ஞாயிறு, 3 மே, 2015

2500 யேஸீதிகளை நேற்றைய முன்தினம் முதல் ‘காணவில்லை’ – இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு.......

இராக்கின் மொஸூல் பிராந்தியத்தில், ஸிஞ்ஜருக்கு அருகில் இருக்கும் கர்ட் யேஸீதிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் அவலம் இது. கர்ட் வீரர்கள் என்னதான் காப்பாற்ற முயன்றாலும், தங்கள் ரத்தத்தைச் சிந்தி உதவி செய்தாலும் – பலப்பல யேஸீதிகளைக் காப்பாற்றியிருந்தாலும், மீட்டிருந்தாலும் இதுதான் தற்போதைய நிலவரம்…
இந்த எண்ணிக்கை 500லிருந்து 3000 வரை விதம்விதமாகச் சொல்லப் பட்டாலும் – குறைந்த பட்சம் 2500 பாவப்பட்ட யேஸீதிகளை நேற்றையமுன்தினம் முதல் ‘காணவில்லை’ – அதுவும் இஸ்லாமிக் ஸ்டேட்  கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு இப்படிக் காணாமல் போனார்கள் என்பது மஹாகோரம்தான். சுடப்பட்டு, அறுக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பார்கள்தான், அவர்கள்.  இதைத்தவிர பல பெண் குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தாய்கள் – ஜிஹாதி பொறுக்கிகளின் காமப்பசிக்கு இரையாக எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர்.
இதுவா இஸ்லாம்? இவ்வளவுதானா ஜிஹாத்? படு கேவலமாக இருக்கிறது.
வஹ்ஹாபிய-ஸலாஃபிய இஸ்லாம் சார்புடைய வெறியர்கள் ஆட்சி செய்தால் – இந்த விஷயம்தான் நடக்கும்: ஆயுதம்தாங்கிகளற்ற அப்பாவிகளுக்கும், வேற்று மத/மதப்பிரிவினருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும்  கழுத்தறுப்பு மரணங்கள் மட்டுமே காத்திருக்கும். பெண்களுக்கு வயது வித்தியாசம்பாராமல் – வன்புணர்ச்சிகளும், குழுப்புணர்ச்சிகளும் மட்டுமே ஊக்கபோனஸாகக் கிடைக்கும்.
இதுதாண்டா வஹ்ஹாபிய இஸ்லாம்!


Screenshot from 2015-05-02 21:44:48
மேற்கண்ட செய்தி/அறிவிப்பு வந்து ஐந்தாறு நாட்களாகி விட்டன.  நேற்று இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள் அவர்களுடைய ஜிஹாதி வேலையைக் காட்டிவிட்டார்கள்.
–0-0-0-0-0-0-0–
கஷ்மீரில் கூட இந்த ஐஎஸ் கும்பலுக்கெதிரான ஆர்பாட்டங்கள், அணிவகுப்புகள் அவ்வப்போது (ஷியா சமூகத்தினரால்) நடத்தப்படுகின்றன என்றாலும் வேறேங்கும் இதற்கான ஒரு அரைமனது எதிர்ப்பைக் கூட ஒருவரும் காண்பிப்பதில்லை. நம் தங்கத் தமிழ்நாட்டிலும் பெரும்பாலும் இதே கதைதான்.
பெரும்பாலும் என்று ஏன் சொல்கிறேன் என்றால், நாம் தமிழர்கள்  அல்லவா? ஆகவே, நாம் ஒரு படி மேலே போய் – இஸ்லாமிக்ஸ்டேட் இயக்கத்துக்கு ஆதரவு கூடத் தருவோம்!
unnamed

இந்தப் பொறுக்கி இயக்கத்துக்கு நம் தமிழகத் தமிழ் முஸ்லீம் இளைஞ்சர்கள் சிலரின் வெட்கங்கெட்ட கயமை ஆதரவு வேறு.
நான் ஒரு தமிழன் என நினைத்துப் பல விஷயங்களுக்காகப் பெருமைப்படுகிறேன். பல விஷயங்களுக்காக வெட்கித் தலைகுனியவும் செய்கிறேன். இதில் இந்த அரைகுறைகளின் மேற்கண்ட புகைப்படம் இரண்டாம் ஜாதி.
ஒரு விஷயம்: கில்யஸ் அம்மணி குறித்த  ஒரு அண்மைய பதிவில் – புதுச்சேரி பக்க கோட்டக்குப்பத்தில் ஐஎஸ் டீஷர்ட் ஒன்றைப் போட்டுக்கொண்டு ஒரு முஸ்லீம் இளைஞன் நடந்துபோனதைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு, இந்தப் பிலுக்கல் ஐஎஸ் அரைகுறைகள் விஷயத்தைப் பற்றி எனக்கு இந்தப் படத்தை அனுப்பியது / சுட்டிகொடுத்தது ஒரு ஸுன்னி முஸ்லீம் நண்பர் – கேரள குட்டிபுரத்துக்காரர், மாப்பிள்ளைமார், ஆனால் மார்க்ஸியர். இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக ஒரு சிறு அமைப்பை நடத்தி வருபவர். ஆனால் அவர், தன் பெயரை வெளியிடவேண்டாம் என ஒரு கோரிக்கை விடுத்துள்ளார் – ஏனெனில், அவருக்கு இப்போது இருக்கும் பிரச்சினைகளும் உளைச்சல்களுமே அதிகம், பாவம்.  (ஏன் இத்தகவல்களைக் குறிப்பிடுகிறேன் என்றால், இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள், வன்முறைவாதத்துக்கெதிராக அமைப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் – என்பதைச் சுட்டத்தான்)
… இத்தனைக்கும் அவர் அனுப்பிய படம் கூக்ல் பிரதிமைத் தேடலில் கிடைக்கிறதுதான்! (நண்பர், இந்தப் படத்தில் குறிப்பிட்டிருக்கும் ‘சங்கை ரிதுவான்’ அல்லர்)
-0-0-0-0-0-0-0-
நான் இந்த விஷயத்தைப் பற்றிக் கேள்விப்படவில்லை என்பதாலும், ஒருகால் இப்படம் ஒரு அடோபிஃபோட்டோஷாப் படவெட்டிஒட்டலாக இருக்கலாம், பொய்ச் செய்தியாக இருக்கலாம் எனும் என் சந்தேகத்தின் காரணத்தாலும், மேலதிகமாக இதனைப் பற்றிப் படிக்க முயன்றேன். ஆக…
இச்செய்தியைப் பற்றி சில தகவல்களை பிபிஸி வெளியிட்டிருக்கிறது: ஐசிஸ் டி – ஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள் கைது (5 ஆகஸ்ட் 2014) – இப்பக்கத்தில் இருக்கும் படத்தில் ‘சங்கை ரிதுவான்’  பெயர் இல்லை – ஆனால் அதேபடம்தான்.
பிபிஸி-யும் சில சமயங்களில் பொய்ச் செய்திகளை வெளியிடும், திரிக்கும் ஊடக நிறுவனம்தான். ஆகவே, என் நண்பரை மறுபடியும் கேட்டேன் – தகவல் சரிதானா என்று. அவர் ஆமென்று சொன்னார். ஆகவே.
“…ஜுலை 29ஆம் தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
“…இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, ஈராக்கில் பணியாற்றி வந்த இந்தியச் செவிலியர்கள் ஐசிஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தாமல் விடுவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில்தான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் முகத்தைப் பார்த்தால் ‘துன்புறுத்தாமல் விடுவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில்தான்’ இப்படி வெற்றிப் பெருமிதத்துடன் உட்கார்ந்தமாதிரி தெரியவில்லை. அறியாப் பிள்ளைகள், யாரோ எங்கோ எவருடைய தலையையோ சீவினால், நாமும் டீஷர்ட் போட்டுக்கொண்டு, அதனை ஏகோபித்து ஆதரிக்கலாம் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது அப்படித்தானா?
டுப்பாக்கி-வீச்சரிவாள்- தலைநறுக்கல் ப்ரேன்ட் ஜிஹாத் மோகத்தில் கிறங்கி முட்டாள்தனமாகக் காரியங்களைப் பெருமிதத்துடன் செய்துவிட்டு, பின்னர் மாட்டிக்கொண்டதால் – விட்டால் போதுமென்று ஏதோவொரு பொய்யைச் சொல்லி, தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்றும் இப்படிச் சொல்லியிருக்கலாம், பாவம். ஆனால் அது அப்படித்தானா?
“…இது தொடர்பில் பேசிய, தொண்டி ஜமாத்தின் செயலாளரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான சாதிக் பாட்சா, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளைப் போலச் சித்தரிப்பது வருத்தம் தருவதாகத் கூறினார்.
அய்யா சாதிக் பாட்சா, இப்படி ஒரு டீஷர்ட் போட்டுக்கொண்டு, வெற்றிப் பெருமித போஸ் கொடுத்தால் – எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனத்தானே முடியும். இப்படி இவர்கள் காரியம் செய்தால், அதற்கு அர்ஜுன் சம்பத்களையா பிடிப்பார்கள்? இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றா சித்திரிக்கிறார்கள்? என்ன சொல்லவருகிறீர்கள்? நம் அப்துல் கலாம் அவர்களையோ, நடிகர் நாஸர் அவர்களையோ தீவிரவாதிகள் என்று யாராவது சொல்லத்தான் கூடுமா? நாகூர் ஹனீஃபா அவர்களை, யாராவது, நாக்கின்மீது பல்லைப்போட்டு அப்படிச் சொன்னார்களா?
-0-0-0-0-0-0-0-
இந்த பிபிஸி பதிவில், எனக்கு மிகவும் அலுப்பையும், அவ நம்பிக்கையையும் அளித்தது, ஜவாஹிருல்லா அவர்களின் தரமற்ற  சப்பைக்கட்டல் தான்:
“… இது குறித்துப் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா, இஸ்லாமிய இளைஞர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்கைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார்.
அய்யா ஜவாஹிருல்லா, அப்போது கமுக்கமாக இப்படி இஸ்லாமிக் ஸ்டேட் ஆதரவாளனாக இருக்கலாம் என்கிறீர்களா? புகைப்படம் எடுத்து பெருமிதப் படுங்கள், ஆனால் சமூக வலைத்தளங்களில் போடாதீர்கள் என்கிறீர்களா? அவர்கள் செய்ததில், குற்றமோ முட்டாள்தனமோ இல்லவேயில்லை என்கிறீர்களா? அறியாமையால் அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்றால் பரவாயில்லை – ஆனால் கயமையினால் அவர்கள் அப்படி அவர்களோ, அவர்களுடைய வழிதோன்றிகளோ செய்யவில்லை/செய்யமாட்டார்கள் என்பது உங்கள் எண்ணமா?
ஐஎஸ் கும்பலில் அட்டூழியங்கள் பற்றி உங்கள் எண்ணம்தான் என்ன? அப்பாவிகளை அழித்தொழிக்கும் வன்முறை  பற்றி உங்கள் கருத்தென்ன? ஐஎஸ் அல்கைதா போன்ற உதிரி கும்பல்களினால் இந்த இளைஞர்கள் வசீகரிக்கப்பட்டு ஆட்கொள்ளப் படாமைக்கு, நீங்கள் ஏதாவது மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
க்றிஸ்தவர்கள், யேஸீதிகளையே விடுங்கள் – ஷியா உயிர்கள் இஸ்லாமிய உயிர்கள் இல்லையா?  இவர்கள் அனைவரையும் ஒழிக்க நினைக்கும் இஸ்லாமிக்ஸ்டேட் கும்பலை விளம்பரப்படுத்த முயன்ற இவ்விளைஞர்களை ஏன் கண்டிக்கக் கூடச் செய்யவில்லை?
பார்க்கப்போனால் ஸுன்னத் ஜமாஅத்திற்கே பேரிழுக்கையும் மாளா கெட்ட பெயரையும் தொடர்ந்து உருவாக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் பற்றி, உங்கள் அபிப்ராயம் என்ன?
ஒரு மக்கள் திரளின் தலைவனுக்கு ஆன்ம பலம் வேண்டும். தம் மக்களை வழி நடத்த, மேலெழுப்ப, பிறழ்வுகளைச் சரிசெய்ய. தொடர்ந்து முன்னேற ஆவன செய்யவேண்டும்.இதற்கு மாறாக, திராவிடக் கட்சிகளைப் போல – வெறுமனே தட்டிக்கொடுத்து, ‘சமூக வலைதளங்களை பார்த்து உபயோகியுங்கடா, பசங்களா!’ என்பது வழிகாட்டுதலா?  ‘என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், ஆனால் மாட்டிக் கொள்ளாதீர்கள்!’ என்று தொக்கிநிற்க, தொனிக்கச் செயல்படுவது சரியா?
அல்லது நடைமுறை மதவாத அரசியல் என்பது இப்படித்தானா?
-0-0-0-0-0-0-0-
கில்யஸ் அம்மணியுடன் பேசும்போது, ஜவாஹிருல்லா அவர்களைப் பற்றி பேசவேண்டும், அவருடன் கில்யஸ் ஒரு நேர்முகம் காணவேண்டும் எனப் பரிந்துரைக்கலாம் என நினைத்திருந்தேன்; ஜவாஹிருல்லா அவர்கள் ஒரு ஆசிரியர் என்ற காரணத்தாலும், அவர் கட்சியில் இருக்கும் ‘மனித நேயம்’ எனும் சொற்றொடரினாலும் உந்தப் பட்டிருந்தேன். அவர்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நல்லவேளை, ஒன்றும் சொல்லவில்லை.
… … சொல்லப்போனால், எனக்கு, ஜவாஹிருல்லா அவர்கள் இப்படிப் பேசியது, ஒரு கணநேரப் பிறழ்வாக இருந்திருக்கவேண்டும் என்று கருதத்தான் ஆவல்…  othisaivu.wordpress.com

கருத்துகள் இல்லை: