வியாழன், 7 மே, 2015

சமசீர்கல்வியை வேண்டா வெறுப்பாக அதிமுக!

சமச்சீர்க்கல்வியை தமிழக அரசு முறையாக அமல்படுத்தத் தவறியதால், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீட்டின் படி, 8,000 தனியார் பள்ளிகள் இருந்தன. இதில், 4,800 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், 3,500 மெட்ரிக், 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 159 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அடங்கும்.தற்போது பெரும்பாலான மெட்ரிக் மற்றும் பிரைமரி பள்ளிகள், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இதனால், 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரும் அளவில் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதேநேரம், 'தனியார் மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு செல்ல, என்.ஓ.சி., என்ற தடையில்லா சான்று தரக்கூடாது' என, பெற்றோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் கல்வியாளர்களின் பெரும் போராட்டங்களுக்குப் பின், சமச்சீர்க்கல்வி அமலானது. ஆனால், சமச்சீர்க்கல்விக்கு துவக்கத்திலேயே அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேண்டா வெறுப்பாக இந்தத் திட்டம் பெயரளவில் அமலாகிறதா என்ற சந்தேகம் கல்வியாளர்களிடம் எழுந்துள்ளது.   எங்கே நம் அமெரிக்க வேலைக்கு குப்பன் சுப்பன்  போட்டியாக வந்துவிடுவானோ என்ற  ஆரியர்களின் பேராசை! .


இதுகுறித்து, குழந்தை உரிமைகள் சட்டவள ஆதார மைய அமைப்பாளர், சண்முக வேலாயுதம் கூறியதாவது:சமச்சீர்க் கல்வியை முழுமையாக புரிந்து கொண்டு அரசு அமல்படுத்தவில்லை. தேவையான தொழில்நுட்பங்களையும் அரசு மேற்கொள்ளவில்லை.யரளவில் அமல்படுத்துவதால், மக்களுக்கு நம்பிக்கையும், திருப்தியும் இல்லாமல் போகிறது. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, கற்பித்தல் முறை மாற்றம் ஆகியவற்றில் அரசு அக்கறை செலுத்தவில்லை.மெட்ரிக் பள்ளிகளைப் பொறுத்தவரை, தற்போது அரசின் கட்டண நிர்ணயம் பெரும் பிரச்னையாக உள்ளதும், சமச்சீர்க் கல்வியை முறையாக அமல்படுத்தாததும், அவர்களை சி.பி.எஸ்.இ., க்கு இழுத்துச் செல்கிறது. இந்த நிலையை மாற்ற அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: சமச்சீர்க்கல்வியை அரசு வேண்டா வெறுப்பாக, பெயரளவில் செயல்படுத்துகிறது. சமச்சீர்க்கல்வி என்ற பெயரில் அமலானாலும், உண்மையான பாகுபாடற்ற, தரம் உயர்ந்த பாடத்திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை.வெறும் பொதுத் தேர்வும், பொதுப் பாடத்திட்டமும் தான் அமலாகியுள்ளது. இன்னும் பல இயக்குனரகங்கள் செயல்படுகின்றன. இந்தப் பாடத்திட்டத்தில் குறை இருந்தால், தரம் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு அலட்சியமாக உள்ளது.அரசுப் பள்ளிகளில், தரமான ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்களுக்கு உயர் அகாரிகள், அரசியல்வாதிகள் தரப்பில் குறுக்கீடுகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: