
கூடுதல் கூட்டம் குழு குலம் போன்ற சொற்களில் இருந்துதான் cult என்ற ஆங்கில சொல் உருவானதோ தெரியவில்லை , இருக்கலாம்,
இந்த Cult எனப்படும் அமைப்புக்கள் தமிழர்களின் வரலாற்றில் தாராளமாகவே காண கிடைக்கின்றது , அதிலும் குறிப்பாக கடந்த ஒரு சில ஆயிரம் வருடங்களில் இந்த cult கலாச்சாரம் அதிகமாக மேலோங்கி இருந்திருக்கிறது என்றே கருத வேண்டி உள்ளது , இதற்கு உதாரணமாக பல தகவல்களை கூறலாம் , தமிழர் இலக்கியங்களில் மன்னர்களை புகழ் பாடும் இலக்கியங்கள் எல்லாமே ஏறக்குறைய ஒரு cult கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்றே கருத வேண்டி இருக்கிறது ,
மன்னர்களையும் போர் வீரர்களையும் அளவுக்கு மீறி புகழ்வது வாந்தி வரும் அளவுக்கு இடம்பெற்று இருக்கிறது,
அவர்களை ஒரு தெய்வ ஸ்தானத்தில் வைத்து வழிபடும் கலாசாரம் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் சம்பவங்களை தாராளமாக காணலாம் .அந்த மன்னர்களையும் போர் வீரர்களையும் அல்லது செல்வந்தர்களையும் தெய்வ அவதாரங்கள் என்ற அளவில் புகழ்ந்து பாடும் எண்ணற்ற செய்திகள் நமது அடிமை மன நிலையை காட்டுகிறது என்றே கருத வேண்டி உள்ளது,
சில விதி விளக்குகள் உண்டு , குறிப்பாக களப்பிரர் காலத்தில் வெளிவந்ததாக கூறப்படும் சிலப்பதிகாரத்தில் மட்டும் சாதாரண மக்களின் மேன்மையை காட்டும் விபரங்கள் உள்ளன ,
அரசனின் அநியாய ஆட்சியை ஒரு சாதாரண பெண் துவம்சம் செய்த காட்சியானது அன்றைய Cult கலாசார பாரம்பரியத்திற்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது ,
இந்த ஒரே காரணத்திற்காகவே சிலப்பதிகாரத்தை ஒரு உலக புரட்சி நூலாக அறிவித்து விடலாம்.
இந்த CULT பாரம்பரியம்தான் பிற்காலத்தில் மக்கள் சுயமரியாதை இழந்து ஒரு அடிமை கூட்டமாக மாறியதற்கு காரணம்
வல்லானின் காலடியில் தமிழர்கள் எதோ தாசிகளாக கிடந்ததாக காட்டப்பட்டு கொண்டிருந்த இலக்கியங்களில் சிலப்பதிகாரம் மட்டுமே சுயமாக சிந்திது தனது உரிமைக்காக போராடிய ஒரு கதாபாத்திரத்தை படைத்துள்ளது ,
பார்ப்பனிய ஆதிக்கத்தில் இருந்து சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழர்கள் விடுதலை பெற்றிருந்த காரணத்தால் போலும் சிலப்பதிகாரம் வெளிவந்தது சாத்தியமாயிற்று , சிலபதிகாரத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு களப்பிரர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ,
மனிதர்களை தங்கள் சுய தேவைகளுக்காக கட்டுபடுத்தி ஒரு அடிமை குழுவாக வைத்திருத்தலே Cult என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமைப்புமுறையாகும் ,
சமயம் சார்ந்த குழுமுறை அல்லது Cult க்களின் அகோர வளர்ச்சியே அரசியல் பொருளாதார சமுக Cult க்களாக உருமாறுகின்றன .
கள்ள கடத்தல் போதை வஸ்து வியாபாரிகள் போன்றவர்களும் இந்த விதமான குழு அமைப்புக்களை கொண்டிருந்தனர் , இது பல நாடுகளிலும் நடந்துள்ளது ,
அவர்கள் தங்கள் கடத்தல் வீர தீர சாகசங்களை ஒரு மித மிஞ்சிய கற்பனை வளத்தோடு கூடவே பயமுறுத்தியும் பிரசாரம் செய்து மனிதர்களை தங்கள் கட்டு பாட்டுக்குள் வைத்திருந்து தமது சுக போக வாழ்வுக்கு பயன் படுத்துவார்கள் ,
இந்த விதமான கடத்தல் போதை வஸ்து போன்ற சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுபவர்கள் எப்பொழுதும் அரசியல் பொருளாதாரம் போன்றவற்றில் தமது ஆளுமையை நிலைநாட்ட பெரும் முயற்சி செய்த வண்ணமே இருப்பார்கள்.
இந்த குழு அமைப்பு அல்லது Cult அமைப்புக்களை தமது கட்டு பாட்டுக்குள் வைத்திருக்கும் நபர்கள் எல்லாருமே ஓரளவு சித்த பிரமை பிடித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பது வரலாற்றில் ஒரு அதிசயம் என்று தான் சொல்லவேண்டும் ,
இந்த Cult க்களில் சிலர் தெரிந்தே மாட்டு பட்டிருப்பார்கள் ,
ஆனால் அதிகமாநோர்களுக்கு தாம் தமது சுய சிந்தனையை இழந்து அவர்களை ஆதரித்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவதில்லை ,
உதாரணமாக ஹிட்லருக்கு வாக்குகளை அள்ளி அவனை தெரிவு செய்த மக்கள் தாங்கள் ஒரு மன நோயாளியான சர்வாதிகாரியை ஆதரிக்கிறோம் என்று தெரிந்திருக்கவில்லை ,
இதே போலதான் கம்போடியாவில் POLPOT ஐ ஆதரித்த அப்பாவிகளின் கதையும் பின்பு மோசமான ஒரு துன்பியல் சம்பவமானது ,
தங்களை சகல துன்பத்திலும் இருந்து மீட்பார் என்று நம்பி POLPOT ஆதரித்த மக்களுக்கு அந்த Khemer Rourge என்ற கொடூர Cult இன் சுய ரூபம் தெரியவந்தபோது அங்கு ஒன்றுமே மிஞ்சவில்லை , எங்கு பார்த்தாலும் கொலையும் கொள்ளையுமே அரங்கேறியது ,
இந்த மாதிரி cult க்களை கட்டி எழுப்புவோர் எல்லாம் சில பொதுவான தந்திரங்களை கையாளுவார்கள் ,
எப்பொழுதும் நாம் ஏகமனதாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று எந்த பொது விடயங்களிலும் விவாதம் கூடாது யாரோ ஒருவர் எடுத்த முடிவை எல்லோரும் ஒற்றுமையாக பின்பற்ற வேண்டும் என்பது போன்ற brainwashing விஷ கருத்துக்களை மீண்டும் மீண்டு எதோ ஜனநாயக கருத்துக்கள் போன்று ஒப்பிப்பார்கள் ,
இவர்களின் இந்த ஏகமனதாக என்ற சொற்பதத்தின் பின்னால் ஒரு Hidden Agenda இருக்கும் , அந்த மறைந்திருக்கும் உள்நோக்கமே இவர்கள் சார்ந்து இருக்கும்
Cult இன் நோக்கம் என்பதை புத்தி இருந்தால் புரிந்து கொள்ளலாம்,
இந்த Cult க்களின் அங்கத்தவர்கள் எல்லாருமே தாங்கள் தலைமைக்கு அல்லது அமைப்பு கட்டு பட்டவர்கள் என்பதை எதோ ஒரு குவாளிபிகேசனாக எண்ணி அதை பெருமையுடன் பறை சாற்றும் முட்டாள்தனத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா தெரியவில்லை ,
சுயமாக சிந்திக்க தெரியாது ! சுயமாக ஒரு கருத்தை கொண்டிருக்க முடியாது அல்லது தெரியாது !
யாரோ ஒருவரை பின்பற்றுவது தனது பெரும் தகமை என்று உண்மையிலேயே நம்பி கொண்டிருப்பார்கள்
தனி மனித விருப்பங்கள் எல்லாம் ஏதோ தீண்டத்தகாதவை என்றும் தங்களால் போற்றப்படும் கடவுள் அல்லது தலைவனின் விருப்பங்களை நிறை வேற்றுவதே தமது பிறவி கடமை என்று காலா காலமாக நம்ப வைத்து மக்களின் வாழ்வை பெருதும் சூறையாடியது இந்த CULT மனோபாவம்தான்.
இது எவ்வளவு பேதைமை என்று துளி கூட இவர்களுக்கு விளங்காமல் போனது எவ்வளவு பெரிய வீழ்ச்சி ?
சிந்திக்கும் உரிமையை பறித்தெடுப்பதே Cult காரரின் தலையாய தொழில் ! radhamanohar.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக