புதன், 7 மே, 2014

நைஜீரியாவில் மேலும் 8 பெண்களைக் கடத்திச் சென்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்

நைஜீரியாவில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்பு போராடி வருகின்றது. மேற்கத்திய கல்வி தடை என்ற பொருள்படும் அந்த இயக்கத்தின் பெயருக்கு ஏற்ப அங்குள்ள பள்ளிகளைத் தாக்கி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருகின்றனர். கடந்த மாதம் 15-ம் தேதியன்று போர்னோ மாகாணத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் இருந்து 276 மாணவிகளை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இவர்களில் 53 மாணவிகள் தப்பிவிட்டனர். மீதமுள்ள 223 பேரை செக்ஸ் அடிமைகளாக ஏலத்தில் விற்கப்போவதாக இந்த இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் செகாவு பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.
இந்தப் பெண்களைக் கண்டுபிடிக்க இயலாத ராணுவத்தினரின் இயலாமை நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள அபுஜா, லாகோஸ் நகரங்களில் எதிர்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது. அபுஜாவில் நாளை உலக பொருளாதார கருத்தரங்கம் நடைபெற உள்ள நிலையில் இன்றும் அங்கு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.


இதனிடையில் நேற்று இரவு தங்களின் பிடியில் இருந்த வடகிழக்குப் பகுதியில் வராபே என்ற கிராமத்தில் ஆயுதமேந்திய போகோஹரம் இயக்கத்தினர் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் மேலும் எட்டு பெண்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.12லிருந்து 15 வயதுக்குட்பட்ட இந்தப் பெண்களை ராணுவத்தின் நிறம் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்தவர்கள் கடத்திசென்றதாக நேரில் பார்த்த கிராமவாசி லாசரஸ் மூஸா குறிப்பிட்டார்.

துப்பாக்கிப் பிரயோகமும் நடத்திய இந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கால்நடைகள், உணவுத்தானியங்கள் ஆகியவற்றையும் தங்கள் லாரிகளில் ஏற்றிச் சென்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது maalaimalar.com/

கருத்துகள் இல்லை: