புதன், 6 மே, 2015

நிதின் கத்காரி :எனது பங்களாவில் பயிர்களுக்கு சிறுநீர்தான் பாய்ச்சுகிறேன்! முடியல்ல சாமி!

புதுடில்லி: ''சிறுநீரை பயிர்களுக்கு பாய்ச்சினால், செழிப்பாக வளரும் பயிர்கள், அமோக விளைச்சலையும் கொடுக்கின்றன; இது, சொல்றதுக்கு அசிங்கமாக இருக்கலாம்; ஆனால், பலன் தரக்கூடியது,'' என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்காரி கூறினார்.பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றில், நிதின் கட்காரி பேசியதாவது:
நாட்டில் பல இடங்களில் வறட்சி, தண்ணீர் இல்லை என்கின்றனர்; தண்ணீரின்றி, பயிர்கள் நாசமாகிப் போனதாக பலரும் கூறுகின்றனர். அவர்களுக்கு, நான் ஒரு யோசனை சொல்வேன். தண்ணீர் இல்லை என்றால் என்ன, சிறுநீரை பயன்படுத்திப் பாருங்கள்; நான் இதை விளையாட்டாக சொல்லவில்லை; உண்மையிலேயே பரிசோதனை செய்து பார்த்துள்ளேன். டில்லியில், நான் இருக்கும் பங்களா, பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் இருக்கிறது. அதில் இருக்கும் தோட்டத்தில், சிறுநீர் சோதனை செய்தேன்; சிறுக, சிறுக சிறுநீரை சேகரித்து வந்தேன்; ஒரு பிளாஸ்டிக் கேனில், 50 லிட்டர் சேர்ந்ததும், தோட்டக்காரனை கூப்பிட்டு, இதை, மரங்களுக்கு பாய்ச்சு என்றேன்.அதன்படி, சிறுநீர் பாய்ச்சப்பட்ட மரங்கள் வேகமாக வளர்ந்தன;  அதுசரி....இவர் ஏன் பிடிச்சு வச்சு ஊத்தணும்......வரப்ப நேரா செடியியிலேயே அடித்துவிட வேண்டியதுதானே.....முன்ன ஒரு  மொரார்ஜி இப்ப இவனுங்க ....கங்கையை வேற சுத்தம் செய்யபோறேன்னு கிளம்பிராய்ங்க ! உலக அரங்கில் ரொம்ப நல்ல பேரு வரும்?

அவற்றில் மகசூலும் அதிகமாக இருந்தது. இதை சொல்வதற்கு வேண்டுமானால், அருவருப்பாக இருக்கலாம்; ஆனால், நல்ல பலன் தரக்கூடியது.இவ்வாறு, அவர் கூறினார்.கட்காரியின், சிறுநீர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இணையதளங்களில், ஏராளமானோர் அவரை, கரித்துக் கொட்டிவிட்டனர்.
*கட்காரி வீட்டிலிருந்து பழம், காய்கறி ஏதும் கொடுத்தால், வாங்கி சாப்பிட்டு விடாதீங்க!
*கட்காரி நம் மீது, சிறுநீர் கழிக்கிறார்.
*கட்காரி வீட்டுக்கு விருந்துக்கு சென்ற, அமெரிக்க அதிகாரி ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட பழக்கலவை (சாலட்) சிறுநீர் மரத்தில் விளைந்ததா என, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார்.இவ்வாறு, ஏராளமானோர், கட்காரிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.நிதின் கட்காரியின் சொந்த மாநிலமான, மகாராஷ்டிராவில், கடந்த முறை, காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சியில், துணை முதல்வராக இருந்த, தேசியவாத காங்கிரசை சேர்ந்த, அஜித் பவார், 'அணைகளில் தண்ணீர் இல்லை என்பதற்காக, மூத்திரம் பெய்தா நிரப்ப முடியும்?' என்றார். அதுபோல, கட்காரியும், சிறுநீர் பற்றி பேசியுள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: