சனி, 13 மார்ச், 2010




 புலி மற்றும் புலி சார்பாளர்களால் ் செல்ல சார்ள்ஸ் விஜேவர்த்தன வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்ள்ஸ் விஜேவர்த்தனவின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 25ம்திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றி;ல் விசாரணைககு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய முன்னாள் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் சார்ள்ஸ் விஜேவர்த்தன புலிகள் சமாதான உடன்படிக்கை என்றுகூறி மக்களுடன் மக்களாக நாடெங்கும் கலந்திருந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் அவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றினைத் தொடர்ந்து முறுகலைத் தணிக்கச் சென்று மக்களுடன் பேசிக் கொண்டிருந்தநிலையில் புலி மற்றும் புலி சார்பாளர்களால் இழுத்துச் செல்லப்பட்டு கடத்திச் செல்ல சார்ள்ஸ் விஜேவர்த்தன வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பான சந்தேகநபரான பாலசிங்கம் சிவராஜா வன்னி மோதலில் இடம்பெயர்ந்த நிலையில் செட்டிகுளம் முகாமுக்கு வந்திருந்தபோது அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை: