செவ்வாய், 12 ஜூன், 2018

உறுப்பு மாற்று சிகிச்சையில் முறைகேடு ... நூற்றுக்கு மேற்பட்ட உறுப்புகள் வெளிநாட்டவர்க்கு விற்பனை? கோடிகள் கைமாறியிருக்க வாய்ப்பு?


சென்னை: தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு பற்றி சிபிஐ வீசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என  ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மோடி வணங்கும் #RSS குரு மஹாராஜ் இன்று தன்னை தானே சுட்டு கொன்றாராம்.. நெருப்பு இல்லாமலா புகை?

Venkat Ramanujam : ஆன்மிக குரு அர்எஸ்எஸ் கொள்கை குன்று மஹாராஜ் ..
இவரை தனது குரு என்று சொல்லி கொள்பவர் மஹராஸ்டர பாஜக முதலவர் படாவிஸ் ..
ஆன்மிக குரு மஹாராஜ் அர் எஸ் எஸ் தலைவர் பகவத்க்கே குங்குமம் பூசும் வல்லமை.. மோடியே குரு மஹாராஜை பார்த்து குனிந்து கும்பிடும் ஆளுமை..
மஹாராஜ் தான் அன்னா ஹாசரே லோக்பால் விஷ்யத்திலே முன் நின்று
தூபம் போட்டு காங்கிரசுக்கு எதிரா காய் கனி பிட்சா பர்கர் நகர்த்திய சாணக்கியர் ..
சமீப காலமாக எதோ பிணக்கு .... நான் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று பேட்டி கொடுத்து மஹாராஜ் ஒதுங்கி கொள்ள .. மத்திய பிர்தேஷ் பாஜக முதலவர் சவுகான் இவருக்கு மந்திரி பதவி ஸ்டேடஸ் கொடுத்தும் மறுத்து கொள்ள..
இன்று திடிர் என்று இந்த 50வயசு சாமியார் தன்னைதானே சுட்டு கொன்று செத்தார் என்று பாஜக மத்தியபிரதேச மாநில டிஜிபி சொல்ல...
காங்கிரஸ் இது தற்கொலை அல்ல ..போடுடா சிபிஐ விசாரனையை என்று மத்தியபிரதேசத்தில் வாளை பாகுபலி ஸ்டைலில் சுழற்ற ..
அரசியல் சூடு அங்கே தகிக்கீது ..🔥

சாமியார் பைய்யூஜி மகராஜ் தற்கொலையாம்? ம.பி. பாஜக அரசே காரணம் ...காங்கிரஸ் கட்சி.

மனஅழுத்தத்தினால் ஆன்மிகத் தலைவர் தற்கொலைமின்னம்பலம்: மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மக்கள் சேவையாற்றிய ஆன்மிகத் தலைவரான பைய்யூஜி மகராஜ், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் சமூகப்பணிகள் ஆற்றி வந்தவர் பைய்யூஜி மகராஜ். ம.பி.யிலுள்ள இந்தூரில் இவருக்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விலாஸ்ராவ் தேஷ்முக், கோபிநாத் முண்டே, சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் இவரது சீடர்களாக இருந்து வந்தனர். தன்னை ஆன்மிகக் குருவாக அறிவித்துக்கொண்ட இவர், அனைவருக்கும் ஆன்மிகம் சார்ந்த அறிவுரைகள் வழங்கினார். ஏழைகளற்ற, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே தனது குறிக்கோள் என்று கூறிவந்தார்.

ஏர்செல் மேக்சிஸ் - ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணிநேர விசாரணை

 ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரத்திடம் இன்று அமலாக்கத்துறை 6 மணிநேர விசாரணை மாலைமலர் : ஏர்செல் மேக்சிஸ் நிதி வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்திடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை நடத்தினர். புதுடெல்லி: ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 3500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்திடம் கடந்த 5-ம் தேதி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்திடம் இன்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதுவோம்- தென்கொரியா அதிபர் நம்பிக்கை

வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதுவோம்- தென்கொரியா அதிபர் நம்பிக்கை
மாலைமலர் :கடந்தகால இருண்ட நாட்களை மறந்துவிட்டு வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதப் போவதாக தென்கொரியா அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார். சியோல்:< சிங்கப்பூரில் இன்று அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்தகால இருண்ட நாட்களை மறந்துவிட்டு வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதப் போவதாக தென்கொரியா அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வடகொரியாவுடன் எப்போதும் இணைந்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜயதாரிணி கண்ணீர் .. ஆவேசம் : சபாநாயகர் தகாத வார்த்தைகள் கூறினார் .

விஜயதரணிசகாயராஜ் மு :vikatan :
சட்டப்பேரவையில் சபாநாயகர் கேட்ட கேள்வியால் ஆவேசமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, பேரவை வளாகத்தில் கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, தனது தொகுதியில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து விஜயதரணி பேசிக்கொண்டே இருந்தார். அப்போது, `நீங்களும் அமைச்சரும் தனியாகப் பேசிக்கொண்டீர்களா’ எனச் சபாநாயகர் கேட்டுள்ளார். அதனால் ஆவேசம் அடைந்த விஜயதரணி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், சபாநாயகரின் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.

காலா – ரீலும் ரியலும்.

சவுக்கு - Jeevanand Rajendran : தளபதி முதல் நாள் படம் பார்க்க ஆரம்பித்ததில்
தொடங்கியது எனது ரஜினி மோகம்.  பார்த்தால் முதல் நாள் இல்லாவிட்டால் பார்ப்பதே இல்லை என்ற முடிவுடன் அனைத்து ரஜினி படங்களையும் பார்த்து விடுவேன். ரஜினி படம் என்றாலே திருவிழா கோலம் தான் கட்டவுட், தோரணம் என்று முதல் ஒரு வாரம் டிக்கெட் வாங்குவதே சாதனை தான்.
காலா எனக்கு ஒரு வித்யாசமான அனுபவமாக அமைந்தது.  ரஜினி படம் 2 ஆவது நாள் இவ்வளவு எளிதாக டிக்கெட் கிடைப்பதில் தொடங்கி திரையரங்கு நிரம்பாத வரை ஒரு ரசிகனாக நான் இப்படி ஒரு நாளை எதிர்பார்க்கவே இல்லை. ஆரவாரம், விசில் சத்தம், சூப்பர் ஸ்டார் டைட்டில் போடும் போது ஏற்படும் கூஸ் பம்ப் என எதுவும் இல்லாமல் அபியும் நானும் படத்துக்கு வந்த மனநிலையில் திரையரங்கு முழுவதும் ஒரே family crowd
ரஞ்சித் படம்னாலே நீலம், அம்பேத்கர் படம், புத்தர் சிலை, தலித் அரசியல் பேசும் புத்தகம்னு ஏதாவது குறியீடு படம் முழுக்க இருக்கும், காலாவில் ரஜினியே ஒரு குறியீடு தான்.

அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்.. சுப்பராயலு கொலை ... தேனீ ஜெயக்குமாரை காப்பாற்றிய ப.சிதம்பரம்

சுப்பராயலுவின் தாய்
தேனீ ஜெயகுமார்
savukkuonline.com :  ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒரு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டபோது, சிபிஐயில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.   அவர்களும் மனிதர்கள்தான்.  சிபிஐ அமைப்பை விட, தமிழக காவல்துறை சிறந்தது என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ஆனாலும், சிபிஐ அமைப்பின் மீதான நம்பிக்கை இன்னும் தகர்ந்து போகவில்லை. இன்றும் எந்த முக்கிய குற்றச் செயலாக இருந்தாலும், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைதான் முதலில் வருகிறது.
சுப்பராயலு
சிபிஐ ஒரு மிகச் சிறந்த அமைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.   பெரும்பாலான விசாரணைகளை அறிவியல்பூர்வமாக செய்யும் பல அற்புதமான அதிகாரிகள் சிபிஐயில் இன்னும் உள்ளனர்.   என் மீதான இரண்டு வழக்குகளையும் சிபிஐ அதிகாரிகள் மிகச் சிறப்பாகவே புலனாய்வு செய்தனர்.  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர்கள் எந்த விசாரணையையும் செய்வதில்லை.
ஆனால் சிபிஐயிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன.  அப்படி ஒரு கருப்பு ஆடு குறித்த புலனாய்வுக் கட்டுரைதான் இது.
சுப்பராயலு.   29 வயது இளைஞன்.  பாண்டிச்சேரியின் சின்னக் கரையாம்புதூர்தான் அவனது சொந்த ஊர்.    காவல்துறையில் சேர வேண்டும் என்பது அவனது கனவு.   காவல்துறையில் வேலை கிடைக்கவில்லை என்பதால், பாண்டிச்சேரி ஊர்க்காவல் படையில் சேர்கிறான் சுப்பராயலு.

சேலம் எட்டு வழிச்சாலை 20,000 ஏக்கர் விவசாய நிலம் பறிக்கப்படும்?

பகுதிகள் "Shyamsundar" - tamil.oneindia.com: தொடரும் எதிர்ப்பு...சேலம் 8 வழி சாலையில் என்னதான் பிரச்சனை?- வீடியோ சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலை காரணமாக மொத்தம் மூன்று மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட உள்ளது. மொத்தமாக அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களின் கைவிட்டு போக உள்ளது.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார். இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சாலையால் பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. இந்த 8 வழி சாலை சென்னையில் இருந்து சேலம் வரை போடப்படுகிறது. இதில் எதிர்புறத்தில் நான்கு வாகனமும், அதற்கு எதிர் புறத்தில் 4 வாகனமும் வரும் வகையில் மிகவும் பெரிய அளவில் சாலை போடப்பட உள்ளது. இந்த சாலைக்காக மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. மொத்தம் 274 கிமீ தூரத்துக்கு சாலை போடப்பட உள்ளது.

மக்கள் அதிகாரம் : “அறவழிப் போராட்டக்காரர்களுக்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்றால், குறி பார்த்து சுட்டவர்களுக்கு?

ராஜு -மக்கள் அதிகாரம் தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட்டுக்கு  எதிரானப் போராட்டம் கா . புவனேஸ்வரிவிகடன் : கா . புவனேஸ்வரி - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தமிழக அரசியலையே அதிரவைத்தது. இதில், 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவிவந்தது. அதன் ஒரு பகுதியாகப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகக் கூறி பலரையும் போலீஸார் கைதுசெய்தனர். இதில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரைக் கடந்த மாதம் 25- ம் தேதி போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், “எந்தக் காரணமும் சொல்லாமல் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரைப் போலீஸார் பிடித்துச் சென்றுள்ளனர். அந்த ஆறுபேரும் கைதுசெய்யப்பட்டு 48 மணிநேரம் ஆகியும் அவர்களுடைய நிலை குறித்து எந்தத் தகவலையும் அவர்களுடைய குடும்பத்தாருக்கோ அல்லது அந்த அமைப்புக்கோ போலீஸார் இதுவரை தெரிவிக்கவில்லை” என்று குற்றஞ்சாட்டியிருந்த மக்கள் அதிகார அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, அந்த ஆறு பேரையும் மீட்க ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து, உடனடியாகக் கைதுசெய்யப்பட்ட அந்த ஆறு பேரையும் போலீஸார் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள பேரூராட்சி ஜெயிலில் அடைத்தனர்.

திராவிடம் என்ன செய்தது ? கழகங்கள் இல்லாத தமிழகம் .. அவாள் ஏன்? டாக்டர்.எழிலன்.நாகநாதன்

திங்கள், 11 ஜூன், 2018

சென்னையில் இருந்து விரட்டி துரத்தப்படும் சேரிவாழ் மக்கள் .. ஒடப்பர் உதையப்பராக வேண்டும் ..

Savitha Munuswamy : காலா திரைப்படம் நமது வாழ்வியலை திரையில் நம் கண் க்க தலித் மக்களுக்காய் நாம் போராட அணியமாகவேண்டும்..!
முன்னே ஓட விட்டு காட்டியது...ஆனால் அதில் கூறப்படும் ஒற்றுமையும், அதன் நீட்சியாக நிலம் எங்களது உரிமை என்று ஒற்றுமையோடு போராடும. அந்த போர்குணத்தை நீங்கள் உணர்ந்தவர்களெனில் சிங்காரச் சென்னைக்கு அசிங்கங்களாய்க் கருதி விரட்டியடிக்கப்படும் நம் சேரிவாழ் மக்களுக்காக நாம் குரல்கொடுத்து போராடுவோம் ..! சென்னைக்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டு துரத்தப்படும் இம்மண்ணின் மைந்தர்களான , பூர்வீக மக்கள் , சென்னை உருவாக காரணமாய் இருந்த உழைக்கும் வர்
நமது முகநூல் சகோதரர் சரவணன் குறிப்பிடுவதைப்போல குன்னூர்ரோடு ஓட்டேரி, ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு, என்ற பெயரில் அப்பகுதியில் காலங்காலமாய் வசித்துவரும் சாலையோர மக்களை அப்புறப்படுத்தி அச்சாலையோர வீடுகளையும் அகற்றி வருகின்றனர்..! பெரும் பணக்காரன்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தைப் போக சொல்லுங்கள் பார்க்கலாம்..! போகாது...இளிச்சவாயன் கூவம் ஓரத்திலும், சுடுகாடு ஓரத்திலும் துரத்தப்பட்டு வாழ்பவன்தான்..இவனுங்களுக்கு..!
சென்னையின் சேரிவாழ் மக்களை சிங்காரச் சென்னை என்ற பெயரில் பல மைல் தூரத்தில் புறாகூண்டைப்போல வீட்டைக்கட்டி எந்தவித அடிப்படை வசதிகள் , போக்குவரத்து, கடைகள், பள்ளிகள், தொழில் வசதிகள் இல்லாத இடங்களில் அடுக்கிவைத்து அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதை தோழர் இசையரசு பல பதிவுகளில் குறிப்பிட்டு கதறி வருகிறார்..

தமிழ்நாட்டில் ஒரு பழங்குடி மாணவருக்குக்கூட எம்பிபிஎஸ் கிடைக்கவில்லை! ..நீட் தீட்டு ...

ஒரு பழங்குடி மாணவருக்குக்கூட எம்பிபிஎஸ் கிடைக்கவில்லை!மின்னம்பலம்: தமிழகத்தில் ஒரு பழங்குடி மாணவருக்குக் கூட எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை என ஆங்கில நாளிதழின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நீட்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் அரசு பள்ளியிலிருந்தோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்தோ ஒரு பழங்குடி இன மாணவருக்குக்கூட எம்பிபிஎஸ் இடம் கிடைக்கவில்லை. அரசு பள்ளியிலிருந்தோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்தோ தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 9 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அல்லது அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

காலாவின் உண்மையான வசூல் விபரம் கண்டுபிடிக்க முடியுமா? அரங்குகளுக்கு மகிழ்ச்சி இல்லை?

மின்னம்பலம் :இராமானுஜம்- மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் -
13 :    தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் என்கிற நடிகர் பாட்ஷா பட வெற்றிக்குப் பின் விஸ்வரூப பிம்பமாகத் திரையுலகினரால் ஆராதிக்கப்பட்டார். பாட்ஷா பட வெற்றி விழாவில் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசியது பற்றி, அன்றைய முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா முன்னிலையில் ஆவேசமாக ரஜினிகாந்த் பேசியதைக் கேட்ட ஊடகங்கள், அவரை அன்று முதல் ரியல் சூப்பர் ஹீரோவாக எழுதத் தொடங்கின. இன்று வரை அது தடையின்றி, சுய பரிசோதனை இன்றித் தொடர்கிறது.
இந்தியிலும் தெலுங்குப் பட உலகிலும் திரைப்படங்களின் வசூல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நேர்மை இன்று வரை தொடர்கிறது. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு நல்ல வழக்கத்தை எந்தத் தயாரிப்பு நிறுவனமும் கடைபிடிப்பதில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைக்குப் பின் இந்த நிலை மாறும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ரஜினிகாந்த் நடித்து வெளியான எந்திரன் படத்தைத் தயாரித்து சன் பிக்சர்ஸ். இந்நிறுவனம் அனைத்துக் கணக்குகளையும் வெள்ளையாகக் கையாளக்கூடியது. அந்நிறுவனமே தமிழ்நாடு வசூல், பட வியாபாரத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியவில்லை. காரணம் தமிழ் சினிமாவில் கையாளப்படும் கறுப்பு வெள்ளை வரவு செலவு கலாச்சாரம்தான்.

இயேசு அழைக்கிறார் என்று ஆயிரம் கோடிகள் கண்ட மோடி ஆதரவு பேந்தகொஸ்த்து தினகரன் குழுமம்

Shalin Maria Lawrence : முதலில் DGS தினகரன் வந்தார்.
ச‌ஃ‌பாரி சூட் போட்டுகொண்டு என்றோ கார் விபத்தில் இறந்துபோன தன் பெண்ணை பற்றி பேசி பேசி ,கண்ணை பிழிந்து பிழிந்து அழுது பல கோடிகளை சம்பாதித்தார்.
பின்பு அவர் மகன் திரு பால் தினகரன் யேசு அழைக்கிறார் என்று காட்டை வளைத்து போட்டு கல்லூரி கட்டி ஆயிரம் ஆயிரம் கோடி சம்பாத்திருக்கிறார்.
தகப்பனும் மகனும் ஏசுவை பேக்கேஜிங் செய்து விற்றனர்.
பாஸ்டர்கள் என்றாலே பாரின் கார், விலையுயர்ந்த மேக் அப் ,இம்போர்டட் துணிமணிகள் என புது ட்ரெண்டை உருவாக்கினார்கள்.
நாடார் பேந்தக்கோஸ்து என்று சொல்லப்படும் புது விதமான நாடார் மத மாபியாகளை உருவாக்கினார்கள்.
நாடு முழுவதும் கத்தோலிக்க மற்றும் CSI பாதிரியார்கள் ஏழை எளியோர் ,நோயுற்றவர்களுக்கு காடுகளிலும் ,பாஜக ஆதிக்க இடங்களில் உயிர் பயத்தோடு சேவகம் செய்து கொண்டிருக்க இந்த ஜாதிய பேந்தக்கோசுதேக்கள் மட்டும் நன்று உண்டு உடுத்தி,தசமபாக காசுகளை ஏப்பம் விட்டு கொண்டிருக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களாக கத்தோலிக்க ஆயர்கள் இந்தியா முழுவதும் பாஜக அரசை வரும் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று மக்களிடம் நோட்டீசுக்கள் விநியோகித்து பாஜகவின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் இந்த ஆசுத்த ஆவி தினகரண் மாற்று குழுவினர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பது ,பாஜக அரசுக்கு ஓட்டு போட தூண்டுவது என்று திருட்டு வேலையில் ஈடுபட்டது கொண்டிருக்கிறது.

சென்னையில் ஒரே நாளில் 16 வழிப்பறி கத்தியால் வெட்டி வழிப்பறி ... அச்சத்தில் பொதுமக்கள்

tamilthehindu :சென்னையில் பொதுமக்கள் தனியாக நடமாட முடியாத அளவுக்கு
வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி செய்கின்றனர். நேற்று ஒரே நாளில் சென்னையில் 16 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னை பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் தொடர் சம்பவங்கள் அடுத்தடுத்த நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறதா சென்னை? என நான்கு நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவிட்டிருந்தோம். ஆனால் அதில் எந்த மாறுதலும் இல்லை, ஆம் பாதுகாப்பற்ற நகரமாக மாறித்தான் வருகிறது சென்னை என்கிற அளவில் சென்னையின் சட்டம் ஒழுங்கு மாறி வருகிறது.
சம்பவம் 1: செகரெடேரியட் காலனியில், கஞ்சா விற்கும் ரவுடிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருவில் வாகனங்களை அடித்து உடைத்து, தகராறில் ஈடுபட்ட சம்பவத்தில் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் தாக்கப்பட்டு போலீஸ் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

G 7 உச்சி மாநாட்டில் ட்ரம்ப் கோபத்தோடு வெளியேறினார் .. ஜஸ்டின் மீது ட்ரம்ப் காய்ச்சல் ,,


‘Special place in hell’: Trump aides hurl insults at Trudeau in unprecedented U.S. attack on Canadian leader By Daniel DaleWashington Bureau Chief Bruce Campion-SmithOttawa Bureau
மாலைமலர்: கனடாவில் நடந்து முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக டிரம்ப் வெளியேறி காட்டமாக ட்வீட் செய்ததற்கு, ஜெர்மனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
#G7 #G7Summit கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த 8, 9 தேதிகளில் நடந்தது. உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது.
ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.< ஆனால், இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக இடதுசாரிகளின் வரலாற்று .... தவறுகள் அல்லது துரோகங்கள்

LR Jagadheesan : கம்யூனிஸ்டுகளைப்பார்த்து “தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே
உண்டியல் கண்டுபிடித்தவர்கள்” என தமிழ்நாட்டு சட்டமன்றத்திலேயே எகத்தாளம் பொங்க ஏகடியம் பேசியவர் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா அம்மையார். அவர் சட்டமன்றத்தில் செய்ததை தமிழிசை தொலைக்காட்சி விவாதத்தில் செய்திருக்கிறார். தமிழக அரசியலில் ஆணவம், அராஜகம், கீழ்மை, வன்மம், வக்கிரங்களில் போயஸ்தோட்ட பெருமாட்டியை இதுவரை யாராலும் மிஞ்ச முடியவில்லை. இனியும் முடியாது.
ஆனால் காலத்தின் கோலம் அப்பேர்கொத்தவரை மீண்டும் மீண்டும் முதல்வராக்க தம் உடல், பொருள், ஆவி, அறிவு என அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் இதே இடதுசாரிகள் என்பது தான் வரலாற்று நகைமுரண். குறிப்பாக 2001 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்கள் செய்த உதவிக்கு அவர்கள் கற்பித்த காரணங்களின் பொய்முகமும் போலித்தனமும் (2001இல் மதசார்பற்ற அரசியல் 2016இல் ஊழல் எதிர்ப்பு) பின்னர் சந்தி சிரித்தன. 

ஆனால் இந்த இரண்டு தேர்தல்களில் இடதுசாரிகள் எடுத்த நிலைப்பாடு முதலில் தமிழக அரசியல் கலாச்சாரத்தை சீரழித்தது; 
பின்னர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பொருளாதார முதுகெலும்பையே முறித்துவிட்டது. 

உத்தர பிரதேசம் குழந்தைகள் உயிர்காத்த டாக்டர் கபில் கானின் தம்பி மீது துப்பாக்கி சூடு .... பாஜக ஆட்சியின் இரத்த வெறியாட்டம்

UP: Gorakhpur Dr.Kafeel Khans brother shot at night, admitted in the hospital உத்தரபிரதேசம், கோரக்பூர் மருத்துவமனையில் பல குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இளைய சகோதரர் ஜமீல், அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார். மூன்று இடங்களில் குண்டு பாய்ந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி... "எங்களை எப்படியும் கொன்றுவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். இப்போ என் தம்பியை சுட்டுள்ளனர்...". - டாக்டர் கஃபில் கான். அந்தக் குடும்பத்துக்கு எத்தனை முறை இன்னல் கொடுப்பீர்கள் காவிகளே ?
 ஏழை குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது குற்றமா ? அந்த மனிதன் மருத்துவனாய் இருப்பது குற்றமா? அந்தக் குடும்பம் இருப்பதுதான் குற்றமா? இது தேசமா?
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பெயிலில் வெளியாகி இருக்கும் டாக்டர் கபீல் கானின் சகோதரர் தற்போது மர்ம நபர்களால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.

பிரபல எழுத்தாளர் சௌபா சிறையில் காலமானார்.

SAVUPAசீவலப்பேரி பாண்டி தொடரை விகடனில் எழுதியவரான பிரபல எழுத்தாளர் சௌபா, சிறையில் காலமானார். சமீபத்தில் அவர் மகனை கொலை செய்ததற்காக, கைது செய்யப்பட்டு சௌபா சிறையில் இருந்தார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார். 55 வயதான எழுத்தாளர்  சவுபா கடந்த மே மாதம் தனது மகன் விபினை கொலை செய்ததாக கைதாகி சிறையில் இருந்தார்.< இந்நிலையில் சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்துவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்

பெ.மணியரசன் மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி

mixim aநக்கீரன் -பகத்சிங் : - காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மீது இன்று மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  சென்னை வருவதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு இன்று இரவு சென்றபோது தஞ்சாவூரில் இரண்டு மர்ம நபர்கள்
மணியரசனை தாக்கியுள்ளனர்.  காயமடைந்த மணியரசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்த்தேசிய பேரியக்க தலைவரும் காவிரி உரிமை மீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் காவிரி பிரச்சனை தொடங்கி மண்ணை மலடாக்கும் மரபணுமாற்ற விதைகள், காவிரி பகுதியை பாமவனமாக்கும் ஹைட்ரோ கார்ப்பன், மீத்தேன் திட்டம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை உடனுக்குடன் கண்டித்து வந்தார்.
   இன்று கோவையில் புதியதலைமுறை தொலைக்காட்சி க்கு ஆதரவாகவும் பாஜக வுக்கு எதிராகவும் அறிக்கை கொடுத்தார். இந்த நிலையில் இரவு 9.35 மணிக்கு சென்னை செல்வதற்காக தனது வீட்டில் இருந்து தோழர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நீண்ட தூரத்திலிருந்து அவர்களை கண்காணித்து வந்த 2 மர்ம நபர்கள் காவேரி நகரில் இருட்டுப் பகுதியில் வரும் போது மணியரசன் கையில் வைத்திருந்த பையை இழுத்து அவரை கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். இதில் மணியரசன் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே வினோதகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

காலா ஒரு Cult Hit அரக்கர் காவியம்! .. காலம் கடந்தும் காவிகளுக்கு பயம் காட்டும்

படம் பேசும் அரசியல் காலத்தின் தேவை. அதை ரஜினி பேசியதுதான் பலவீனம். குறிப்பாக தூத்துக்குடி ரஜினி பேட்டிக்குப் பிறகு அவர் மரியாதை, மாஸ் மொத்தமாக தமிழகத்தில் சரிந்து விழுந்து விட்டதை கண்கூடாக தியேட்டர்களில் பார்க்க முடிகிறது. காவியை மட்டுமல்ல, காவி நிறத்தில் எது இருந்தாலும் தமிழ்நாடு இடது கையால் ஒதுக்கும்

Ashok.R : காலாவின் கதை பழையது. ஆனால் அதன் அரசியல் புதியது. அதில் உள்ள நேர்மை புதியது. அதுதான் காலாவை தனித்துக் காட்டுகிறது. காலம்காலமாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அது சார்ந்த கதாப்பாத்திரங்களும் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளில் காட்டப்படும், பேசப்படும் அரசியல்தான் அவற்றை வேறுபடுத்திக் காட்டுகிறது. காலா, அரக்கர் இனத்தின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் அரக்கர் காவியம்!
காலா ரஜினி, மக்களை திரட்டி போராட்டம் செய்கிறார். அதில் போலீசால் கலவரம் தூண்டப்பட்டு துப்பாக்கிச்சூடு நடக்கிறது. அது குறித்து ஒரு மேட்டுக்குடி பெண்ணிடம் கருத்து கேட்கிறார்கள். "போராடுறவங்கள்ள 60% கிரிமினல்ஸ்," என நிஜ ரஜினி தூத்துக்குடியில் சொன்னதைப் போல பதில் சொல்கிறார்! காலா ரஜினி, காவி பக்தரான நிஜ ரஜினியின் அரசியலுக்கு எதிராக அரசியல் பேசுகிறார். செயல்படுகிறார். விவசாயிகளோடு தோளோடு தோள் நிற்கும் நானா படேகர் காவி வில்லனாக நடித்திருக்கிறார். அதாவது இருவரும் தத்தமது நிஜ வாழ்க்கைக்கு நேர் எதிரான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

கோவை .. புதிய தலைமுறை விவாதத்தில் ஆர் எஸ் எஸ் இன் அடாவடி அராஜகம் .. நேரடி சாட்சியம் ...

அமீர்  கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன… போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன… அப்போது போலீசின் துப்பாக்கி எங்கே சென்றது.. என கேட்டு முடிக்கும் முன் அரங்கின் பல்வேறு பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்த பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேடையை நோக்கி ஓடினர்… எங்களை பற்றி அமீர் பேசக்கூடாது என உடனே வேளியேற வேண்டும் என பாய்ந்தனர். அங்கிருந்து காவல்துறை மற்றும் புதிய தலைமுறை பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்… தொடர்ந்து அராஜகத்தில் 
வழக்கறிஞர் தோழர் கலையரசு பதிவு...
கோவை, புதியதலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி பதிவின் போது நடந்தது என்ன ?
கோவையில் நடை பெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை வெளியேற்றுவதற்கு பதிலாக நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்கச் செய்தனர்.
கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் நேற்று ( வெள்ளியன்று ) மாலை 6மணியளவில் துவங்கியது. தொடர் போராட்டங்கள் : அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களுக்காகவா ? என்ற தலைப்பில் துவங்கியது. இதில் அரசியல் காரணங்களுக்காக என்று பேச பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக சார்பில் செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக செ.கு.தமிழரசன் ஆகியோர் ஒரு பக்கத்திலும், மறு புறத்தில் அடிப்படை தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவே என்று பேசுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கொங்கு நாடு இளைஞர் பேரவையின் உ.தனியரசு, இயக்குநரும், நடிகருமான அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் காத்திகைசெல்வன் நெறிப்படுத்தினார்.

ஞாயிறு, 10 ஜூன், 2018

உச்சா நடிகருக்கு ஒல்லி மருமகனே ஆப்பு வைத்தாரா? தூத்துக்குடிக்கு துரத்தி சாத்துகுடியாக்கியது யார்?

சென்னை: ஒல்லி நடிகர் தனது மாமனாருக்கே ஆப்பு வைத்துவிட்டார் என்று
தான் பேச்சு கிளம்பியுள்ளது.
ஒல்லி நடிகர் தனது மாமனாரான உச்ச நடிகரின் படத்தை தயாரித்தார். அவராக ஒன்றும் தயாரிக்கவில்லை. மாமனார் கூப்பிட்டுக் கேட்டதால் தயாரித்தார். இந்த தகவலை மாமனார் தான் தெரிவித்தார். மாமனாரின் படத்திற்கு நல்ல விமர்சனம் வந்தும் வசூல் சரியாக இல்லை.
 இதே இயக்குனருடன் சேர்ந்து உச்ச நடிகர் பணியாற்றிய முந்தைய படத்திற்கு அதன் தயாரிப்பாளர் தாம் தூம் என்று விளம்பரம் செய்தார். மனுஷன் என்னமா விளம்பரம் செய்கிறார் என்று அனைவரும் வியந்தார்கள். ஆனால் உச்ச நடிகரின் தற்போதைய படத்திற்கு சரியாக விளம்பரம் செய்யவில்லை.
 படத்தை விளம்பரம் செய்வதில் ஒல்லி கில்லி என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் படங்களை அவர் விளம்பரம் செய்யும் விதமே தனி. விளம்பரம் செய்வது எப்படி என்று ஒல்லியிடம் கற்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு மனிதர் வேலை செய்வார்.
  விளம்பரம் செய்யும் வித்தைகள் அறிந்திருக்கும் ஒல்லி தனது மாமனாரின் படத்திற்கு ஏனோ சரியாக விளம்பரம் செய்யவில்லை. மாமனாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் உச்ச நடிகரோ வேண்டாம் என்று கூறிவிட்டார்.

நாம் தமிழர் பாரிசாலன் - சீமான் பற்றிய சிறு குறிப்புகள்

பாரிசாலன் வேலூரில் உள்ள பஜாஜ் கம்பெனியில் தனது பைக்கை சர்வீஸ்க்காக விட்டபோது ஏற்பட்ட தகராறில் கைதாகியுள்ளார். இதற்கு நீதி கேட்டு சென்ற நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பஜாஜ் கம்பெனியில் பணிபுரிபவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாரிசாலன் மற்றும் நாம் தமிழர் கட்சியினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்
சீமான் அரசியல் வாழ்க்கை 1982- 1985 திமுக
1986- 1988 அதிமுக
1988 - 1991 காங்கிரஸ்
1992 - 1996 கம்யூனிஸ்ட்
1996 - 2004 தி.க
2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
2007 - 2009 மதிமுக ஆதரவு
2009 - 2011 அதிமுக ஆதரவு
2012 - நாம் தமிழர்(பெரியார் வழி)
2014 -நாம் தமிழர் பெரியார் வடுக வந்தேறி (பிரபாகரன் வழி)
2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னனி)
2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி கையில் இருந்த சிலுவையை அகற்றி வேல் கொடுத்து முப்பாட்டன் முருகன் என்று சொல்லி ஊர ஏமாத்திட்டு இருக்கு
இந்த டுபாக்கூரை நம்புது ஒன்றுமறியா கூட்டங்கள்
இப்படியான காவாளியை ஆபத்தானவன்னு சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
மக்களை ஏமாற்றி வசூலிப்பதே தலையாய கடமை சீமானுக்கு..!
-Prabhu Ram