தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வழி வழக்கை விசாரித்த
மாஸ்திரேட் தட்சிணாமூர்த்தி மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு திடீரென ரத்து
செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் 1993-94 ஆண்டுக்குரிய
வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதுபோல அவர்கள் இருவரும்
பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைஸஸ் நிறுவனம் 1991-92, 1992-93,
1993-94 ஆகிய நிதியாண்டுக்களுக்கான வருமான வரி கணக்கையும் தாக்கல்
செய்யவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை எழும்பூர் தலைமை பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட்
தட்சிணாமூர்த்தி விசாரித்து வந்தார். கடந்த 10ம் தேதி இந்த வழக்கை
விசாரித்த தட்சிணாமூர்த்தி வரும் 28ந் தேதி ஜெயலலிதா, சசிகலா
நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தட்சிணாமூர்த்தியை இடம் மாற்றம் செய்து நேற்று சென்னை
உயர்நீதிமன்ற பதிவாளர் கலையரசன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த
இடத்துக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மாலதி நியமிக்கப்படுவதாகவும் அவர் தமது
உத்தரவில் தெரிவித்திருந்தார்.
ஆனால் திடீரென இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றம் புதிய
அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில் தட்சிணாமூர்த்தி இடத்துக்கு
மாற்றப்பட்ட 9வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி (சிபிஐ நீதிமன்றம்) எஸ்.மாலதி
முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற (தடா வழக்குகளுக்கான சிறப்பு
நீதிமன்றம்) நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக