சனி, 2 ஜனவரி, 2016

"மக்கள் உணவு "நாடு முழுவதும் ரயில் நிலையங்களில்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் "ஜன் ஆஹார்' என்ற பெயரில் உணவகங்களை இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) தொடங்கி உள்ளது. இந்த உணவகத்தில் அனைத்து உணவு வகைகளும் ரூ.20-க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன இந்த உணவகம் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் இயங்கும். அத்துடன், அனைத்து மாநில உணவு வகைகளும் ரூ. 20-க்கும் குறைவான விலையில் கிடைக்கும். இதுதவிர, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவையும் இந்த உணவகங்களில் கிடைக்கும். சுத்தமான குடிநீரும் இந்த உணவகங்களில் இலவசமாக வழங்கப்படும்.dinamani.com

கருத்துகள் இல்லை: