வியாழன், 22 ஜனவரி, 2015

வளர்ச்சி திட்டங்களுக்கு கோவில் நிதிகளை பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு கி.வீரமணி யோசனை

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும், ‘‘பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது’’ போன்று, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது. மக்களின் சுகாதார திட்டத்துக்கு செலவு செய்வதில் 20 சதவீதம் வெட்டு. உயர் கல்வி துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் வெட்டு. பெட்ரோல்-டீசல் உலகச்சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களை சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது.


உர விலையும் கூடவே விவசாயிகளின் தலையில் விழுகிறது. நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், குருவாயூரப்பன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக கடன் பாத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு திருப்பிக் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: