புதன், 16 ஏப்ரல், 2014

நீலகிரியில் ஆ. ராசா தனிகாட்டு ராஜாவாக வலம் வருகிறார் ! எதிரணியினரே ராசாவின் வெற்றியை உறுதி செய்கின்றனர்


பிரச்சாரத்தில் ஆ.ராசா| கோப்புப் படம்.
பிரச்சாரத்தில் ஆ.ராசா| கோப்புப் படம்.
நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது அதிமுக-வுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், அனைத்துக் கட்சியினரையும் வளைத்துப் போட்டு களத்தை தங்களுக்கு சாதகமாக்கி வருகிறது ஆ.ராசா-வின் ஆதரவு வட்டம்.
இதுகுறித்து ‘தி இந்து'-விடம் மேட்டுப்பாளையம் பகுதி அதிமுக- வினர் கூறியதாவது: நீலகிரி மக்கள வைத் தொகுதியில் குன்னூர், ஊட்டி, கூடலூர், மேட்டுப் பாளை யம், பவானி சாகர், அவிநாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வருகின் றன.
இதில் மலைப்பகுதிகளான மூன்று தொகுதிகளில் ஆ.ராசா வுக்கும் மேட்டுப் பாளையம், அவிநாசி தொகுதிகள் அதிமுக-வுக்கும் சாதகமாக இருந்தது. 
குறிப்பாக மணல் ஆறுமுகசாமி பகிரங்கமாக அதிமுக-வை ஆதரித் ததால் மேட்டுப்பாளையத்தில் கணிசமாக உள்ள அவரது ஒக்கலி கர் சமூகம் அதிமுக பக்கம் திரும்பி யது. ஆறுமுகசாமியின் வலதுகர மான ஒக்கலிகர் மகாஜன சங்க இளைஞர் அணி செயலாளர் ஜோதிமணி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் சேர்ந்து இந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டினார்.
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டா ரத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க கிளை அமைப்புகளை அதிமுக-வுக்கு ஆதரவாக வேலை செய்யும் படியும், ஆறுமுகசாமியின் அறக்கட்டளை யாருக் கெல்லாம் கல்வி உதவித் தொகை வழங்கியதோ அவர்களி டம் எல்லாம் ஓட்டுச் சேகரிப்பு இயக்கம் நடத்தும்படி கட்டளை யிட்டதாக செய்தி பரவியதும் தொண்டர்கள் கூடுதல் உற்சாகம் ஆனார்கள்.
ஆனால், கடந்த சில நாட்க ளாக மேட்டுப்பாளையம் பகுதியில் தேர்தல் அலுவலகம் திறக்கக்கூட பணம் இல்லாமல் அதிமுக-வினர் அவதிப்பட்டுக் கொண்டி ருக்கிறார் கள். ‘கட்சியிலிருந்து பணம் வராது; உங்கள் சொந்தச் செலவிலேயே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டதால் மேட்டுப்பாளை யத்தில் தேர்தல் அலுவலகத்தை மட்டும் திறந்து வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர் அதிமுக முக்கிய நிர்வாகிகள்.

ராசாவின் அலுவலகத்தை பெரம்பலூர் திமுக-வினரும் ராசாவின் உறவினர்களும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
பாஜக வேட்பாளர் களத்தில் இல்லாததால் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் முக்கியப் பொறுப் பாளர்களை எல்லாம் உரிய முறையில் ‘கவனித்து’ முடக்கி வைத்துவிட்டது ராசா முகாம். கட்சிக்காரர்களிடம் மட்டுமல்லாது சாதாரண மக்களிடமும் சகஜமாகச் சென்று பேசுவதற்கு குழுக்களை நியமித்திருக்கிறார்கள்.
மொத்ததில், ஆ.ராசாவை ஜெயிக்க வைக்க திமுக-வினர் பம்பரமாய் சுழல்கிறார்கள். இன்னொரு பக்கம் அதிமுக உள்ளிட்ட எதிரணி முகாமைச் சேர்ந்தவர்கள் மெத்தனமாக வேலை செய்து ஆ.ராசாவின் வெற்றிக்கு வழிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: