செவ்வாய், 15 ஏப்ரல், 2014

பிரியங்கா : வருண் எங்கள் குடும்பத்திற்கு துரோகம் செய்துள்ளார்.


மக்களவை தேர்தல் ஒன்றும் டீ பார்ட்டி அல்ல என்றும் தனது ஒன்றுவிட்ட சகோதரார் வருணை தாக்கி பேசியுள்ளார்.
உத்தரப்பிரதே மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புபேசிய வருணின் ஒன்றுவிட்ட சகோதரி பிரியங்கா காந்தி,  வருண் எங்ங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்தான். ஆனால் அவர் தவறான பாதையில் போகிறார். குடும்பத்தில் உள்ள ஒரு இளையவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறபோது, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கு சரியான பாதையை காட்ட வேண்டும். எனது சகோதரருக்கு (வருண்காந்தி) நீங்கள் சரியான பாதையை காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்,
இந்நிலையில் சுல்தான்பூரில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்த பாஜக வேட்பாளர் வருண் காந்தி, தனிப்பட்ட நபர் எந்த பாதையில் செல்கிறார் என்பதை விட, நாடு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதே மிக முக்கியம் என்று பிரியங்காவின் பேச்சுக்கு பதிலளித்து பேசினார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சியினர் பிரியங்காவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், வருண் எங்கள் குடும்பத்திற்கு துரோகம் செய்துள்ளார். மக்களை தேர்தல் என்பது  குடும்பத்தில் நடக்கும் டீ பார்ட்டி அல்ல; கருத்தியல் போர் எனறு காட்டமாக விமர்சித்தார்.

கருத்துகள் இல்லை: