
டெல்லி: கல்வியறிவில் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் கேரளா குற்றங்கள்
அதிகம் நடக்கும் மாநிலமாகவும் உள்ளது.
2012ம் ஆண்டில் நாட்டில் நடந்த குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண
காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குற்றங்களின் எண்ணிக்கையை வைத்து
நாட்டில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது எந்த மாநிலம் கடைசி இடத்தில்
உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக கல்வியறிவில் முதலிடத்தில் இருந்த கேரளா மற்றொரு
விஷயத்திலும் முதல் மாநிலமாக ஆகி உள்ளது.
நாட்டிலேயே கேரளாவில் தான் கடந்த ஆண்டு அதிக குற்றங்கள் நடந்துள்ளன.
இதனால் கேரளா கல்வியறிவு தவிர்த்து குற்றங்களிலும் முதல் மாநிலமாகியுள்ளது.
கேரளாவில் குறிப்பாக கொச்சியில் ஏராளமான குற்றங்கள் நடந்துள்ளன
கேரளாவை அடுத்து மத்திய பிரதேசத்திலும், தமிழகத்திலும் அதிக குற்றங்கள் நடந்துள்ளன
/tamil.oneindia.in
/tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக