வியாழன், 11 மார்ச், 2010

ஆசிரமத்திற்கு கோடி கோடியாக பணம் குவிந்த மர்மம், பல வெளிநாட்டினரையும் கூட அதிர்ச்சியடைய செய்துள்ளது.நித்யானந்தா, பணத்தின் மீது குறி வைத்து, பல வழிகளில் வசூல் செய்ய ஆரம்பித்தார். இதற்காக தனிப்படையே அமைத்தார். நித்யானந்தாவிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டுமென்றால், ஒரு லட்சம் ரூபாய்; ஒரு மணி நேரம் அவர் பிரசங்கம் செய்ய வேண்டுமென்றால், 11 லட்சம் ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இவை அனைத்தையும் ரொக்கமாக கொடுத்து விட வேண்டும். கொடுக்கப்படும் பணத்திற்கு ரசீது எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆசிரமத்தில் எந்த விழா நடத்தப்பட்டாலும், நிகழ்ச்சிகள் அனைத்தையும், ஆசிரம வீடியோகிராபர் தான் படம் எடுப்பார். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்த காட்சிகள் அடங்கிய, "சிடி'க்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கோடி, கோடியாக பணம் வசூலானது.ஆசிரமத்தில் சேருபவர்கள் தங்கி படிப்பதற்காக, தனி ஹாஸ்டல் வசதி செய்யப்பட்டது. கல்லூரிகளில் பாடத்திட்டம் இருப்பது போன்று, ஆசிரமத்திலும் பக்தி மார்க்கமாக படிப்பதற்கு பாட திட்டங்கள் உருவாக்கப்பட்டது.வேதாந்த பக்தி மார்க்கங்கள் படிப்பதற்கு, ஆண்களும், பெண்களும் சேர்ந்தனர். இவை அனைத்தையும் படிப்பதற்காக, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது. இங்குள்ள மாணவர்கள், ஆசிரமத்தை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது, தோட்டங்களில் வேலை செய்வது, சமையலறை பணிகளில் உதவுவது என, அனைத்து வேலைகளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.மாணவியருக்கோ, சிறிது உயர்ந்த பொறுப்பு கொடுத்தனர். அவர்கள் பணி அனைத்தும் நித்யானந்தா அறையிலும், அறையைச் சுற்றியுள்ள பகுதியிலும் தான். நித்யானந்தாவுக்கு வேண்டிய அனைத்து, "சேவை'களையும் செய்வது, "கட்டாய கடமை' என்று கூறப்பட்டது. அதன் படி மாணவியரும் போட்டி போட்டு பணி செய்துள்ளனர்.நித்யானந்தாவின் புகழ் அயல்நாட்டிலும் பரவியதால், வெளிநாட்டு பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியது; பணம் கொட்டியது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என பல வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் குவிந்தது.வெளிநாட்டு பெண் பக்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. நித்யானந்தா பெயரில் பலரும் புத்தகங்கள் எழுதி குவித்தனர். புத்தக விற்பனை மூலமும் நித்யானந்தாவுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: