வியாழன், 8 மே, 2014

ஜெ.,வுடன் ரகசிய உடன்பாடு இல்லையாமே? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Praveen Kumar விளக்கம்

திருச்சி: “முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எந்தவித ரகசிய உடன்பாடும் இல்லை,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள, எட்டு மாவட்ட அதிகாரிகள், அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.  தேர்தல் கமிஷனரின் விளக்கம் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போன்று உள்ளது.


பயிற்சிக்கு பின், நிருபர்களிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:தென் சென்னை, சேலம், நாமக்கல்லில் புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில், சேலம், நாமக்கல்லில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அங்கு மட்டும், மீண்டும் மறு ஓட்டுப்பதிவு நாளை (இன்று) நடக்கிறது. வழக்கு பதிவு


தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், இன்று மறு ஓட்டுப்பதிவு நடக்கும், சேலம், நாமக்கல்லில், 144 தடை உத்தரவு போடவில்லை. 144 தடை உத்தரவு பிறப்பித்த, இரண்டு நாள் இரவுகளில் மட்டும், 55 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருச்சியில், 4.6 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்த, ஐ.ஜே.கே., பிரமுகர் அரிசி ஆலை, 'சீல்' வைக்கப்பட்டது. விசாரணையில், மொத்தம், 7 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.ஓட்டு எண்ணும் மையங்களில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100 மீட்டர் எல்லைக்கோட்டை தாண்டி, ஓட்டு எண்ணும் மையத்துக்குள் வர தேர்தல் கமிஷன் வழங்கிய அடையாள அட்டை வேண்டும். மொபைல்போன் எடுத்து வரக்கூடாது. பத்திரிகையாளர்கள், 'மீடியா' அறையில் மொபைல்போன்களை வைத்துவிட்டு தான், ஓட்டு எண்ணும் அறைக்கு வரவேண்டும்.ஒவ்வொரு மேஜையிலும், எண்ணப்பட்ட ஓட்டுகள் விவரம், 'நோட்டீஸ்' போர்டில் எழுதப்படும். பின் வேட்பாளர், ஏஜன்ட்டுகளுக்கு ஒரு பிரதி வழங்கப்படும். அவர்கள், சரியா என பார்த்த பின், அடுத்த, ரவுண்ட் எண்ணப்படும். இதனால், ஓட்டு எண்ணிக்கை தாமதமாகும். புரிந்து கொண்டார்


அதே வேளையில், வேகமாக ஓட்டுகளை எண்ணி, ரிசல்ட் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. செப்., அக்., மாதத்தில், அடுத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதுகுறித்து, மத்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.'ஜெயலலிதாவுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் இடையே, ஏதே னும் ரகசிய உடன்பாடு ஏதும் உள்ளதா என்ற, சந்தேகம் எழுகிறது' என, நிருபர்கள் கேட்ட போது, “ரகசிய உடன்பாடு ஏதும் இல்லை. முதலில் தேர்தல் கமிஷனை புரிந்துகொள்ளாத முதல் வர் ஜெயலலிதா, பின் நாளில் புரிந்துகொண்டார்,' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: