இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் மோடிக்கும் ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்தார் மோடி! வேட்டியில் மோடி ரஜினிகாந்தை சந்திக்க சென்ற நரேந்திர மோடி வழக்கம் போல உடை அணியாமல் தமிழக கலாசாரப்படி வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார். ரஜினி வழக்கம் போல வெள்ளை வேட்டி, வெள்ளை நிற முழுக்கை சட்டையில் மோடியை வரவேற்றார். தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன் - மோடி இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, நண்பர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவருக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்றார். பவர்புல் லீடர் மோடி- ரஜினி இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.. நான் மருத்துவமனையில் இருந்த போது என்னை அவர் சந்தித்தார். நான் இங்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். மோடி தலைசிறந்த நிர்வாகி... தலைவர்.. நரேந்திர மோடி என்னை சந்திக்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. அவர் என் நலம் விரும்பி. நான் அவரோட நலம் விரும்பி.. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக