வெள்ளி, 12 மார்ச், 2010


இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, 1.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி மிட்டல், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 1.37 லட்சம் கோடி ரூபாய்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த எய்க் பட்டிஸ்டன் எட்டாவது இடத்திலும், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் 23வது இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானியின் சகோதரரான, அனில் அம்பானி, 65 ஆயிரத்து 760 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இப்பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களில் இரண்டு பேர் மட்டுமே இந்தியர்கள். கடந்த 2008ம் ஆண்டு, உலகில், 1,125 கோடீஸ்வரர்கள் இருந்தனர். கடந்தாண்டு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக, கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 793 ஆக குறைந்தது. தற்போது உலகில் 1,011 கோடீஸ்வரர்கள் உள்ளனர். "போர்ப்ஸ்' பத்திரிகையின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் போர்ப்ஸ் கூறுகையில், " உலகப் பொருளாதார மந்த நிலை சீரடைந்து வருவது, இந்த பட்டியலில் எதிரொலித்துள்ளது' என்றார்.

வெளிநாட்டில எல்லாம் ஒரு பணக்காரன் இருந்தா, அவன சுற்றி இருக்கிற சமூகமும் நல்லா இருக்கும். நம்ம நாட்டில அந்த பணக்காரன் மட்டும் தான் நல்லா இருக்கான். அந்த சமூகம் அதே மாறி சேரிகளிலும் சாக்கடையிலும் தான் இருக்கு. பணகாரகள் மற்றவர்களும் முன்னேறி வர கொஞ்ச நஞ்சம் உதவி செய்யவேண்டும். உதாரனத்திற்க்கு, கும்பானி அவர்களும், மிட்டாய் அவர்களும் சொந்தமாக தொழில் துவங்கி ஒரு நூறு பேருக்கு வேலை கொடுக்கும் இளைனர்களுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் கொடுக்கலாம். அல்லது ஒரு சிறிய தொழில் பேட்டை ஆரம்பித்து முன்னேற துடிக்கும் இளைனர்களுக்கு வாடகைக்கு விடலாம், ஆராய்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து உதவலாம். இந்த மாறி கை தூக்கி விடும் ஒரு சில காரியங்களை பண்ணினாலே போதும் இந்திய முன்னேறிடும். ஆனா இந்தியாகாரன் எவனும் இதெல்லாம் பண்ணமாட்டான். அது தான் பிரச்சினையே. ஏன்னா அடுத்தவன் வளர்ந்து நமக்கே ஆப்பு வெச்சிட்டா?  
by k கைப்புள்ள,nj,India    12-03-2010 00:07:51 IST

கருத்துகள் இல்லை: