வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட ஜெயந்தி நடராஜன் இந்த நாட்டை விற்றார் ! மோடி


ஈரோடு : மஞ்சளுக்கு பெயர்போன ஈரோடு மக்களுக்கு இந்த நாடு நன்றி செய்ய கடமைப்பட்டுள்ளது என்றும், பா.ஜ., ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஈரோடு ஒரு உற்பத்தி மையமாக மாற்றப்படும் என்றும், இங்குள்ள மக்களின் பொருளாதாரம் மேம்பட்ட நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது இன்றைய பிரசாரத்தில குறிப்பிட்டார்.  ..மோடி சொல்லிட்டாருல்ல..இன்னிக்கு அந்தம்மா எல்லா தொலைக் காட்சியிலும் வந்து காட்டுக் கூச்சல் கத்தும்..... அந்தம்மா ஏதோ தவறு செய்யப்போகதான் பதவியிலிருந்து தூக்கி இருக்காங்க... இப்போ, தேர்தல் பரபரப்பிலும் காணவில்லை...இவிங்க பழைய முதலமைச்சர் பக்தவத்சலம் பொண்ணுங்க .

தமிழகத்தில் நான் கடந்த 2 நாட்களில் பிரசாரம் செய்கையில் இங்குள்ள மக்களின் பாசத்தை நான் பார்க்க முடிந்தது . இதற்கு நான் மகிழ்கிறேன். இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். இந்த தேர்தலில் மக்களாகிய நீங்களே தான் போட்டியிடுகின்றனர்.தமிழகத்தில் மின்சாரம் இல்லை என்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது, குஜராத் மக்கள் , குழந்தைகள் தமிழகத்திற்கு வந்தால் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண், இந்த பெண்மணி, மின்சாரம், கட்டமைப்புக்கு முட்டுக்கட்டை போடுபவராக இருக்கிறார். இந்த பெண் , காங்கிரசை சேர்ந்தவர். அந்த பெண்தான் காரணம். தமிழகத்தின் தவறு அல்ல. ராஜ்யசபா மூலம் பார்லி.,க்கு வந்தவர் (ஜெயந்திநடராஜன்) . கிரீன் கலரில் உள்ள பணம் காந்தியின் படத்தை போட்டுள்ளது. இவர்கள் இந்தியாவின் பச்சையான இயற்கை வளங்களை விற்று, காந்தியின் உருவம் கொண்ட நோட்டை பெறுகின்றனர். பசுமையை விற்றது குறித்து தகவல் கிடைத்ததும், அந்த அமைச்சரை மாற்றினர். நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டார்கள் இவர்கள்.

ஈரோட்டு மக்கள் உற்பத்தி செய்யும் மஞ்சள், குங்குமம், ஆயுர்வேத பொருட்கள். அமெரிக்காவில் அழகு சாதன பொருட்களுக்கு பயன்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் ஈரோட்டின் பொருளாதாரத்தை மாற்ற முடியும். இங்கு விளையும் மருத்துவ பொருட்கள் கொண்டு முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடும். ஈரோட்டில் விளையும் பஞ்சு கொண்டு பெரும் மாற்றம் கொண்டு வரலாம். ஏழ்மையை போக்கிடும். பா.ஜ., வெற்றி பெற்றால் ஈரோடு இந்தியாவின் முக்கிய உற்பத்தி நகரில் ஒன்றாக மாற்றுவோம். இவ்வாறு மோடி பேசினார்

கங்கை காவிரி இணைக்கப்படும்; ராமநாதபுரத்தில் மோடி பேசுகையில் எதுவும் தெரியாமல் சிலர் அரசியல் கணக்கு போட்டு தங்கள் பக்கம் வெற்றி இருப்பதாக பேசி வருகின்றனர். இந்த கணக்கு எல்லாம் பொய்த்துவிடும். தேர்தலில் நிற்கவே ஒருவர் அச்சப்பபட்டுள்ளார், ரீகவுன்ட்டிங் அமைச்சர் (சிதம்பரம்) . சிறுபான்மை மக்களுக்கு காங்., எதுவும் செய்யவில்லை. சிவகங்கை தொகுதியில் காங்கிரசின் கட்சி சின்னம் பொறித்த கடிகாரம் வழங்கப்படுகிறது. இது குறித்து தேர்தல் கமிஷனர் விசாரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தமிழக மக்கள் நலனில் யாரும் அக்கறை காட்டுவதில்லை. பட்டாசு தொழிற்சாலை துவக்குவது தொடர்பாக வெளிநாட்டு இறக்குமதியை நிறுத்த வேண்டும். அ.தி.மு.க., - தி.மு.க., இந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த கட்சியிடம் இருந்து தமிழகம் விடுவிக்கப்பட வேண்டும்.

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் கங்கை காவிரி இணைத்து தமிழகத்தின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.ராமேஸ்வரம் சுற்றுலாத் தளமாக்கப்படும். குஜராத்தில் பாகிஸ்தான் படையினரால் மீனவர்கள் , தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இலங்கை படையினரால் தாக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் மத்தியில் வலுவான ஆட்சி இல்லாமல் போனதே காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் காக்கப்படுவர். இவ்வாறு மோடி பேசினார்.


மக்களுக்கு விடிவுகாலம் கிடையாது; குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசுகையில், இந்த மாவட்டத்தை பொறுத்தவரை சுற்றுலா முக்கிய இடம் பிடிக்கிறது. சுற்றுலாவில் மிக குறைந்த முதலீடே போதும். இங்கு சுற்றுலா பயணிகள் வரும்போது, ஆட்டோ தொழிலாளர்கள், பூ விற்பவர்கள், கைவினை கலைஞர்கள் என பல தரப்பினரும் முன்னேற முடியும். ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சுற்றுலாதுறையை மேம்படுத்தினால், கன்னியாகுமரியில் யாரும் பிழைப்பு தேடி வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., இரண்டு கட்சியில் இருந்து விடுபடும்வரை இம்மாநில மக்களுக்கு விடிவுகாலம் கிடையாது. ஆட்சி மாறும் போது அவர்கள் யார் , யாரை அழிக்கலாம் என கவலை கொள்கின்றனர். மக்களை பற்றி கவலை கொள்வதில்லை. இவர்களுக்கு மக்களை நினைக்க நேரமேது ? தமிழகத்தில் மாறுதல் தேவைப்படுகிறது. வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, மின்வசதி கிடைக்க வேண்டுமெனில் மாற்றம் தேவைப்படுகிறது. பா.ஜ., கூட்டணியில கேப்டன் விஜயகாந்த், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மாபெரும் கூட்டணி உருவாகியுள்ளது. வாய்ப்பு தாருங்கள் என்றார் dinamalar.com

கருத்துகள் இல்லை: