புதன், 16 ஏப்ரல், 2014

பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெனாலி ராமன் திட்டமிட்டபடி ஏப்.18-ல் வெளியாகிறது !

நடிகர் வடிவேலு நடித்துள்ள நாளை மறுதினம் திரைக்கு வரவிருக்கிறது தெனாலிராமன் திரைப்படம்.  இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவரும் இத்திரைப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   கிருஷ்ணதே வராயரை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி வருகிறார்கள்.  படக்குழுவினரோ, அப்படி காட்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.  அப்படியானால் படத்தை எங்களுக்கு திரையிட் டுக்காட்டுங்கள் என்கிறார்கள் தெலுங்கு அமைப்பினர்.  ஆனால் படத்தை திரையிட்டுக்காட்ட முடி யாது என்று பிடிவாதமாக இருக்கிறார்.
படத்தை எங்களூக்கு திரையிட்டுக்காட்டாமல் ரிலீஸ் செய்தால், போராட்டம் நடத்துவோம் என்று தெலுங்கு அமைப்பினர் கூறுகின்றனர்.   வடிவேலுவுக்கு எதிராக போராட்டம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று சீமான் உள்பட பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த நிலைய்படம் திரைக்கு வர ஒரு தினமே இருக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சமரசம் ஆவதே நல்லது என்று முடிவெடுத்த வடிவேலு, ரெசிடென்சி ஓட்டலில் தெலுங்கு அமைப் பினர்களை சந்தித்து சமரசமுயற்சி செய்கிறார்.
தெலுங்கு அமைப்பினரோ, எங்களூக்கு படத்தை திரையிட்டுக்காட்டினால்தான் சமரசம் ஆவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்  
nakkheeran.in
Late news இன்றும் இரு தரப்பினரும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ‘தெனாலிராமன்’ திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் 18-ந் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: