புதன், 13 அக்டோபர், 2021

மலையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் .. சகோதரன் கைது .. இரகசியமாக பெட்ரோல் வாங்கினார்

 இராகலை  முதலாம் பிரிவு தீவிபத்தில் உடல்  கருகி உயிரிழந்த சம்பவத்தில்  அக்குடும்பத்தை சேர்ந்த மகன் தங்கையா ரவீந்திரன் என்பவர் கைது செயப்பட்டுள்ளார்
இவர் சம்பவம் நடந்த அன்று ராகலை பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கியதாக தெரிகிறது  .. மேலும் வீட்டின் தீயை அணைக்கவந்த அயலவர்களிடம் வீட்டில் யாரும் இல்லை என்று இவர் பொய் கூறியதாகவும் தெரிகிறது
மேலும் கிடைக்கப்பெற்ற இதர ஆதாரங்களின் அடிப்படையிலும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு வலப்பனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

Tamil Mirror: நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, இத்தீப்பரவல் இடம்பெற்ற போது, குறித்த வீட்டிலிருந்த 35 வயது மகன் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் நடந்த வீட்டில் உயிரிழந்த ஒருவயது சிறுவனுக்கு நேற்று (07) முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: