புதுடெல்லி,
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் அட்னான் சமிக்கு இந்தியக் குடியுரிமை
வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2016ம்
ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அதாவது நாளை முதல் அவர் இந்தியக் குடிமகனாக
மாறுவார். தனது பாகிஸ்தான் குடியுரிமையை சமி விட்டுக் கொடுத்ததைத்
தொடர்ந்து அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசு தீர்மானித்ததாக
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய
குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 6ன் கீழ் சமிக்கு குடியுரிமை
வழங்கப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டிலிருந்து இந்தியாவில்தான் வசித்து
வருகிறார் சமி. அவர் தனக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி
விண்ணப்பித்திருந்தார். தற்போது அது ஏற்கப்பட்டுள்ளது.கலையுலகுக்கு சமி
ஆற்றியுள்ள சேவையைக் கருத்தில் கொண்டும், இந்தியாவை தனது வீடாக அவர்
மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலும் அவரது குடியுரிமை கோரிக்கை
பரிசீலிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமிக்கு இந்தியக்
குடியுரிமை வழங்கப்படக் கூடாது என்று சிவசேனா கடுமையாக எதிர்ப்பு
தெரிவித்து வந்த நிலையில் மத்திய அரசு அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது. தினபூமி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக