சனி, 23 அக்டோபர், 2021

சுதா சந்திரன் டெல்லி விமான நிலையத்தில் அவமதிப்பு! மாற்று திறனாளிக்ளுக்கு விமான நிலையங்களில் வசதிகள் இல்லை

மத்திய பாதுகாப்புப் படை மன்னிப்பு

Rayar A  --    Oneindia Tamil :   டெல்லி: பிரபல நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன் தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் அவமானப்படுவதாக பிரதமர் மோடிக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தார்.
விமான நிலையம் போன்ற முக்கியமான இடங்களில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை என்ற அவலம் நாட்டில் நிலவுவதாக பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறி இருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ' நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் சுதா சந்திரன், ஒரு நடிகை, நாட்டியக் கலைஞர். செயற்கைக் கால்களைக் கொண்டு நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன்.
நாடு என்னை நினைத்துப் பெருமிதம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தொழில்முறை பயணம் செல்லும்போது,, விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறேன், என் செயற்கை மூட்டு உறுப்பை அகற்றி அவர்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அது மனிதனால் சாத்தியமா மோடிஜி? நமது நாடு இதைப் பற்றி பேசுகிறதா? நமது சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்' என்று கூறி இருந்தார்.

மத்திய பாதுகாப்புப் படை மன்னிப்பு மத்திய பாதுகாப்புப் படை மன்னிப்பு இவரின் கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் ஆதரவு பெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் சுதா சந்திரனிடம் மத்திய பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படை வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறுகையில், சுதா சந்திரன், உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மிகவும் வருத்தம் தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே பிராஸ்தடிக்ஸ் பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.

உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட பெண் அதிகாரியை விசாரிக்கிறோம். எந்தப் பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருக்க ஊழியர்களுக்கு எங்கள் விதிமுறைகள் குறித்து மீண்டும் விளக்குவோம்' என்று மத்திய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: