சனி, 23 அக்டோபர், 2021

தொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் 450 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் சிக்கின .. நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில்

 தினகரன்  : சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் தொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ராஜநாராயணன் வீட்டிலிருந்து நிலம் வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின. ஓராண்டுக்கு முன்பு சேலம் இளங்கோவனுக்கு ராஜநாராயணன் 450 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தது சோதனையில் அம்பலமாகியுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடத்திய விசாரணையில் இளங்கோவனை நேரில் பார்த்ததில்லை என ராஜநாராயணன் தகவல் அளித்துள்ளார்.
இளங்கோவனின் நண்பரான பரிபூரணம் மூலம் தான் 450 ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுத்ததாக ராஜநாராயணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அ.தி.மு.க நிர்வாகி இளங்கோவன் ரூ.70 கோடி முதலீடு.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை!

 Rayar A -   Oneindia Tamil :  s சென்னை; அ.தி.மு.க நிர்வாகியும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவருமான இளங்கோவன் வருவாயை விட 131% அளவுக்கு சொத்துக்குவிப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்ககளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் ரூ.29 லட்சம் பணம், 21 கிலோ தங்க நகைகள், சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்ட்டதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:.

ஊட்டி திரைப்பட விழாவைச் சிதைத்த மாதவன் பிள்ளை! கோவா திரைப்பட விழாக்கள் போல புகழ் வாய்ப்பு நழுவியது

May be an image of 1 person and beard

Vediyappan M Munusamy :  ஊட்டி திரைப்பட விழாவைச் சிதைத்த
திருடன் மாதவன் பிள்ளை
“ஊட்டி திரைப்பட விழா ஏன் நடக்கவில்லை?,”
என்பதுதான் நமது நலம் விரும்பிகள் பலரிடமிருந்து அவ்வப்போது  கேட்கப்படும் கேள்வி.
கோவா திரைப்பட விழாபோல, ஊட்டி திரைப்பட விழா என்பது எமது கனவுகளில் ஒன்று. பலரையும் இணைத்து, ஒரு குழுவாக இருந்து ஊட்டி திரைப்பட சங்கத்தை பதிவு செய்து முறையாக துவக்கினோம். தலைவராக இருந்து அதற்கு  உருவம் கொடுத்தவர் வழக்கறிஞர் அண்ணன் பால நந்தகுமார்.
2017, 2018 என இரண்டு ஆண்டுகள், பல்வேறு சோதனைகளைக் கடந்து, தமிழ், மலையாளம் , கன்னடம் மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற பலரின் ஒத்துழைப்போடு கையிலிருந்த பணத்தை செலவு செய்து மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது.

நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்!

Actor Mansoor Ali Khan's house sealed!
nakkeeran :நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை சூளைமேட்டில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானுக்கு சொந்தமான வீட்டிற்குச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அவர் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியதாகப் புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி 2,400 சதுர அடி கொண்ட நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல்வைத்துச் சென்றனர்.

சமூக நீதி கண்காணிப்புக் குழு: தலைவர் உறுப்பினர்கள் நியமனம்!

சமூக நீதி கண்காணிப்புக் குழு: தலைவர் உறுப்பினர்கள் நியமனம்!

 minnambalam சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்க: ளை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ”சமூகநீதிக் கண்காணிப்பு குழு” அமைக்கப்படும். இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

maalaimalar : சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

 * தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். * சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். * 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுதா சந்திரன் டெல்லி விமான நிலையத்தில் அவமதிப்பு! மாற்று திறனாளிக்ளுக்கு விமான நிலையங்களில் வசதிகள் இல்லை

மத்திய பாதுகாப்புப் படை மன்னிப்பு

Rayar A  --    Oneindia Tamil :   டெல்லி: பிரபல நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன் தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் அவமானப்படுவதாக பிரதமர் மோடிக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தார்.
விமான நிலையம் போன்ற முக்கியமான இடங்களில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை என்ற அவலம் நாட்டில் நிலவுவதாக பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறி இருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ' நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் சுதா சந்திரன், ஒரு நடிகை, நாட்டியக் கலைஞர். செயற்கைக் கால்களைக் கொண்டு நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன்.
நாடு என்னை நினைத்துப் பெருமிதம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தொழில்முறை பயணம் செல்லும்போது,, விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறேன், என் செயற்கை மூட்டு உறுப்பை அகற்றி அவர்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அது மனிதனால் சாத்தியமா மோடிஜி? நமது நாடு இதைப் பற்றி பேசுகிறதா? நமது சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்' என்று கூறி இருந்தார்.

ஹாலிவூட் படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

 மாலைமலர்  : சினிமா படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளர் பலியான விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி
ரஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடம்
ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார்.
மேலும் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்காதா? மதச்சார்பற்ற அரசாகிறதா?

बांग्लादेश

சுபீர் பெளமிக்  -      மூத்த பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக  :    வங்கதேசத்தின் ஆளும் அவாமி லீக் அரசு 1972 ஆம் ஆண்டின் சமயசார்பற்ற அரசியலமைப்பை மீண்டும் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் அதிகாரபூர்வ மதம் என்ற இஸ்லாமின் அங்கீகாரம் நீக்கப்படும். மத நிந்தனை வதந்திகளால் நாட்டில் இந்துக்கள் தாக்கப்பட்ட இந்த நேரத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கிய இத்தகைய தாக்குதல்களில் இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகளுக்கும் டஜன் கணக்கான கோவில்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டின் மதச் சார்பற்ற அரசியலமைப்பை மீண்டும் கொண்டுவருவதற்காக முன்மொழியப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டால் அதிக வன்முறை ஏற்படும் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அவாமி லீக் அரசை எச்சரித்துள்ளனர். 1988 ல், ராணுவ ஆட்சியாளர் எச்எம் எர்ஷாத் இஸ்லாமை அதிகாரபூர்வ மதமாக அறிவித்தார்.

'மீண்டும் உங்களை சந்திக்கிறேன்': 22 நாள் மருத்துவ சிகிச்சைப் பிறகு பாரதி பாஸ்கர் உற்சாக பேச்சு!

 கலைஞர் செய்திகள்  : மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாரதி பாஸ்கர், விரைவில் மேடையில் உங்களைச் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தனது பட்டிமன்ற பேச்சின் மூலம் உலகத் தமிழர்களிடையே பெரும் பாராட்டை பெற்றவர் பாரதி பாஸ்கர். எம்.பி.ஏ படித்திருக்கும் பாரதி பாஸ்கர் வங்கியில் பணியாற்றிய போது, சாலமன் பாப்பையாவுடன் இணைந்து தனது பட்டிமன்ற பேச்சை தொடர்ந்து வந்தார்.
சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் தனது பேச்சாற்றலால் பாரதி பாஸ்கர் பிரபலமடைந்தார். மற்றொரு பேச்சாளரான ராஜாவும், பாரதி பாஸ்கரும் இணைந்து பங்கேற்கும் பட்டிமன்றங்கள், பட்டிமன்ற பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு கடந்த 9ம் தேதி காலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாரதி பாஸ்கரின் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

வெள்ளி, 22 அக்டோபர், 2021

அதிமுகவின் இளங்கோவன் அதிகார மையமானது எப்படி ?

எடப்பாடியுடன் இளங்கோவன்.
இளங்கோவன்.

BBC : இளங்கோவன் அதிமுகவின் அதிகார மையமானது எப்படி?  தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த இளங்கோவன்?
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துவருகிறவர் இளங்கோவன்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டுவரும் இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவராக 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்ததில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீடு மற்றும் சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள இளங்கோவனோடு தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை டிஜிபி ராஜேஷ் தாஸ் தாமதப்படுத்துகிறார்

ராஜேஷ் தாஸ் விசாரணையை தாமதப்படுத்துகிறார்:   தமிழக அரசு!

 மின்னம்பலம்  : பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாமதப்படுத்த முயல்வதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகாரை விசாரிக்கக் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

மின்னம்பலம் :  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்துக்கு எதிராக திமுகவினரே சாலை மறியல் நடத்தியதோடு, அவருக்கு எதிரான கடுமையான கோஷங்களையும் எழுப்பியிருக்கிறார்கள்.
ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்றிய , மாவட்ட கவுன்சிலர்கள் இன்று (அக்டோபர் 22) கூடி தங்களது தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த வகையில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட அசம்பாவிதங்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் அரங்கேறியுள்ளன.
ஏற்கனவே மின்னம்பலத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி, துரைமுருகன் பெயரைச் சொல்லி ஆலங்காயத்தில் திமுக அட்டகாசம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய முக்கிய தகவல்!

“நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய முக்கிய தகவல்!

கலைஞர் செய்திகள் : நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய முக்கிய தகவல்!
நகைக்கடன் தள்ளுபடியால் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கூட்டுறவுச் சங்கங்களில் 5 சவரனுக்குக் கீழ் கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்தான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும். நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
15 கூட்டுறவுச் சங்கங்களில் நடைபெற்றுள்ள ரூ.12 கோடி வரையிலான முறைகேடுகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக எடுத்த கொடூரம்.! வேறு ஜாதியை சேர்ந்த....

love issue...tv mechanic murder in thoothukudi

tamil.asianetnews.com : கேட்டரிங் பயிற்சி முடித்து திருவிழாக்களில் சமையல் வேலை செய்துள்ளார். அவரிடம் மகாலட்சுமி தான் சூரிய ராகவனை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஒரே  சமூகத்தைச் சேர்ந்த தன்னை காதலிக்காமல் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் இருவர் மீதும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
ஏட்டயபுரம் அருகே டிவி மெக்கானிக்  தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் தூரிதமாக செய்யப்பட்டு குற்றவாளியை 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.

பன்றியின் கிட்னி மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது . மருத்துவ உலகின் சாதனை

 Vigneshkumar -   Oneindia Tamil :  வாஷிங்டன்: உலகில் முதல்முறையாகப் பன்றியின் கிட்னியை அமெரிக்க மருத்துவர்கள் மனிதனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.
மருத்துவ உலகின் மாபெரும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
வரலாற்றில் முதல்முறை... மூளைச்சாவடைந்த பெண்ணுக்கு பன்றியின் கிட்னி பொருத்தம்...
பொதுவாக மனிதர்களுக்கு உடல் உறுப்பு செயல் இழக்கும்போது, மற்றவர்களிடம் இருந்து தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள் பொருத்தப்படும். இருப்பினும், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது.
அதேபோல ஒருவரது உடல் அனைத்து விதமான மனித உறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளாது.

Sardar Udham ஜாலியன் வாலாபக்கின் உண்மை வரலாற்றைப் பேசும் படம்... மோடி அரசுக்கு எதிரான விடுதலைப் போராட்டம்!

ஜாலியன் வாலாபக்கின் உண்மை வரலாற்றைப் பேசும் ‘Sardar Udham’ : மோடி அரசுக்கு எதிரான விடுதலைப் போராட்டம்!

கலைஞர் செய்திகள் - ராஜசங்கீதன்இன்றும் நாம் விடுதலைப் போராட்டத்தில்தான் இருக்கிறோம்.
Sardar Udham என்கிற ஒரு இந்திப் படம் அக்டோபர் 16ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. எல்லா தரப்புகளிலிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இப்படம்.
ஜாலியன் வாலாபக் படுகொலை நினைவில் இருக்கலாம். 1919ஆம் ஆண்டு ஜெனரல் டயர் என்கிற ஆங்கிலேய அதிகாரியால் 400க்கும் மேற்பட்டோர் துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட இடம். குழுமியிருந்த ஆயிரக்கணக்கானோர் மீது சரமாரியாக சுடப்பட்டது.
நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜாலியன் வாலாபக் படுகொலை இந்திய சுதந்திர வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனை.  ஜாலியன் வாலாபக் படுகொலையின் பின்னணியில் நிறைய வரலாற்றுச் சம்பவங்கள் இருந்தன.

வியாழன், 21 அக்டோபர், 2021

ஒரே பிரசவத்தில் 3 ஆண், 3 பெண் குழந்தைகள் பெற்ற இலங்கை பெண்

இலங்கை குழந்தைகள்


BBC : இலங்கையில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் மூன்று பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் அடங்கும்.
இப்படியொரு பிரசவசம், இலங்கை மருத்துவ வரலாற்றில் முன்னெப்போதும் பதிவாகவில்லை என்று தெரிய வருகிறது.
அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண்ணொருவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்கை மூலம் இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.
கொழும்பிலுள்ள 'நைன்வெல்ஸ்' (Ninewells) எனும் தனியார் வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவைக் கடந்த வேலையில் இரவு 12.16க்கும் 12.18க்கும் இடைப்பட்ட நேரத்தில் பிறந்துள்ளதாக பிபிசி தமிழுக்கு அந்த வைத்தியசாலையின் சிரேஷ்ட செயற்பாட்டு முகாமையாளர் சுதந்த பீரிஸ் தெரிவித்தார்.

வைகோ மகனுக்கு எதிர்ப்பு- ம.தி.மு.க. மாநில நிர்வாகி ஈஸ்வரன் ராஜினாமா

மாலைமலர் : துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கோவை:  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் துரை தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பதவி வழங்கப்பட்டதாக வைகோ அறிவித்தார்.

பாஜக கல்யாணராமனுக்கு “ஜாமின் கிடையாது” : மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

“ஜாமின் கிடையாது” : தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் கல்யாணராமன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கலைஞர் செய்திகள்  : பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாணராமனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ச்சியாக அவதூறு கருத்துகளை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாணராமனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் தொடர்ந்து மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கையில் இருந்து 130 புத்த துறவிகள் வருகை..!! புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு

தினகரன்  : இலங்கையில் இருந்து 130 புத்த துறவிகள் வருகை..!!  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் சர்வதேச தரத்தில் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்துள்ளார்.
விழா மேடையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதி ஆதித்யா சிந்தியா, அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சர்வதேச புத்தமத யாத்திரைத் தலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்படும் குஷிநகர் விமான நிலைய திறப்பில் இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்சே தலைமையில் 5 அமைச்சர்களுடன் 130 புத்த துறவிகள் பங்கேற்க வருகை தந்துள்ளனர்.

கடலில் உயிரிழந்த மீனவர் ..மத்திய வெளியுறவுத்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20/10/2021) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
 "இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவக் கப்பலை விரட்டி பிடிக்க முயற்சித்த போது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரைக் கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (20/10/2021) கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கடந்த 18/10/2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியதாகவும்,

இயக்குனர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு

BBC : சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்ட புகாரில் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்வதாக பலமுறை புகார் தெரிவித்தும், இதனை அனுசரித்து செல்லும்படி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தினர் தன்னிடம் கூறியதாக மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்தது, மாணவி புகார் தெரிவித்தும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றை குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு உறுதி செய்திருக்கிறது.
போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 5 பேர் தலைமறைவாக இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானங்கள் உள்ளன. இங்கு நீர் நிலைகளையும், அரசு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்‌ பேரில் மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது கிரிக்கெட் மைதானத்திற்கு இந்த தடைகள் நீக்கப்பட்டு மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புதன், 20 அக்டோபர், 2021

FaceBook பெயரை மாற்ற முடிவா? : அதிரடி அறிவிப்பை வெளியிடப் போகும் ஃமார்க் - என்ன காரணம்?

 கலைஞர் செய்திகள்  : ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்குத் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பலகோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக ஃபேஸ்புக் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாகத் தொடர்ச்சியாகப் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அப்போது எல்லாம் ஃபேஸ்புக் நிறுவனம் மறுப்பு ஒன்றை மட்டுமே தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கூட ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6 மணி நேரம் முடங்கியது. பின்னர் இந்த பிரச்சனையை ஃபேஸ்புக் சரிசெய்தது. இப்படி முடங்கிய அடுத்த இரண்டு நாளிலேயே மீண்டும் ஒரு மணி நேரம் ஃபேஸ்புக் முடங்கியது.

பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கைது

 புதிய தலைமுறை -  Sinekadhara :  உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியை போலீசார் கைதுசெய்தனர்.
போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தை சந்திக்க பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார். ஆக்ரா சென்றபோது கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்தி பிரியங்கா காந்தியை உத்திரபிரதேச காவல்துறையினர் கைதுசெய்தனர். பிரியங்கா காந்தி அனுமதி பெறாததால் ஆக்ரா செல்ல அனுமதிக்கமுடியாது என காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. மேலும் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்திருக்கிறது. ஆனால், தான் நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் உள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டியபின் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.