வெள்ளி, 1 ஜனவரி, 2016

மதச்சார்பற்ற கட்சியுடன் மட்டுமே கூட்டணி: தமிழக காங்கிரஸ்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சியுடன் மட்டுமே
காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் கொள்ளும் என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்கள் கேள்வுக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
கடந்த 28-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "கூட்டணி என வரும்போது காங்கிரஸை விட்டுவிட மாட்டோம். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும் இடம் உண்டு'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இளங்கோவன் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக இளங்கோவன் கூறும்போது, "திருவனந்தபுரத்தில் சோனியா காந்தியை சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பல விஷயங் களை விவாதித்தோம். தேர்தல் கூட்டணி குறித்து சோனியாவும், ராகுலும் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்தி வருகிறோம்" என்றார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கோபியில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ். இளங்கோவன், "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சியுடன் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் கொள்ளும்" எனக் கூறியுள்ளதால் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: