திங்கள், 14 அக்டோபர், 2013

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏன் மதவாதியான நரேந்திர மோடியை உதாரண புருஷராக குறிப்பிட்டார் ?

புதிதாக பதவி ஏற்றுகொண்ட இலங்கையின் வடக்கு மாகான முதலைமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் நிகழ்த்திய முதல் உரை:

அண்மையில் நரேந்திரமோடி முக்கிய மான ஒரு கூற்றை வெளிப்படுத்தினார். ஈஈவெறும் நல்லாட்சி என்பது போதாது. அவ்வாட்சி மக்கள் பாற் பட்டதாக அமைய வேண்டும். நல் லாட்சி என்பது அபிவிருத்தி செயற் பாட்டில் மக்களை மையப்படுத்துவ தாக அமைய வேண்டும்டுடு அவர்கள் சார்பான முன்னேற்பாடுகளை எடுப்பதாக அமைய வேண்டும் என் றார்.பல வருடகாலம் குஜராத் மக்க ளின் மனங்கவர்ந்த நாயகன் கூறிய இந்த கூற்று எமக்கும் பொருத்த முடையதாகும்.

அனைத்தை யும் இழந்த மனநிலையில் மக்கள் இருப்பதை நாங்கள் கவனத்திற்கு எடுக்க வேண்டும் , மனதால் அடிபட்டு, இடிபட்டு தமது சுயகெள ரவத்தை இழந்திருந்த எமது மக்கள் இப்பொழுது தான் எழுந்திருக்கப் பழகியுள்ளனர். எனவே, அவர்களின் கரம்பிடித்து ஜனநாயக வழியில் அவர்கள் தலைநிமிர்ந்து செல்லவும் வாழ்க் கையில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படவும் எம்மாலான சகல தையும் செய்ய வேண்டு மெனவும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர சரும் வடக்கு மாகாண சபையின் முதலமைச் சருமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள் ளார்.
வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி யான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத் தில் நேற்றுக் காலை 9 மணியளவில் இடம் பெற்றது. இதில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஆற்றிய உரை…
தலைவர் அவர்களே, வட மாகாணசபை சக உறுப்பினர்களே, மேடைமேல் அமர்ந்தி ருக்கும் ஆன்றோர்களே, சான்றோர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

எம்முள் சிலர் வேட்பாளர்களாக முன்னர் இங்கு கூடினோம். இன்று(நேற்று) உறுப்பி னர்களாக கூடியுள்ளோம். பெரும்பான்மையான வேட்பாளர்கள் உறுப்பினர்களாக பரிணாமம் பெற்றார்கள். எனினும் சிலர் விடுபட்டு உள்ளார்கள்.
ஆனால், மக்கள் சேவையில் அவர்கள் வேண்டப்படாதவர்கள் அல்ல. அவர்களின் சேவை , தேவை என்பதை மட்டும் இத் தருணத் தில் அவர்களுக்கு கூறி வைக்கின்றேன். தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் இன்று(நேற்று) ஒரு முக்கியமான கட்டத்தினுள் நுழைகின்றோம்.
இன்று(நேற்று) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நாம் ஒவ்வொருவரும் எமது கடமை களையும் பணிகளையும் பற்றுறுதியுடன் இயற்றுவோம் என்று உறுதிமொழி கொடுத்தபோது நாங் கள் எங்கள் மக்கள் சார்பிலான எமது கடப் பாடுகளை இன்று(நேற்று) வலியுறுத்தி உள் ளோம் என்பதை நாங்கள் மறத்தல் ஆகாது.
எமது கடமைகளும் பணிகளும் மக்களை மையமாக வைத்தே இயற்றப்பட வேண்டும். 25 வருடங்களுக்கு மேலாக மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை வெளியிட முடியாது தவித்துக் கொண்டிருந்தனர்.
அண்மைய தேர்தலில் அவர்கள் தமது விருப்பு வெறுப்புக்களை ஊரறிய, நாடறிய, உலக றிய கூறிவிட்டார்கள். அதன் காரண மாகவே நாங்கள் இன்று(நேற்று) பதவி ஏற்றுள்ளோம்.
எனவே, எமது கடப்பாடு மக்கள் பாற் பட்டதே ஒளிய வேறெவர் பாலும் இல்லை.
அண்மையில் நரேந்திரமோடி முக்கிய மான ஒரு கூற்றை வெளிப்படுத்தினார். ஈஈவெறும் நல்லாட்சி என்பது போதாது. அவ்வாட்சி மக்கள் பாற் பட்டதாக அமைய வேண்டும். நல் லாட்சி என்பது அபிவிருத்தி செயற் பாட்டில் மக்களை மையப்படுத்துவ தாக அமைய வேண்டும்டுடு அவர்கள் சார்பான முன்னேற்பாடுகளை எடுப்பதாக அமைய வேண்டும் என் றார்.
பல வருடகாலம் குஜராத் மக்க ளின் மனங்கவர்ந்த நாயகன் கூறிய இந்த கூற்று எமக்கும் பொருத்த முடையதாகும்.
நாம் எமது சகல மக்களினதும் தேவைகளை, விருப்புக்களை அறிந்து செயலாற்ற வேண்டும் என்பதை இந்தத் தருணத்தில் கூறி வைக்கின்றேன். இன, மத, பக்கச் சார்பு எதுவும் இல்லாது நாம் எமது கடமைகளைச் செய்ய வேண்டும்.
அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப் பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்றிருந்த காலம் மாறவேண்டும். நாங்கள் போரின் பின்னரான காலகட் டத்தில் இருக்கின்றோம். மக்கள் சகலதையும் இழந்த ஒரு நிலையில் இருப்பதை நாங்கள் கவனத்திற்கு எடுக்கவேண்டும்.
மனதால் அடிபட்டு, இடிபட்டு தமது சுய கெளரவத்தை இழந்திருந்த எமது மக்கள் இப்பொழுதுதான் எழுந்திருக்கப் பழகியுள் ளனர். அவர்கள் கரம் பிடித்து அவர்கள் ஜனநாயக வழியில் தலைநிமிர்ந்து செல்லவும் வாழ்க் கையில் மீண்டும் மறுமலர்ச்சி பெறவும் நாம் எம்மாலான சகலதையும் செய்ய வேண்டும்.
எமது சுயநலன்களை அவர்கள் மீது திணித்து அவர்களை மீண்டும் கலவரத்தில் ஆழ்த்தக்கூடாது. நாம் இப்பொழுது வன்முறைக் காலத்தை தாண்டி வந்துள்ளோம் என்பதை மறக்கக் கூடாது. வன்முறைக் காலத்தில் கையில் ஆயு தம் ஏந்தி மக்கள் எமது கைப் பொம்மைகளா கக் கருதி வாழ்ந்தோம். அந்தக் காலம் மலையேறிவிட்டது என் பதை நாம் ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, எமது புதிய சூழலிலே புதிய தராத ரங்களை, புதிய நியமனங்களைப் பின்பற்ற வேண்டும். பொது வாழ்க்கையில் வலியுறுத் தப்படும் ஏழு கொள்கைகளை இத் தருணத் தில் எடுத்தியம்புவது உசிதம் என்று நான் கருதுகின்றேன்.
முதலாவது:
சுயநலமின்மை. அதாவது பொது வாழ்க் கையில் நுழைபவர்கள் எப்பொழுதுமே பொது நலம் கருதியே முடிவு எடுக்கவேண்டும். தமக்கோ தமது குடும்பத்தாருக்கோ, தமது நண்பர்களுக்கோ நிதி சார்பான அல்லது வேறு வகையான நன்மைகள் பெறக்கருதி முடிவுகள் எடுக்கக் கூடாது.
இரண்டாவது:
பொது வாழ்வுக்குள் நுழைபவர்கள் நிதி சார்பான கடப்பாடுகளை வெளியார்களுக்கோ, வெளி நிறுவனங்களுக்கோ கடன்பட்டிருந் தால் அவர்களால் தமது கடமைகளை நேர் மையாகச் செயலாற்ற முடியாமல் போய் விடும். ஆகவே, அவ்வாறு கடன் பட்டிருப்ப தைத் தவிர்க்க வேண்டும்.
மூன்றாவதாக:
தகைமை அடிப்படையிலேயே பொது வாழ்வில் நியமனங்களை, உடன்பாடுகளை, பரிசுகளை நாம் வழங்கவேண்டும். அதாவது புறநிலை மெய்மை நிலையில் எமது மனங் கள் செயற்பட வேண்டும். அதை லிணுளூeஉமிஷ்ஸஷ்மிதீ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
நான்காவதாக:
பொதுவாழ்வில் நாம் ஆற்றும் செயற் பாடுகளுக்கு நாம் பதில் அளிக்கத் தயாராக இருக்க வேண்டும். எனவே, தான்தோன்றித்த னமான செயற்பாடுகளுக்கு இடம் அளிக்கக் கூடாது.
ஐந்தாவதாக:
கூடுமான வரையில் நாம் எடுக்கும் தீர் மானங்களை நாங்கள் வெளிப்படையாக எடுக் கப் பழகிக் கொள்ள வேண்டும். பொது மக்கள் நலன் காரணம் காட்டுவதை தடை செய்தால் ஒளிய எமது தீர்மானங்களுக்கு வெளிப்படை யாகவே நாம் காரணம் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஆறாவதாக:
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் பொது மக்கள் கடமைகளை ஆற்றும் போது அவை சம்பந்தமாக தமக்கிருக்கும் தனிப்பட்ட நல உரித்துகளை வெளிப்படையாகச் சொல்லி வைத்தல் அவசியம். அத்துடன் பொதுமக்கள் நலத்தையே முதன்மைப்படுத்தித் தீர்மானங் களை நாம் எடுக்க வேண்டும்.
ஏழாவதாக:
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் மேற் குறிப்பிட்ட கொள்கைகளை நடைமுறைப்ப டுத்தி தமது வாழ்வில் வாழ்ந்து காட்டி மற்ற வர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண் டும்.
பொதுவாழ்க்கையில் நான் கூட இப்பொ ழுதுதான் ஈடுபடத் தொடங்கியுள்ளேன். நீதி பதியாக இருந்தபோது பிழைகள் விட சந் தர்ப்பங்கள் குறைவாக இருந்தன.
இப்பொழுது அப்படியல்ல. ஒவ்வொரு வரும் பல்லிளித்துக்கொண்டு வரும்போது ஏதோ பின்னணி ஆசையுடன்தான் வருகின் றாரா? என்னை வழிதவற வைக்க முனைந் துள்ளாரா என்று சதாகாலமும் விழிப்புடன் இருந்து செயலாற்ற வேண்டியிருக்கின்றது. உங்களைப் போலத்தான் நானும் கஷ்டத் துடன் செயலாற்ற வேண்டியுள்ளது.
இதுவரைகாலமும் அரசாங்க அதிகாரம் தம்மைச் சார்ந்திருந்தது என்ற மமதையில் எம்மக்களுள் பலர் தான்தோன்றித்தனமாக சுயநல நோக்குடன் மக்கள் நலத்தைக் கரு தாது தீர்மானங்களை எடுத்ததாக அறியவந் துள்ளது.
அதே தவறுகளை நாங்களும் செய்வதால் பாதிக்கப்படப் போவது எமது மக்களே. அவர் கள்தான் எமக்கு வாக்களித்து இந்தப் பதவி யில் வீற்றிருக்கச் செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிராக, அவர்களின் நல உரித் துக்கு மாறாக நாங்கள் இயங்கக் கூடாது என்பதில் எங்களுக்குள் கருத்தொருமைப் பாடு இருத்தல் அவசியம்.
எமது கட்சி ஒரு கூட்டு கட்சி. பலதரப்பட்ட மனோநிலையில் வளர்ந்த கட்சிகள் சேர்ந்தே இந்தக் கூட்டு கட்சியை அமைத்துள்ளோம்.
எங்கள் கடந்த காலம் எப்படி இருந்ததாயி னும் இப்பொழுது நாங்கள் ஜனநாயக வாழ்க் கையில் காலடி பதித்துள்ளோம் என்பதை எக் கட்சியினரும் மறக்கக் கூடாது.
ஜனநாயகத்தில் ஆராய்வும் பேச்சுவார்த் தையும் இணக்கமுமே முக்கியம். அதிகார வலோத்காரம் தவிர்க்கப்பட வேண்டும். இது வரை காலமும் நாங்கள் அதிகார அல்லது ஆயுத வலோத்காரத்துக்கு பழகி வந்துள் ளோம் என்றால் அதனை இனியாவது தவிர்ப்பது நன்மை பயக்கும் என்று நினைக் கின்றேன்.
எடுப்பார் கைப்பிள்ளைகளாக இதுவரை காலமும் வாழ்ந்து மக்கள் களைத்துப் போய் விட்டார்கள். இனியாவது அவர்கள் தலை நிமிர்ந்து ஜனநாயக வாழ்க்கை வாழ நாங் கள் எம்மாலான சகலதையும் செய்ய முன் வருவோமாக.
முப்பது உறுப்பினர்களை மக்கள் தேர்ந் தெடுத்துள்ளார்கள். அவர்களுள் இருவர் மற்றைய மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள். சகலருக்கும் இருக்கும் கடப் பாடு ஒன்றே. இதை எவரும் மறந்துவிடக் கூடாது.
அதாவது மக்கள் நலன்கருதி செயலாற்று வதே எமது கடமை. அடுத்த தேர்தலில் நான் வெற்றிபெறுவேனா என்று, எனது கட்சி வெற்றி பெறுமா என்று நான் இப் பொழுதில் இருந்தே சிந்திக்கத் தொடங்கிவிட்டேனானால் பொதுமக்கள் நலன்தான் பாதிக்கப்படும். அவர்கள் முக்கியமல்ல எனது வருங்காலமும் எனது கட்சியின் வருங்காலமுமே முக்கியம் என்றாகிவிடும். அவ்வித மனோநிலையை நாங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணி கள் ஏராளம் காத்திருக்கின்றன.அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போமாக.
எமது பதவிகள் ஒரு நம்பிக்கை பொறுப் புக்குள்ளான பதவிகள். எமது அரச அலு வலர்களும் அவ்வாறே பதவி வகிப்பவர்கள். மக்களை வழி நடத்தும் பொறுப்பு, அவர் களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு,அவர் களை பாதுகாக்கும் பொறுப்பு, அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு போன்ற பல பொறுப்புக்கள் எம்மிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளன. அரசாங்க அலுவலர்க ளுக்குத் தாங்கள் அரசாங்க சேவகர்கள் என்பதிலும் பார்க்க நாம் மக்கள் பாதுகாவ லர்கள் என்ற எண்ணம் வளர வேண்டும். அதுதான் உண்மையும் கூட. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எங்களை எமது அலுவலகத்தில் எம்மைக் கட்டுப்படுத்தி சிறை செய்துவிட்டார்கள்.
அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக் கும் அடிபணிந்து நடப்பதே எமது கடமை என்று எண்ணும் அளவுக்கு வலு இழந்து விட்டோம். மக்கள் சேவையில் ஈடுபடும்போது மக்களே எமது முக்கிய பொறுப்பு என்பதை நாம் என்றென்றும் மறக்கக்கூடாது.
எனவே, மக்கள் சேவையே எமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். சுயநலம் களைந்து மக்கள் சேவையில் உள்நுழைய நாங்கள் யாவரும் முன்வரவேண்டும். எமது வடமாகாண சபை முதன்முதல் வலுப்பெற்று துளிர்த்துள்ளது.
இதை நடாத்துவது நாம். நாம் என்றால் தமிழ்பேசும் மக்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும். நாங்களே மற்றவர்களுக்கு உதாரணமாக வாழத்தலைப்படுவோம். இப் பொழுதே உலக அரங்கில் எமது தேர்தல் முக் கியத்துவம் பெற்றுள்ளது. அயல்நாட்டார் வந்து வாழ்த்திச் சென்றுள்ளனர்.
எமது செயற்பாடுகள் அவர்களைப் பிரமிக் கச் செய்யவேண்டும். எமது சுயநலமற்ற செயற் பாடுகள் எல்லோருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும். நானும் எனது கடமைகளுக்கு புதியவன். உங்களில் அநேகரும் அப்படித் தான். எனினும் நாங்கள் அனைவரும் சேர்ந்து முன் னேறுவோம். சேர்ந்து முதனிலை அடைவோம். சேர்ந்து நாம் எமது இலக்குகளை அடை வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
BY:- SR. Karan

கருத்துகள் இல்லை: