வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வீரமணி: நடிகர்களை தேடி பிரதமர் வேட்பாளர் அலைவது வெட்க கேடு !

கும்பகோணத்தில் நேற்று இரவு தி.மு.க. கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலியை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது.  முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., நகர பொறுப்பாளர் தமிழழகன் மற்றும் திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியபோது,   ‘’நடைபெறவுள்ள தேர்தலுக்கும் இதுவரை நடந்த தேர்தலுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. தி.மு.க. தலைமையில் அமைந்துள்ளது மகத்தான, மக்கள் கூட்டணியாகும். ஆனால் எதிரணியினர் அமைத்துள்ள கூட்டணி குறித்து நாங்கள் பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய கவலையில் உள்ளோம்.  வேறொன்னும் இல்லைங்க அவருக்கு தமில் படம்னா ரொம்ப இஷ்டம் ! குஜராத் கலவர டிம்ல கூட தமில் படம்தான் பாதாங்கோ அதுவும் ரசனி விசைன்னா உசிருங்கோ ! விகடன் குமுதம் மாமாக்கள் இப்படிதைன் சொல்லுவாங்கோ!

மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய கூட்டணி தான் ஜனநாயக முற்போக்கு கூட்டணியாகும். இதில் அனைத்து சமுதாயத்திற்கும் இடமுண்டு. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கும் இடமளித்து தேர்தல் களத்தினை தலைவர் கருணாநிதி கண்டு வருகிறார். இது ஒரு சமூக கூட்டணி, கொள்கை கூட்டணியாகும், ஆனால் எதிரணியில் வெளியே ஒரு பேச்சு, உள்ளே ஒரு ஏற்பாடு நடக்கிறது.
புதிய வாக்காளர்களுக்கு மோடி வித்தை பற்றி தெரியாது. ஆனால் வயதானவர்களுக்கு மோடி வித்தை பற்றி நன்றாக தெரியும். 1992ல் பாபர் மசூதி இடிப்பு, 2002 குஜராத்தில் சிறுபான்மையினத்தை அழித்ததை உலக அறிஞர்கள் எல்லாம் கண்டித்தார்கள்.
இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களை ஒழிக்க பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பன்மொழி, கலாச்சாரத்தை ஒழிக்க இவை தீர்மானித்துள்ளது. பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் பல கோடி செலவு செய்து மோடியை முன்னிறுத்தி வருகின்றனர்.
மோடி அலை மோடி அலை என கூறுகின்றனர். அப்படி ஒரு அலை வீசினால் அவர் ஏன் இந்தியா முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமர் வேட்பாளர் என்பவர் அவருடைய இடத்தில் அல்லவா இருக்க வேண்டும். இப்படி அலைய கூடாது. அதே போல் பிரதமர் வேட்பாளர் என்பவர் தற்போது நடிகர்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இந்த நிலை வெட்ககேடானது. பா.ஜ.க. தலைமையில் உள்ள கூட்டணி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கூட்டணியாக உள்ளது’’என்று தெரிவித்தார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: