செவ்வாய், 15 ஏப்ரல், 2014

மோடி : குற்றம் புரிந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை !

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், குற்றம்புரிந்த எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்தபடி 15 மாநிலங்களில் உள்ள 100 இடங்களில் 3டி ஹாலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் மோடி திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அரசியல், குற்றவாளிகள் மயமாவது வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு. காங்கிரஸ் தலைவர்கள்தான் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக குற்றவாளிகளை முதலில் பயன்படுத்த தொடங்கினர்.
பிறகு அந்தக் குற்றவாளிகளே சக்திவாய்ந்த அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். அதுபோன்ற குற்றவாளிகளின் பிடியில் இருந்து அரசியல் விடுவிக்கப்பட வேண்டும். மோடிமஸ்தான் ரொம்பதான் சோக்கடிக்றாங்க. இத்னீ வருஷமாச்சு இன்னும் இவ்ரு  செயிலுக்கு உள்ளார போவல . இனி இவரு வந்து அதாங் ஜெயிச்சு வந்து அல்லா குத்தவாளிங்களையும் செயில்ல போடுவாரம்ல . 

அரசியலை குற்றவாளிகளின் பிடியில் இருந்து விடுவிக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். குற்றம்புரிந்த அனைத்து எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிறப்பு நீதிமன்றங்களை ஓராண்டில் அமைப்பேன். அதன்பிறகு அவர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்களைத் தொடர்ந்து, ஊராட்சி அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதுபோன்று 5 ஆண்டுகளில் நடவடிக்கைகளை எடுத்து, அரசியலை குற்றவாளிகளின் பிடியில் இருந்து நான் விடுவிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். இந்த நடவடிக்கையின்போது எந்தவித பாகுபாடும் நான் காட்ட மாட்டேன்.
பாஜகவினராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்' என்றார் மோடி.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மண்கர் என்னுமிடத்தில் மோடி பேசுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு எதிராக ஜனநாயகமற்ற மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தி குற்றம்சாட்டி வருகின்றனர். என் மீதுள்ள பயத்தினால் இதுபோல் அவர்கள் பேசி வருகின்றனர். அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு பிறகு, (மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு) இதற்கான விலையை அவர்கள் அளிப்பார்கள்' என்றார்.dinamani.com

கருத்துகள் இல்லை: