வெள்ளி, 12 மார்ச், 2010

யாழ்ப்பாணத்தில் கடவுச் சீட்டு வழங்கும் நிலையம் திறக்க நடவடிக்கை
வடமாகாண மக்களின் நன்மை கருதி கடவுச் சீட்டு வழங்கும் நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயகோன் தெரிவித்தார். கொழும்பைத் தவிர அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் கடவுச் சீட்டு வழங்கும் காரியாலயங்கள் இப்போது இயங்கிவருகின்றன. தற்போது இலங்கைக்கு அதிகளவில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளதால் கடவுச் சீட்டு வழங்கும் நடைமுறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: