வே.மதிமாறன் : சமயக் குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசைத் தவிர மற்ற மூவரும் பார்ப்பனர்களே.
இதற்கு நிகழ்கால சாட்சி, சைவ சமய ஈடுபாடு
கொண்ட பார்ப்பனர்கள், (அய்யர்கள்) இன்றும் திருநாவுக்கரசு பெயரை வைத்துக்
கொள்ள மாட்டார்கள். ஞானசம்பந்தன், சுந்தரம், மாணிக்கவாசகம் போன்ற
பெயர்களையே அவர்களிடம் பார்க்க முடியும்.
அவ்வளவு ஏன்? சடகோபன், வரதராஜன்,
ஜானகிராமன், சீதாராமன், கோபாலன், ரங்கராஜன், ரங்கநாதன், வெங்கட்ராமன் போன்ற
வைணவ (அய்யங்கார்) பெயர்களையும் சைவ-வைணவ (அய்யர்-அய்யங்கார்) ஒற்றுமையை
வலியுறுத்தி வைக்கப்பட்ட சிவராமன், சங்கரராமன் போன்ற பெயர்களையும் வைத்துக்
கொள்கிற ‘அய்யர்கள்’; நாவுக்கரசு, திருநாவுக்கரசு என்கிற சைவ சமய பெயரை
வைப்பதில்லை.
பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
இவர்களை விட, மிக அதிகமாக முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
திருநாவுக்கரசு பெயரை அதிகமாக வைத்திருக்கிறார்கள்.
இது சைவ சமயத்திற்குள் நடக்கிற உள்குத்து.
இந்த உள் குத்தில் பார்ப்பனரல்லாத இந்த ஆதிக்க ஜாதிகள் ஞானசம்பந்தன்,
சுந்தரம், மாணிக்கவாசகம் இந்த பெயர்களையும் பிரியத்தோடு வைத்துக்
கொள்வார்கள்.
‘சைவ சமயமே நாங்கள்தான்’ என்று ‘பிள்ளை –
முதலி’ எவ்வளவு முக்கினாலும், அவர்கள் பார்ப்பனர்களுக்கு கீழான
‘சூத்திரர்கள்’ தான் என்பதற்கு சாட்சி, அப்பர் அடிகள் என்கிற ஒரு பார்ப்பன
அடிமையான திருநாவுக்கரசே.
அதனால்தான் ‘சிறுவன்’ திருஞானசம்பந்தனுக்கு
ஒரே பாட்டில் கதவை மூடிய சிவன், பாட்டா பாடிய பிறகுதான்
திருநாவுக்கரசுக்கு ‘போதும் நிறுத்தியா’ என்கிற பாணியில் காலதாமதமாக கதவை
திறந்தான். mathimaran.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக