விழாவில்
கலந்துகொண்டு பேசிய ஜீவா “இந்த விழாவில் கலந்துகொண்டது மிகவும்
மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
எனக்கு இந்த ஸ்கூல் புது இடம் கிடையாது. என் பாட்டி வீடு இந்த தெருவில் தான் இருக்கிறது. கிரிக்கெட் விளையாடும்போது பந்து ஸ்கூலுக்குள் விழுந்துவிட்டால், சுவர் எகிறி குதித்து எடுக்கும்போது நிறைய தடவை திட்டு வாங்கியிருக்கிறேன். அதனால் இந்த ஸ்கூல் பெயர் சொல்லி நிகழ்ச்சிக்கு அழைத்ததும் எதைப் பற்றியும் யோசிக்காமல் வருவதாக ஒப்புக்கொண்டேன். இங்கு கிரிக்கெட் விளையாடி திட்டுவாங்கிக்கொண்டிருந்த என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தது குறித்து எனக்கு பெருமை.

என்னைப்
பொருத்தவரைக்கும் அன்னதானத்தை விட கல்விதானம் தான் சிறந்த தானம். நான்
இரண்டு மாணவர்களை டாக்டருக்கு படிக்க வைக்கிறேன். அதில் இருக்கும் சந்தோஷம்
வேறு எதிலும் இல்லை. சாப்பாடு கொடுத்து உதவுவதை விட சமைக்க
கற்றுக்கொடுப்பது தான் நல்லது. அதேமாதிரி தான் கல்வியும். நான் படிப்பில்
சராசரி தான். இருந்தாலும் நான் இந்நிலையில் இருப்பதற்கு காரணம் என்
ஆசிரியர்கள் தான். எந்த நிலைக்கு போனாலும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்ததை படித்து, நம்ம ஊரிலேயே வேலை செய்யுங்கள்.
அப்பொழுதுதான் நம் நாட்டின் பொருளாதாரம் உயரும். மற்ற இடங்களில் பேசும்போது
சொல்லும் அந்த டையலாகை இப்ப சொல்ல முடியாது(ஜீவா எங்கு சிறப்பு
விருந்தினராக கலந்துகொண்டு பேசினாலும் SMS படத்தில் வரும் ‘ மச்சி ஒரு
கோட்டர் சொல்லேன்’ என்ற வசனத்தை சொல்வது வழக்கம்)” என்று பேசினார்.
1990-களில்
ஈழத்திலிருந்து அகதிகளாக வந்து தமிழகத்தில் OFERR என்ற அமைப்பைத் துவங்கி
மற்ற அகதிகளுக்கும் மறுவாழ்வளித்து வரும் அமைப்பினர் தமிழகத்தின் எல்லா
மாவட்டத்திலுமுள்ள பள்ளிகளுக்கு ஷூ-க்களை வழங்கி வருகின்றனர். அகதிகளாக
வந்தவர்களுக்கு சகோதர பாசத்துடன் ஆதரவளித்த தமிழகத்திற்குச் செய்யும்
நன்றிக்கடனாக, மிகப்பெரிய அமெரிக்க கம்பெனியின் உதவியால் கிடைத்த ஷூ-க்களை
முகாம்களில் இருக்கும் அகதிகளின் உதவியுடன் பேக் செய்து
வழங்கிவருகிறார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக