ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

ஹெர்பலைஃப் நிறுவனம் மீது குற்றவியல் விசாரணை தொடக்கம்


The FBI is probing Herbalife Ltd, the nutrition and weight loss company that hedge fund manager William Ackman has called a pyramid scheme .உடல் எடை குறைப்பு மற்றும் ஊட்டச்சத்து மருந்து தயாரிப்பு நிறுவனமான ஹெர்பலைஃப் மீது குற்றவியல் விசாரணையை அமெரிக்க அரசு தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சேர்ந்த ஹெர்பலைஃப் நிறுவனம் தனது விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் உணவுக் கட்டுப்பாட்டுக்கான (டயட்) ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. இது சங்கிலித்தொடர் வணிக முறையைப் பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை அந்த நிறுவனம் கடுமையாக மறுத்துள்ளது. இதனிடையே, ஹெர்பலைஃப் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில மாதங்களில் வெகுவாகச் சரிந்தன.
இந்தச் சூழ்நிலையில், அந்த நிறுவனத்திடம் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பங்குப் பரிவர்த்தனை ஆணையமும் விசாரணை நடத்தி வருவதாக ஹெர்பலைஃப் கூறியுள்ளது dinamani.com

கருத்துகள் இல்லை: