வெள்ளி, 1 ஜனவரி, 2016

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு... பெண்களே உடன்கட்டை ஏறும் நாளை நோக்கி....சதிமாதாக்கி ஜெய்!

பெண்களை மிகவும் உயர்வாக மதிக்கும் பண்பு என்பது உண்மையில் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் உத்திதான். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஏன், எல்லா உயிரனங்களும் உயர்வானவைதான். ஆனால் இவர்களோ பெண்கள் மட்டும் எதோ தெய்வ பிறவிகள் போல உயர்த்திவிட்டு குப்புற கீழே தள்ளி விழுத்தும் காரியத்தை அல்லவா செய்கிறார்கள்?
அடிமைகள் மிகவும் பெறுமதிவாய்ந்த பொருட்களாகும். அடிமைகள் எனப்படுவோர் தங்களை வாங்கவும் விற்கவும் தங்கள் உடல் உழைப்பை உடலை இன்பத்தை  எஜமானனுக்காக  எந்த நேரமும் வழங்க தயாராக இருப்பவர்கள் என்ற பாரம்பரியத்தை கொண்டவர்களாகும்.

ஆணாதிக்கம் என்பது பெண்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக உருவானதுதான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை,
பெண்களை அடிமைகளாக வைத்திருப்பவர்கள் கண்டு பிடித்த போதை வஸ்துதான் பெண்கள் உயர்வானவர்கள் தெய்வத்துக்கு நிகரானவர்கள் போன்ற டாஸ்மாக் கோட்பாடுகள்.
பெண்கள் உயர்வானவர்கள் தெய்வத்துக்கு நிகரானவர்கள் என்ற சுலோகத்தின் உச்ச கட்டம்தான் உடன் கட்டை ஏறும் பாரம்பரியம் .
 இறந்த கணவனின் உடலோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு கொழுத்தி எரித்து விட்டு சதிமாதாவுக்கு ஜெய்  என்றுஅவளை உயத்தில் ஏற்றி போற்றி தெய்வத்துக்கு நிகராக கொண்டாடுவது எவ்வளவு கொடுரம் நிறைந்த கயமைத்தனம் ?
இன்றைய பெண்களின் ஆடைக்கட்டுப்பாடு ...கோவிலின் புனிதம் காப்பது எல்லாம் இந்த சதிமாதா தத்துவத்தின் வெளிப்பாடுதான். ஆடை கட்டுப்பாடு பற்றி வகுப்பெடுக்கும் நீதிபதிகளோ அல்லது சமய வீரகளோ எம்ஜியார் ஜெயலலிதா ரஜினி கமலஹாசன் மற்றும் இதர சினிமா நடிகர் நடிகைகளின் அங்கங்களை திரையில் மட்டும் அல்ல வீடுகளில் டிவியில் பார்த்து ரசிப்பவர்கள்தான் ராமகோபாலன் தொடங்கி காஞ்சி சங்கராச்சாரி வரையில் இதுதான் உண்மை .
சமயம் கலாசாரம்  போன்றவைகளை கூறி  மேலும் மேலும் புதிய சட்டங்களை இயற்றுவது  சாதாரண மனிதர்களை  அடிமைகளாக வைத்திருக்கும் யுக்திதான்
ஆடை கட்டுப்பாடு என்பது பெண் அடிமைத்தனமும் ஜாதி அடிமைத்தனமும் பேணுவதற்காக மட்டுமே இவர்களால் தூக்கி பிடிக்க படுகிறது, இதன்மூலம் இவர்கள் யார் என்று தங்கள் வேஷ்டியை தூக்கி காட்டுகிறார்கள் என்றே பொருள் படுகிறது   பார்ப்பான் தனது பூணுலை பறைசாற்றவும் யார்யாருக்கு பூணுல் இல்லை என்பதை கண்டுபிடிக்கவும்  ஆண்கள் மேலங்கி அணியாமலதான் வரவேண்டும் என்று திருச்செந்தூர் போன்ற கோவில்களில் சம்பிரதாயம் என்கிறான், கேரளாவிலும் இலங்கை யாழ்ப்பனதிலும் கூட இந்த மாதிரி பார்ப்பானுக்கு வசதியான வெறும் உடம்பு வழிபாடுதான்... 

இனி விரைவில் தப்பி தவறியும் கோவிலுக்குள் கொஞ்சம் அழகாக ஆடைகள் அணியும் பெண்கள் தாக்கப்படுவார்கள். ஏன் அவர்கள் இந்துத்வா பயங்கரவாதிகளால் தீ வைத்து கொழுத்தப்படவும் கூடும்.
திட்டமிட்டு  பாஜக RSSகும்பல்களின்  ஆடைகட்டுப்பாடுகள் வெறுமனே ஒன்றும் அறியாத அறநிலைய துறை அல்லது அது சார்ந்த நீதித்துறையின்  வியாக்கியானம் என்று ஒதுக்கி விட முடியாது.
பார்பன ஆதிக்கம் நீதித்துறையை   ஆக்கிரமித்து  நீண்ட நாளாகி விட்டது. வெள்ளைக்காரன் விட்டு சென்ற இடத்தை இந்த  கொள்ளைகாரர்கள்  பிடித்து கொண்டார்கள்.

அறிவு கொண்ட ஆண்களும் பெண்களும்  இந்த கோவில்களை  பகிஷ்கரிக்க வேண்டும். உண்மையில்  அதுதான் அதிகமாக நடைபெற வாய்ப்பு உள்ளது,
வேகமான இன்றைய உலகில்  தாலிபான் / சவுதி அரேபியா பாணியில் ஆடைககட்டுப்பாடு எல்லாம் இனி  எடுபடாது, மக்கள் கொஞ்சம் விழித்து விட்டார்கள் . இஸ்லாமிய நாடுகளே விழிப்பு பெற்று சுதந்திரத்தை நோக்கி பயணிக்கும் காட்சிகளை நாம் கண்முன்னே காண்கிறோம் ,
ஆனால் இந்த இந்துத்வா முட்டாள்கள்  மீண்டும் கற்காலத்து கோட்பாடுகளை தூசி தட்டி சதி(மாதா) ஆலோசனைகள் செயல் படுத்த துடிக்கிறார்கள்.

 

கருத்துகள் இல்லை: