சனி, 16 அக்டோபர், 2021

பிரிட்டிஷ் எம்.பியை குத்திக் கொலை செய்த இஸ்லாமிய பயங்கரவாதி ..சோமாலியாவை சேர்ந்தவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்

  Veerakumar  -  Oneindia Tamil :  லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற எம்.பி. டேவிட் அமெஸ் என்பவர் பட்டப் பட்டப்பகலில்  ஒரு இஸ்லாமிய பங்கரவாதியால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. டேவிட் அமெஸ். 69 வயதாகும் மூத்த எம்பியாவார் .
 இவர் நேற்று எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அந்தப் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை சந்தித்தார்.
அப்போது திடீரென ஒரு இளைஞர் டேவிட் அமெஸை கத்தியால் குத்தினார்.
பலமுறை அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்ததும், அங்கு வந்த போலீஸார் அந்த மர்ம நபரைக் கைது செய்தனர்.
அந்த நபருக்கு 25 வயது சோமாலியா நாட்டை சேர்ந்தவர் உறுதி செய்தனர்
இதனிடையே டேவிட் அமெஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஐந்து வருடங்களில் இரண்டாவது முறையாக, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் பொது இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.   

for news link click   killer was Muslim man aged 25 Somali  

முதல் கட்ட விசாரணையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அமைப்புக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவை தடுக்கும் நோக்கத்தில் ..15 பவுன்சர்கள், 500 பேரை அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாதுகாப்பு போட்ட OPS-EPS.

 tamil.asianetnews.com  - Ezhilarasan Babu  : ஒரு வேளை சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தால், அவரை தடுக்கும் நோக்கில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, வெங்கடேஷ் பாபு பெஞ்சமின், பா.வளர்மதி உள்ளிட்டோர் அதிமுக அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா இன்று வருகை தந்ததை யொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் 15 பவுன்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒருவேளை சசிகலா அதிமுக அலுவலகம் நோக்கி வரும் பட்சத்தில், அவரை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறையிலிருந்து விடுதலையானயாகி எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1233 பேருக்கு தொற்று உறுதி .. சென்னை, கோவை, ஈரோட்டில் பாதிப்பு அதிகம்

 Velmurugan P -  Oneindia Tamil :  சென்னை : தமிழகத்தில் அக்டோபர் 16ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1,233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,434 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 15,238 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 15,022 ஆக குறைந்துள்ளது.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1200 என்கிற நிலையில் உள்ளது.
கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

சோனியா காந்தி உறுதி : காங்கிரஸ் கட்சிக்கு நானே முழு நேர தலைவர்

Jeyalakshmi C  -   Oneindia Tamil :   டெல்லி: ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை என்றும் கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் நேர்மையான விவாதம் வேண்டும் என்றும் சோனியாகாந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியது காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி இதனைத் தெரிவித்துள்ளார். நான் சொல்வதற்கு நீங்கள் அனுமதித்தால், முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி என்ற மத்திய அரசின் தொடர் பிரச்சாரம் நம்பக்கூடியதாக இல்லை.
நமக்கு தெரிந்தவரை பொருளாதார மீட்பு என கூறி தேசிய சொத்துக்களை விற்பதே மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி என்றும் மத்திய அரசை அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த பிறகு , கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை சோனியா காந்தி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

முரட்டுதனமாக பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்.. பரிதாபமாக உயிரிழந்த இருளர் இனப் பெண் இளம்பெண்..! செங்கல்பட்டு மாவட்டம்

முரட்டுதனமாக பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்.. பரிதாபமாக உயிரிழந்த  இளம்பெண்..! | Woman Rape killed...15 year old boy Arrest
tamil.asianetnews. - vinoth kumar  : செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே மலைமுகட்டுப் பகுதியில் இருளர் இனப் பெண்ணை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்பெண்ணின் மகன் தனது தாயை காணவில்லை என்று பல்வேறு இடங்களில்  தேடிக்கொண்டிருந்தார். அப்போது, புதர் அடங்கிய பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் மயங்கி இருப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்தான்.
சிறுவன்  பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே மலைமுகட்டுப் பகுதியில் இருளர் இனப் பெண்ணை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்பெண்ணின் மகன் தனது தாயை காணவில்லை என்று பல்வேறு இடங்களில்  தேடிக்கொண்டிருந்தார். அப்போது, புதர் அடங்கிய பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் மயங்கி இருப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்தான்.

'ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத் தலைவர் நியமனம்'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

உருவாகிறது தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம். - #DMK4TN

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று (15/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, 15 அக்டோபர், 2021

நோர்வேயில் அம்பு வில் மூலம் தாக்குதல் பலர் காயம் ஐவர் உயிரிழப்பு

 jayanewslive.com : நார்வேயில் வில் அம்புகளை எய்து பலரை கொலை செய்த கொடூர சம்பவம் - மர்மநபர் கைது
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் காங்ஸ்பெர்க் நகரில், மர்மநபர் ஒருவர் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் வில் மூலம் அம்புகளை டன் வந்த எய்தி தாக்கியுள்ளான்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், போலீசார் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள மக்களை வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

பிரிட்டிஷ் எம்.பி., கத்தியால் குத்தி கொலை.. பட்டப்பகலில் தேவாலயத்தில் கொடூரம்

 Velayuthan Murali  - Samayam Tamil  : பட்டப்பகலில், சர்ச்சில் எம்.பி.,யை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பிரிட்டன் நாட்டில், தொகுதி மக்களை சந்திக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் என்பவரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது கட்சியைச் சேர்ந்தவர், டேவிட் அமெஸ். 69 வயதாகும் இவர், எசெக்ஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
டேவிட் அமெஸ், ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில், தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்பது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமையான இன்று, எசெக்ஸ் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில், பொது மக்களை சந்திப்பதற்காக வந்தார்.

"எனது அண்ணன் அழகிரி லயோலா கல்லூரியில் படித்தவர்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நக்கீரன் செய்திப்பிரிவு  :  இன்று (15/10/2021) மாலை சென்னையில் உள்ள லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் அதி
நவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். லீபா என்னும் பெயரிடப்பட்ட இந்தக் கட்டடமானது புதிய வடிமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவால் கட்டப்படுள்ளது.
இந்தக் கட்டட திறப்பு விழாவின்போது கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, எழிலன் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., சேவியர் பிரிட்டோ (கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் தலைவர்), அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

ரத்தன் டாடா ஏர் இந்தியாவை கையகப்படுத்தியதில் சந்திரசேகரன் பங்கு .. ரத்தன் டாடா பேட்டி

ரத்தன் டாடா

Prasanna Venkatesh -  GoodReturns Tamil   :  மொத்தம் ரூ.7.43 லட்சமாம்! 60,000 ரூபாய் கடனுடனும், தினமும் 20 கோடி ரூபாய் நஷ்டத்துடனும் இயங்கி வந்த ஏர் இந்தியாவை எப்படியாவது விற்பனை செய்தாக வேண்டும் என மத்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தது.
தொடர் தோல்வியின் காரணமாக கடந்த முறை விற்பனை செய்யும் அளவீட்டை மாற்றிய போது 5 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு டாடா சன்ஸ் குழுமம் ஏலத்தில் வெற்றிப்பெற்று ஏர் இந்தியாவை கைப்பற்றியுள்ளது.
இந்த முயற்சிக்கு யார் காரணம் தெரியுமா..?
ரத்தன் டாடா சொன்னதை பாருங்க. ஏர் இந்தியா-க்கு போட்டியாக ஆகாஷ் ஏர்லையன்ஸ்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு ஓகே சொன்ன அரசு..! டாடா சன்ஸ் - டாடா டிரஸ்ட் டாடா சன்ஸ் - டாடா டிரஸ்ட் டாடா குழுமத்தில் இருக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்களின் மொத்த ஹோல்டிங் நிறுவனம் தான் டாடா சன்ஸ். இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் ஒரு அமைப்பு தான் டாடா டிரஸ்ட். இது டாடா குடும்பத்திற்கு சொந்தமானது. 


இந்த டாடா டிரஸ்ட் நிறுவனத்திற்கு தலைமை வகிப்பவர் தான் இந்தியாவின் தலைசிறந்த வர்த்தக தலைவர் ரத்தன் டாடா.

தலித் மாணவரை அடித்து உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது . கடலூர் மாவட்டத்தில்

தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர்


zeenews.india.com : கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
கடலூர் (Cuddalore) மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு அரசுப் பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவன் (School Student) ஒருவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்தார். இதனால் கடுப்பான ஆசிரியர் அவரை முட்டிபோட வைத்துள்ளார்.
பின்னர் அங்கு இருந்த பிரம்பால் அந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அந்த ஆசிரியர் இதோடு நிற்காமல் அந்த மாணவரை தனது கால்களால் எட்டியும் உதைத்ததுடன் இழிவாக பேசி மோசமாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக மாணவர் ஒருவர் வீடியோ பிடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த காட்சியை படம் பிடித்த மாணவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது மாணவரை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தடை நீங்கியது: கோவில்கள் திறப்பு- தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்

 மாலைமலர்  : சென்னை:  கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் இன்று முதல் அளிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு தளர்வில் கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தடுப்பு வேலி அமைத்து பக்தர்களை நிறுத்தி தனித்தனியாக தரிசனத்துக்கு அனுமதித்தனர். பக்தர்கள் கூட்டமாக சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பல மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஆர்வமாக வந்தனர்.

என் தந்தை உட்பட 28 ஆண்கள் என்னுடன் வன்புணர்வு கொண்டுள்ளனர்.. பகுஜன் . சமாஜ்வாதி அரசியல்வாதிகள் உட்பட ... உத்தர பிரதேசம் 17 வயது பெண்.

 tamil.asianetnews.com  - Ezhilarasan Babu : மேலும், ஒருமுறை அந்த பெண் தன் மாமா வீட்டிற்கு சென்றபோது, ​​அங்கே அவரது உறவினர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஒரு கட்டத்தில் அவளுடைய மாமா அவளை சிலருக்கு விற்க முயன்றார், ஆனால் அவள் அங்கிருந்து தப்பித்த தாகவும் காவல் துறையிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து லலித்பூர் எஸ்பி நிகில் பதக் கூறுகையில் 'இது மிகவும் உணர்ச்சிபூர்வமாக வழக்கு. நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்.
தனக்கு ஏற்பட்ட இந்த கொடூரத்திற்கு முழு காரணம் தனது தந்தைதான் என அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் லலித்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் சிலரும் அடங்குவதாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். 

சாம்பார் நல்லா இல்ல” : தாய், தங்கையை சுட்டுக்கொன்ற இளைஞர் - கர்நாடகாவில்

 கலைஞர் செய்திகள் : சாம்பார் சரியில்லை என்ற காரணத்தால் வீட்டில் தகராறு ஏற்பட்டு தாய் மற்றும் தங்கையை இளைஞர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்புரா அருகே குடகோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (24) நேற்று இரவு குடித்துவிட்டு வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளார்.
அப்போது சாம்பார் ருசியாக இல்லை என்ற காரணத்தால் தகராறு ஏற்பட்டதில், தாய் மற்றும் தங்கையை தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கி எடுத்து சுட்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே தாய் பார்வதி (42) மற்றும் தங்கை ரம்யா (19) ஆகியோர் உயிரிழந்தனர். வெளியில் சென்றிருந்த தந்தை வீட்டுடு வந்து மனைவியும் மகளும் கொலையுண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், சித்தாப்புரா காவல் நிலைத்தில் தன் மகன் மீது புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், மஞ்சுநாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 14 அக்டோபர், 2021

மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்கு திரும்பும் அமுதா ஐ.ஏ.எஸ்.!

 நக்கீரன் :  பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவரும் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்புகிறார்.  1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்ப மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் தடைகளைத் தகர்த்து சாதித்தவர் என பெயர் பெற்றவர் அமுதா.
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுதந்திரமாக உலவிய காலகட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சார் ஆட்சியராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ்., அடர்ந்த காடுகளுக்குச் சென்று உள்ளூர் மக்களைச் சந்தித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர்.

பிரதமர் மகிந்தா ராஜபக்ச வீட்டில் சுப்பிரமணியன் சாமி நவராத்திரி கொண்டாட்டம்

May be an image of 3 people, people standing and indoor
பிரதமருக்கு அருகில் தரையில் சு.சாமி

vishnupriya R  -   Oneindia Tamil :  கொழும்பு: இலங்கை பிரதமர் ராஜபக்ச வீட்டில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தையொட்டி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார்.
நவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அது போல் இலங்கையிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நாளை விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலரியில் உள்ள மாளிகையில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டார்.

YGP மதுவந்தி 1,21,30,867 ரூபாய் கடனை செலுத்தாமல் ஏய்ப்பு? வீட்டிற்கு அதிகாரிகளை வீடு சீல் வைப்பு

கலைஞர் செய்திகள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் : கடனை கட்டாமல் இழுத்தடித்தாரா? - நடந்தது என்ன?
பிரபல ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பி கட்டாத காரணத்தினால், பா.ஜ.க நிர்வாகியும் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பா..ஜக பிரமுகரும் நடிகையுமான நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும் நடிகை மதுவந்தியின் வீடு ஒன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இந்த வீட்டை வாங்குவதற்கு கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளார்.
ஆனால் கடன் வாங்கி சில மாதங்கள் மட்டுமே வாங்கிய கடனுக்கான தவணைகளை கட்டியுள்ளார்.
மேலும் வாங்கிய கடனுக்கு வட்டியையும் தவனை பணத்தையும் கட்டாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கி அதிகாரிகள் மதுவந்தி வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் அசலையும் சேர்த்து ரூபாய் 1,21,30,867 குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் காபூலில் இருந்து விமான இயக்கத்தை நிறுத்தியது.. தலிபான்களின் அச்சுறுத்தல்

 மாலைமலர் : ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல் போன்ற தலிபான் தலையீட்டால் காபூலில் இருந்து விமான இயக்கத்தை நிறுத்தியது பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி, அதன்பின் ஆட்சியை பிடித்தனர். இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடு சென்றுவிட்டனர். வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விமான போக்குவரத்தை நிறுத்தின.
பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்து தலிபான் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் காபூலில் இருந்து விமானங்களை இயக்கி வந்தது. இந்த ஒரு விமான நிறுவனம்தான் சர்வதேச விமானங்களை இயக்கி வந்தது.
இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன் அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களை திரட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பம்பரமாக சுழலும் தி.மு.க MPக்கள்!

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களை திரட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பம்பரமாக சுழலும் தி.மு.க MPக்கள்!

கலைஞர் செய்திகள் : பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவுக் கோரி வருகின்றனர் தி.மு.க. எம்.பிக்கள்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்யப்படும் என தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல் கட்ட நடவடிக்கையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

275 படங்களில் நடித்து சிவாஜி கணேசன் இயக்கிய ஒரே படம் ரத்தபாசம் .. வெற்றி படம்.

 cinemapettai.com  :  சிவாஜி கணேசன் என்று கூறுவதை விட நடிகர் திலகம் என கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழ் சினிமாவின் அடையாளமாகவே வாழ்ந்து வந்த சிவாஜி உயிருடன் இல்லை என்றாலும், அவர் நடித்த படங்கள் மூலமாக நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு சிறந்த நடிகர் சிவாஜி மட்டுமே.
பராசக்தி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கணேசன் தமிழில் மட்டும் சுமார் 275 படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் 10, ஹிந்தியில் 2, மலையாளத்தில் 1 என மொத்தம் 288 படங்களில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 அக்டோபர், 2021

மலையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் .. சகோதரன் கைது .. இரகசியமாக பெட்ரோல் வாங்கினார்

 இராகலை  முதலாம் பிரிவு தீவிபத்தில் உடல்  கருகி உயிரிழந்த சம்பவத்தில்  அக்குடும்பத்தை சேர்ந்த மகன் தங்கையா ரவீந்திரன் என்பவர் கைது செயப்பட்டுள்ளார்
இவர் சம்பவம் நடந்த அன்று ராகலை பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கியதாக தெரிகிறது  .. மேலும் வீட்டின் தீயை அணைக்கவந்த அயலவர்களிடம் வீட்டில் யாரும் இல்லை என்று இவர் பொய் கூறியதாகவும் தெரிகிறது
மேலும் கிடைக்கப்பெற்ற இதர ஆதாரங்களின் அடிப்படையிலும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு வலப்பனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

Tamil Mirror: நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸ் தண்டவாளத்தில் உறங்கிய அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழப்பு

 தினமலர் : பாரீஸ்: பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகர் பியாரிட்ஸ். இது பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான வழித்தடமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள், இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.
பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6:00 மணிக்கு இந்த தண்டவாளத்தில் வந்த ரயில் அவர்கள் மீது ஏறியது. இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு கால் உடைந்தது. இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

 நக்கீரன் : இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்மோகன் சிங், கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயதாகிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்- 1,145 இடங்களில் வென்று தி.மு.க. இமாலய சாதனை

May be an image of text that says 'புதிய ஊரக உள்ளாட்சித் தேர்தல் தலைமுறை 2021 ண் ன உடனுக்குடன் மாவட்ட கவுன்சிலர்கள் 140/140 முன்னிலை நிலவரம் நேரம் 09.10AM திமுக 139 அதிமுக MET EN 1 அமமுக மநீம நாம் தமிழர் கட்சி பாமக தேமுதிக S பிற Follow 13|10/2021 www.puthiyathalaimurai.com'

 மாலைமலர் :  மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் தி.மு.க. கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
சென்னை:  மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 6-ந்தேதியும், 9-ந்தேதியும் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடந்தன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.
இதன் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அனைத்து மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளும் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இது நீடித்தது.
மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 138 இடங்களை கைப்பற்றி உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தில் அ.தி.மு.க. வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது. இதே போல் வேலூர் மாவட்டத்திலும் மொத்தம் உள்ள 14 இடங்களையும், ராணிப்பேட்டையில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், கள்ளக்குறிச்சியில் மொத்தம் உள்ள 19 இடங்களையும், திருப்பத்தூரில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், நெல்லையில் மொத்தம் உள்ள 12 இடங்களையும், தென்காசியில் மொத்தம் உள்ள 14 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 

உள்நாட்டு விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்

latest tamil news

தினமலர் : புதுடில்லி: கோவிட் காரணமாக உள்நாட்டு விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. வரும் 18ம் தேதி முதல் வழக்கம் போல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச்சில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து விமான சேவைகளும், மார்ச், 23லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன.
பின், வைரஸ் பாதிப்புகள் குறைந்ததை தொடர்ந்து, மே மாதம், உள்நாட்டு பயணியர் விமான சேவைகள் மட்டும் குறைந்தளவு கட்டுப்பாடுகளுடன் துவங்கப்பட்டன.