திங்கள், 5 மே, 2014

200 பள்ளி மாணவிகளை கடத்தி 12 டாலர் பணத்திற்கு விற்ற தீவிரவாத கும்பல்!

நைஜீரியாவில் கடத்தபட்ட 200 பள்ளி மாணவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரவியுள்ள அதிர்ச்சி தகவலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போகோகரம் தீவிரவாத இயக்கத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் வடகிழக்கு நைஜீரியாவில் குவும்புரா பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் இருந்து 230 மாணவிகளை அதிரடியாக கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட மாணவிகளை தேடும் பணியில் நைஜீரிய போலீஸார் ஈடுபட்டிருந்தும் இரண்டு வாரங்களாக அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட அப்பாவி மாணவிகள் ஒவ்வொருவரையும் 12 டாலர் பணத்திற்கு விற்றுவிட்டனர். மேலும், வெளிநாடுகளை சேர்ந்த சிலர், தீவிரவாதிகளிடம் பணம் கொடுத்து பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. ilankainet.com

இதில் கடும் அதிர்ச்சி அடைந்த காணாமல் போன மாணவிகளின் பெற்றோர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கியுள்ளனர். இதனால், நைஜீர்ய நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: