண்டுமெனவும் மிரட்டுகின்றனர் அதிகாரிகள். “நாங்களாவது கால்வாய் ஓரமாத்தான் வீடு கட்டியிருக்கிறோம். அதுக்கே எங்கள துரத்துறீங்களே, இந்த பில்டிங் எல்லாம் கால்வாய் மேலேத்தான் கட்டியிருக்காங்க, இத ஏன் கேக்க மாட்டேன்கிறீங்க? எங்களுக்கு ஒரு நீதி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு நீதியா?” என குமுறுகின்றனர் பகுதிவாழ் மக்கள்.
ias-encroachment-3“இவ்ளோ செலவு செஞ்சி அதிகாரிகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கிற கவர்மெண்ட் எங்க குடிசையை மாத்தி இங்க ஒரு வீடு கட்டிக் கொடுக்க கூடாதா? எங்கள தூக்கி எங்கயோ செம்மஞ்சேரிக்கும், கண்ணகி நகருக்கும் போனு சொல்றாங்க, ஏன் இந்த அதிகாரிங்கள அங்க போக சொல்ல வேண்டியதுதானே? முடியாதில்ல, எங்கள மட்டும் ஏன் போக சொல்றீங்க? என்ன ஆனாலும் சரி இந்த இடத்த விட்டு நாங்க போகமாட்டோம்” என உறுதி காட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
மாஃபியாக் கொள்ளைக் கும்பல்களை போன்று சட்டவிரோதமாக கால்வாயை ஆக்கிரமித்ததோடு அல்லாமல், அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் அடியாளை வைத்து – போலிசை வைத்து – விரட்டியடிக்கின்றனர் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள். 20 குடும்பங்கள் வசிக்க வேண்டிய இடத்தில் சுமார் 50 குடும்பங்கள் நெருக்கமாக குடிசைகள் அமைத்து காலம் காலமாக வசித்து வரும் இவர்கள் ஆக்கிரமிப்பாளர்களா? இல்லை கால்வாய், விவசாய நிலமென 17 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வெள்ளத்திற்கு காரணமான ஐ.ஏ.எஸ் அதிகாரகள் ஆக்கிரமிப்பாளர்களா?
போராடும் மக்களை தங்கள் நலனுக்காக அடித்து விரட்டும் இந்த அதிகாரிகள்தான் மக்களுக்கு நிவாரணப் பணிகளை செய்யப் போகின்றவர்களாம்(!) ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிக்கொண்டுள்ள இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் வெள்ளப் பாதிப்புக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றப்போகிறவர்களாம்(!). அப்படியெனில், மக்களுக்காக பணிபுரியும் தகுதியை இழந்துவிட்ட, மக்களுக்கு எதிரியாக மாறிப்போயுள்ள, இந்த அதிகார வர்க்க ‘ஆக்கிரமிப்பாளர்களை’ யார் அகற்றுவது?
தகவல்:

கருத்துகள் இல்லை: