வெள்ளி, 23 ஜனவரி, 2015

ரிசர்வ் வங்கியை நாடும் இலங்கை: கறுப்பு பணத்தை மீட்க புதிய அரசு திட்டம்

கொழும்பு: இலங்கையில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான ஆட்சியின் போது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணம் குறித்த தகவல்களை பெறவும், பதுக்கப்பட்ட பணத்தை மீட்கவும், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலக வங்கியின் உதவியை நாட, அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான, புதிய அரசு திட்டமிட்டு உள்ளது.இதுகுறித்து, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான, ரஜித் சேனரத்னே கூறியதாவது: முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவின் ஆட்சிக் காலத் தில், பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், முறைகேடான வகையில், சொத்துகளை குவித்து உள்ளனர். இவற்றில் பல, வெளிநாடுகளில் குவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில், கோடிக்கணக்கான பணம் பதுக்கப்பட்டு உள்ளது. விரைவில், கறுப்பு பணம் மீட்கப்பட்டு, பதுக்கல்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் உதவியை நாடவுள்ளோம். அந்த அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள், இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி, கறுப்பு பணத்தை மீட்டெடுக்க உதவுவர் என, நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். 
ஹிஹிஹி எங்க பணத்தையே இன்சுரன்ஸ் சிட்பண்ட் என்று போட்டதயே திருப்பி கொடுக்க மாட்டார்கள் இதுல நீங்கவேறயா ,,,
அதிரடி நடவடிக்கைகள்: இலங்கையில், சிறிசேன தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலையில், பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.


* தமிழர்கள் அதிகம் வசிக் கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், வெளி நபர்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

* தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான, 13வது சட்டத்திருத்தம் அமல் படுத்தப்படும் என, புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

* முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, முன்னாள் ராணுவ தளபதி பொன் சேகாவுக்கு, மீண்டும் அனைத்து சலுகைகள், பதக்கங்கள் வழங்கப்படும் என, அதிபர் சிறிசேன அறிவித்து உள்ளார்.

* ராஜபக் ஷே மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் வீடுகளில், அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது dinamalar.com

கருத்துகள் இல்லை: