திங்கள், 14 ஏப்ரல், 2014

Advani: தேர்தலுக்கு பிறகு கட்சி கொடுக்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்பேன் ! எதிர்கட்சி தலைவர் ?

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும்போது, கட்சி எந்தப் பொறுப்பை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்'' என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.
குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அத்வானி, ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் பிரசாரத்தின்போது பேசியதாவது:
மக்களிடம் இதுவரை இல்லாத வகையில் எழுச்சி காணப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் ஏற்கெனவே தீர்மானித்து விட்டனர் என்பதை உணர முடிகிறது.
நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அனேகமாக அடுத்த எதிர்கட்சி தலைவர் நீங்கதான் பெருசு !


தேர்தலுக்கு பிறகு கட்சி எனக்கு எத்தகைய பொறுப்பைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்.
பாஜகவின் வெற்றியில் தென் மாநிலங்களின் பங்கும் பெருமளவு இருக்கும். கேரளத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது அங்கு குறிப்பிடத்தக்க இடங்களில் பாஜக அமோக வெற்றி பெறும் என்பதை அறிய முடிந்தது.
எனது மகள் பிரதிபா இங்கு (காந்திநகர் தொகுதி) என்னுடன் பிரசாரத்தில் ஈடுபடாத நிலையில் மகன் ஜெயந்த் உங்களோடு தொடர்பில் இருப்பார் என்று அத்வானி பேசினார்.
இந்தப் பிரசார நிகழ்ச்சியில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆனந்திபென் படேல், எம்.பி. ஹரேன் பதக், அத்வானியின் மகன் ஜெயந்த் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: