Essaki - Oneindia Tamil
சென்னை: சென்னை பெரம்பூரில் தனியார் பள்ளி மாணவர் ஒருவர் மரணம் அடைந்து
இருக்கிறார். இதில் ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
பெரம்பூர் அருகே இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியர் தண்டித்ததால் மாணவர்
நரேந்தர் மரணமடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று
மாலை நடந்து இருக்கிறது.
இதனால் அங்கு பெரிய அளவில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. மாணவர் உயிரிழப்பை
அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவித்து நிர்வாகம் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது.
அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு
இருக்கிறது. உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய கோரி நேற்று
போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டம் பெரிதான நிலையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் தற்போது இந்த மரணம் குறித்து விசாரித்து வருகிறது.
வியாழன், 18 ஜனவரி, 2018
விமானிக்கு இடம்தெரியாமையால் கூகுளின் உதவியுடன் பலாலி சென்ற அமைச்சர் !
அமைச்சர் மஹிந்த அமரவீர பயணித்த உலங்குவானூர்தியின் விமானிக்கு பலாலி
விமான நிலையம் தெரியாதமையால் ஆகாயத்தில் சுற்றிய நிலையில் கூகுள்
வரைபடத்தின் உதவியுடன் பலாலி சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்வதற்காக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர கொழும்பிலிருந்து உலங்குவானூர்தியொன்றில் பயணித்துள்ளார்.
அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு செல்லவிருந்த போதிலும், தலைமன்னர் நோக்கி விமானி உலங்குவானூர்தியை செலுத்தியுள்ளார்.

வி ஹெச் பி - தொகொடியா : மோடியும் அமித் ஷாவும் கிரிமினல்கள் ,, மாபியாக்கள்
Muruganantham Ramasamy :மோடி- அமித் இருவரும் க்ரிமினல்கள்..
இந்த தேசம் மாபியாவால் இயக்கப்படும் கொடுஞ்சூழல் இருக்கிறது என்பதை "சிக்யூலர்ஸ்" மட்டும் சொல்லவில்லை..
தீப்பொறி பக்தாள் பிரவீன் தொகாடியாவும் சொல்கிறார்.
இப்ப பக்தாள் என்ன சொல்றேள்..?
அவாளுக்கே சீக்கிரம் விபூதி அடிச்சிருவாரு ஸ்ரீ ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்
Troll Trousers 2.0 :
இன்னிக்கு
காலையில் பார்த்த ஒரு சிறப்பான விடியோவால் வேலை நேரம் போக மிச்ச நேரம்
எல்லாம் நித்தியானந்தாவை அலசியதில் எனக்கு புரியவந்த உண்மை என்னன்னா
நித்திக்கு ஒரு கொடூர fanbase இருக்கு..
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னன்னா இதில் யாருமே படிக்காதவர்களோ, அறியாமையில் இருப்பவர்களோ, கஷ்டத்தில் இருக்கும் அன்னாடங்காட்சிகளோ, பணத்திற்கு கஷ்டப்படும் மக்களோ அல்ல.. இன்னும் சொல்லப்போனா நடுத்தர மக்கள் கூட இல்லை.. எல்லாருமே பணமும் பதவியும், வெளிநாட்டு பட்டங்களும், நுனிநாக்கு ஆங்கிலமும்
இருக்கும் elite class..

இந்த கூட்டம் முக்காவாசி first world countries'இல் இருக்கும் NRI's..
இதும் இல்லாம வெள்ளையர்கள், கருப்பார்கள், சீனர்கள்னு இன வேறுபாடே இல்லாம
நித்தியின் followers லிஸ்ட் பெருசா போயிக்கிட்டே இருக்கு.. இவர்கள்
தொடர்ந்து அவரவர் நாட்டிலும் சிறு சிறு குழுக்களாக நித்தியின் மதத்தை
பரப்பிக்கொண்டே வருகிறார்கள்..
தன் வீட்டில் இருக்கும் பெண்குழந்தை மூலமாகவோ அல்லது அம்மா மூலமாகவோ தான் இவர்கள் இந்த வட்டத்திற்க்குள் கொண்டு வரப்படுகிறார்கள்..
தன் வீட்டில் இருக்கும் பெண்குழந்தை மூலமாகவோ அல்லது அம்மா மூலமாகவோ தான் இவர்கள் இந்த வட்டத்திற்க்குள் கொண்டு வரப்படுகிறார்கள்..
பறிபோனது டோக்லாம் .. சீனாவின் முழு கட்டுப்பாட்டில் சர்ச்சைக்கு உரிய டோக்கலாம் எல்லை ..
தினமலர் :புதுடில்லி: சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில், இந்தியா - சீனா இடையிலான பிரச்னை தீர்க்கப்பட்டதாக கூறப்பட்டபோதும், அப்பகுதியை, தன் முழு கட்டுப்பாட்டில் சீனா கொண்டு வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. நம் நாட்டின் சிக்கிம் - சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் அருகேயுள்ள டோக்லாம் பகுதி, யாருக்கு சொந்தம் என்பதில் சர்ச்சை உள்ளது. கடந்தாண்டு துவக்கத்தில், இப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. தகவல் அறிந்ததும், நம் வீரர்கள் சென்று, அப்பணியை தடுத்து நிறுத்தினர்.இரு தரப்பு வீரர்களும், அங்கு, 72 நாட்களாக முகாமிட்டு இருந்தனர். இரு தரப்பு உயரதிகாரிகள் நடத்திய பேச்சுக்கு பின், இரு நாடுகளின் வீரர்களும் வாபஸ் பெறப்பட்டனர்.
சீனாக்காரன் கோவணத்தை உருவிக்கிட்டு போயிட்டான். அண்ணன் டோக்ளா தின்னுட்டு, வாயிலே வடை சுட்டுக்கிட்டு திரியிறார். அம்மிணி சுக்காய் விமானத்தில் "சாகசம்" செய்கிறாராம்.
எச்.ராசாவுக்கு தமிழன் பிரசன்னா சவால் : தீக்குளிக்க தயாரா?
Olivannan Gopalakrishnan : :நேற்றைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி குறித்த திரு. கோ. ஒளிவண்ணன் அவர்களின் விளக்கம்
இன்று காலை வாட்ஸ் அப் செய்தியொன்று நண்பர் ஒருவரால் எனக்கு
அனுப்பப்பட்டது. அதில் சென்னை புத்தகக் காட்சியில் நேற்று எங்களது புத்தக
வெளியீட்டு விழாவின் இடையே தகராறு நடந்ததாகவும் நிகழ்ச்சி பாதியில்
நிறுத்தப்பட்டதாகவும் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது . இது முற்றிலும்
தவறான செய்தி.
நிகழ்ச்சி குறித்த நேரத்தைக் கடந்து சென்றமையால் இறுதியில் ஏற்புரை வழங்கிய தமிழன் பிரசன்னா அவர்களை நான்தான் நேரம் கடந்து விட்டது, முடியுங்கள் என்று சீட்டு கொடுத்து முடித்தேன்.
நிகழ்ச்சி குறித்த நேரத்தைக் கடந்து சென்றமையால் இறுதியில் ஏற்புரை வழங்கிய தமிழன் பிரசன்னா அவர்களை நான்தான் நேரம் கடந்து விட்டது, முடியுங்கள் என்று சீட்டு கொடுத்து முடித்தேன்.
கலைஞர் வரலாற்றை திரித்து கதையளக்கும் பாஜக நாராயணன் ,,,,
Steephan Raj :
வனவாசம்
எழுதியாதற்காய் கலைஞர் கண்ணதாசன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததும்,
அதில் கவிஞர் மன்னிப்பு கேட்டதும், பின்னர் கலைஞர் மன்னித்து வழக்கை
முடித்துக்கொண்டதும். தமிழர்களுக்கு மட்டும் தெரிந்த விடயம் திருப்பதி
நாராயணன் ! இந்த கவிதை வழக்குக்கு பின் கவிஞர் எழுதியது!
எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே தூங்கும்
வனக்கிளி அவளை இன்னும் மறக்கவே முடிய வில்லை!
நினைக்கையில் இனிக்கும் அந்த நெய்வாசக் குழலி இன்று
எனக்கொரு கவிதையானாள் இதுதான் நான் கண்ட இன்பம் !
கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்
மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள் !
பன்னி நான் கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள் !
சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரம் என்றாள்
தந்திரம் அறிவாள், மெல்ல சாகசம் புரிவாள், - மின்னும்
அந்திவான் மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் - நானும்
பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன், - என்ன
மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்

மருத்துவம் படிக்க உக்ரேன் சீனா பிலிப்பைன்ஸ் .... டாக்டராகலாம் ,,,, குஜராதுக்கோ டில்லிகோ போனால் ?
Anpu Mani :நான் இருப்பது விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு ஊரகப் பகுதி. எங்கள்
பகுதியில் உள்ள பல சிற்றூர்களில் இருந்து பல மாணவர்கள் மாணவிகள் , முதல்
தலைமுறை பட்டதாரிகள் உள்ளூர் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத
நிலையில் உக்ரைன் நாடு அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் உள்ள மருத்துவக்
கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இது மட்டுமின்றி சீனா, பிலிப்பைன்சு
நாடுகளில் MBBS படிக்கச் சேர்ந்துள்ளனர் .
முதல் முறையாக கடவுச் சீட்டு பெற்று முதன் முதலாக வெளிநாட்டு க்கு சென்று மருத்துவக் கல்வி பயில்கின்றனர்.
ஒரு மாத்த்திற்கு முன்பு உக்ரைனில் இருந்து வந்த மாணவர் ஒருவரை சந்தித்தேன். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு கல்வி , உணவு,உடை, தங்குமிடம் பற்றி பேச்சு கடந்து சென்றது. இறுதியாக ஒன்று கேட்டேன். அந்த தம்பியிடம்.
இன ஒதுக்குதல் , இன ஒடுக்குதல் நம் மாணவர்கள் மீது நடைபெறுகிறதா?
நிறத்தின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் வேறுபாடு காட்டப் படுகிறதா என்பதைப் பற்றி எல்லாம் கேட்டேன். அப்படி ஏதும் வேறுபாடு களை நாங்கள் சந்திக்கவில்லை. எங்களுக்கு அன்றாட நடைமுறைகள் எளிதாக மகிழ்வாக போகிறது. நாங்கள் படித்து முடித்துவிட்டு வெற்றிகரமாக நம் ஊருக்குத் திரும்புவோம். என்றார் அம்மாணவர் நம்பிக்கையோடு. அந்த முகம் தெரியாத நாடுகளில் வேறு மதம் , இன மக்கள் வாழும் நாட்டில் நமது மாணவர்கள் வெற்றிகரமாக படித்து வருகின்றனர்.

தேவதாசிகள் தேவை என்றவர்கள் இன்று ஆண்டாளுக்காக முதலை கண்ணீர்.
வினவு :பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். படியுங்கள், பகிருங்கள்.ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்று வரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரிஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப் படும் நாபகலிபார் என்ற திரு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993 -ல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசி மணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்தும் விலகி வாழ்கின்றனர்.
இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய கோவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட் டியது. 1988 -ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட் டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.
புதன், 17 ஜனவரி, 2018
ஆன்மிகம் பாதி ..பகுத்தறிவு பாதி ,,, நித்திக்கு போட்டியாக கோடம்பாக்கம்
சுவாதி : நாட்டில் உள்ள இன்னொரு பெரிய பிரச்சனை.. இந்த "அரைகுறை ஆன்மீகவாதிகள்" "பாதி பகுத்தறிவாதிகள்".
பாதி பகுத்தறிவாதிகள் - தன்னை தனியாக காட்டிக்கொள்ள "பகுத்தறிவாதியாக"
மாறியவர்கள். முகநூலில் நிறைய பேர் பார்க்கிறேன். இவர்களை பொறுத்தவரைக்கும்
"கடவுள் எதிர்ப்பு", "பார்ப்பனர் எதிர்ப்பு" இந்த ரெண்டு மட்டும் தான்
"பகுத்தறிவு". வேறு ஒன்றும் இவர்களுக்கு தெரியாது. ஒரு நல்ல பகுத்தறிவாதி
அன்பேசிவம் கமல் கேரக்டர் மாதிரி இருக்கணும்.
அரைகுறை ஆன்மீகவாதி - ஆன்மீகம் என்றால் என்ன? மதத்திற்கும்
ஆன்மீகத்திற்கும் என்ன வித்தியாசம்? ஒவ்வொரு மதமும் என்ன கருத்து சொல்கிறது? இந்த மூன்று அடிப்படை கேள்விக்கு கூட விடை தெரியாமல் நான் பெரிய ஆன்மிகவாதியாக்கும் அது இதுனு ஆன்மீகத்தில் அவருக்கு தெரிந்த அரைகுறை அறிவில் எதாவது பேசுபவர்.. "ஆன்மீக அரசியல்வாதி" மாதிரி குழப்பமானவர்கள்.

ஜிக்னேஷ் மேவானி திருமாவளவன் இணைந்து செயப்பட முடிவு !
மின்னம்பலம் :சென்னை
வந்துள்ள குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்
திருமாவளவனை நேற்று (ஜனவரி 16) விசிக அலுவலகமான தாய்மண்ணில் சந்தித்தார்.மூன்று நாள்கள் பயணமாக சென்னை வந்துள்ள குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி நேற்று முன்தினம் அம்பேத்கர் மணி மண்டபத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பிறகு இயக்குநர் பா.ரஞ்சித்தைச் சந்தித்து அவருடன் பொங்கல் கொண்டாடினார். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 16) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஜிக்னேஷ் மேவானி சந்தித்தார்.
இந்தச் சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜிக்னேஷ் மேவானி, “நான் இரண்டாவது முறையாக சென்னை வந்துள்ளேன். தமிழக அரசியல் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தோம். சங்பரிவார பாசிச கும்பலால் நாடு பல்வேறு விதமான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. சங்பரிவார்,
பொங்கல் திரைப்படங்களின் வசூல் .. 100 கோடியை எதிர்பார்த்து 50 கோடி வசூலுடன் தள்ளாடிய படங்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி புதிய தமிழ் படங்கள் ரீலீஸ் செய்யப்படும்.
தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும் படங்களின் வசூலை காட்டிலும் குறைவாகவே இருக்கும் பொங்கல் வசூல். இதனால் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் போட்டியில் களமிறங்கும். இந்த வருடம் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடித்த ஸ்கெட்ச், பிரபுதேவா நடித்த குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. பாக்ஸ் ஆபீசில்சுமார் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகும் என கணிக்கப்பட்டபொங்கல் பண்டிகை படங்கள் சுமார் 50 கோடி ரூபாய் வசூலுடன் முடிந்து போனது.
தமிழகத்தில் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் "தானா சேர்ந்த கூட்டம்" கடந்த ஐந்து நாட்களில் மொத்த வசூலாக பெற்ற தொகை சுமார் 30 கோடி ரூபாய் மட்டுமே. சூர்யா நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இப்படம் சுமாரான ஓபனிங்குடன் தொடங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்பதாலும், குடும்பத்துடன் பார்க்க வேறு படங்கள் இல்லை என்பதாலும் இந்த வசூல் என்கிறது தியேட்டர் வட்டாரங்கள். விக்ரம் இரு வேடங்களில் நடித்து 2016 செப்டம்பரில் வெளியான இருமுகன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். ஒரு வருட இடைவெளியில் பொங்கல் வெளியீடாக "ஸ்கெட்ச் "அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தானா சேர்ந்த கூட்டம் திரையிட்ட தியேட்டர்களை விட குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் ஆன "ஸ்கெட்ச் "ஐந்து நாட்களில் 15 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது.

வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ.10 கோடி: நயினார் நாகேந்திரன்
தினகரன் :நெல்லை: ஆண்டாள் பற்றி தவறாக பேசிய கவிஞர் வைரமுத்துவின் நாவை அறுத்தால்
ரூ.10 கோடி வழங்குகிறேன் என்று பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன்
நெல்லையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மதுரை ஆண்டாள் குறித்து
சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி வைரமுத்துவிற்கு எதிராக இந்து
அமைப்பினர் போராட்டம் நடத்துவது குறிப்பிடத்தக்கது
எய்ம்ஸ் மாணவன் கொலை ... போலீஸ் சந்தேகம் ... தலையில் காயம் .. ஸ்டாலின் அறிக்கை
சென்னை: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக திமுக
செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வெளிமாநிலங்களில் தமிழக
மாணவர்கள் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும். டில்லி
யுசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு
மரணமடைந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்தால் தமிழகத்திற்கு இழப்பு
ஏற்பட்டுள்ளது. சரவணன் , சரத் பிரபு மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை
நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.தினமளர்
டெல்லி எய்ம்ஸ் தமிழக மாணவன் சரத் பிரபு அதிக இன்சுலின் ஏற்றி கொலை ,,,,,......???
மாலைமலர் :தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத்பிரபு மருத்துவம் படித்திருந்தார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியின் கீழ் இயங்கும் யூ.சி.எம்.எஸ் கல்லூரியில் எம்.எஸ். படித்து வந்த அவர், இன்று காலை விடுதி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விடுதி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சரத்பிரபுவின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்விற்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
;காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. உயிரிழந்த சரத்பிரபுவின் உடலுக்கு அருகில் ஊசி மருந்துகள் கிடந்துள்ளன. அவரது உடலில் அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்து ஏற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
கனடா பிரதமர் வேட்டி சால்வை அணிந்து தமிழ் பொங்கல்.. விடியோ
மாலைமலர் :கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேட்டி
அணிந்து பாரம்பரிய முறையில் தமிழ் சமூக மக்களுடன் இணைந்து பொங்கல்
கொண்டாடினார்.
ஒட்டாவா:;
கனடாவில் 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஒரு லட்சத்து
ஐம்பத்து ஏழாயிரம் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த ஆண்டு அக்டோபர்
மாதம் கனடா பாராளுமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இன்று கனடாவில் உள்ள தமிழ் சமூக மக்களுடன் இணைந்து பிரதமர் ஜஸ்டின் பொங்கல் பண்டிகை கொண்டாடினார். அப்போது, தமிழ் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து பொங்கல் வைத்தார். இவ்விழாவில் டோரண்டோ மாநகர மேயர் ஜான் டோரியும் கலந்து கொண்டார். ஜஸ்டின் மற்றும் ஜான் இணைந்து பொங்கல் சமைத்தனர். பின்னர் ஜஸ்டின் தமிழ் மக்களிடையே பேசினார். அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார்.

டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்: திவாகரன் தகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில்
பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் டிசம்பர் 5ம் தேதி
மரணிக்கவில்லை என்றும், டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே
இறந்துவிட்டதாகவும் திவாகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.<
மன்னார்குடியில் நடைபெற்ற
எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலாவின் சகோதரர்
திவாகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலை
5.15 மணிக்கே மாரடைப்பால் இறந்துவிட்டார். அப்பல்லோ மருத்துவமனைகளின்
பாதுகாப்புக்காக ஒரு நாள் தாமதமாக மரணம் அறிவிக்கப்பட்டது என்று
கூறியுள்ளார்.<
டிசம்பர் 4ம் தேதி மாலை மாரடைப்பு
ஏற்பட்டு ஜெயலலிதா இறந்துவிட்டார். ஆனால், அவர் இறந்ததை ஏன் அறிவிக்கவில்லை
என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது. அப்போது தமிழகத்தில்
உள்ள மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று மருத்துவமனை
நிர்வாகம் கூறியதாகவும் திவாகரன் தெரிவித்தார்.<
ஏற்கனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்
மரணத்தில் சந்தேகங்கள் எழுந்த நிலையில், இன்று அவர் இறந்தது டிசம்பர் 4ம்
தேதி என்று திவாகரன் அறிவித்திருப்பது மேலும் சர்ச்சையை வலுப்படுத்துகிறது.
ஜிக்னேஷ் மேவானி ரிப்பப்ளிக் டிவி யை புறக்கணித்தது ....
ஜிக்னேஷ் மேவானியின் சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரிபப்ளிக்
டிவிக்குலாம் பேட்டி தரமுடியாது என்று அவங்க மைக்க எடுக்க சொல்லிருக்காரு.
அப்பனா நாங்களும் பேட்டி எடுக்க மாட்டோம்னு பத்திரிக்கையாளர்கள் கூட்டாக
நிற்க, சந்திப்பை புறக்கணிச்சுட்டு போயிருக்காரு ஜிக்னேஷ். (சிலர்
பத்திரிக்கையாளர்கள் புறக்கணிச்சதா சொல்றாங்க).
1. ரிபப்ளிக் மாதிரியான பச்சையான பெய்ட் மீடியாக்கள்ட்ட பேசி, அத அவன் திரிச்சு வெளியிட்டு, அப்பறம் அவன கண்டிச்சுட்டு இருக்கறதுலாம் தண்டம். அவனலாம் ஒரு ஆளாவே மதிக்காம த ச்சீ பே னு தள்ளிவிட்டு போயிரனும். அததான் ஜிக்னேஷ் பண்ணிருக்காரு. சென்னைல நடந்த தலித்துகளுக்கு எதிரான கொடுமைய பத்தி ஜிக்னேஷ் பேசுனா கூட சென்னைல போய் சாதிவெறிய வளர்க்குறார் ஜிக்னேஷ்னு தான் அர்னாப் கத்தப்போறான். ரிபப்ளிக் டிவிக்கு பேட்டி கொடுக்க மாட்டேன்னு வெளிப்படையா அறிவிச்சு அத தன் கொள்கையாவே கடைபிடிக்கற ஜிக்னேஷ் அதுல உறுதியா நின்னதுல என்ன தப்பு?

பாஜக & தந்தி டிவி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
வைரமுத்து ஆண்டாளை தேவதாசி என்று சொல்லிவிட்டார் என்று முதல் முதலில் செய்தி போட்டது யார்...?*
*வைரமுத்து தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பின்பும் அதிகமாக தொலைக்காட்சியில் விவாதம் நடத்தியது யார்...?*
*வைரமுத்துவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் போராடுவதாக கடந்த ஒருவாரமாக செய்தி போடுவது யார்...?*
*வைரமுத்து தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பின்பும் அதிகமாக தொலைக்காட்சியில் விவாதம் நடத்தியது யார்...?*
*நிற்க....!*
*3 மாதத்திற்கு முன் NDTV நிறுவனதலைவர் திரு. பிரணாய் ராய் அவர்கள் தனது டிவிக்கு பேட்டியளித்தார் அதில் பாஜக தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைத்து அதன் பழியை திராவிட கட்சிகள் மீது சுமத்தி (குறிப்பாக திமுக மீது) தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிடுகிறது என்று கூறியிருந்தார்.*
*பாஜக தன் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தமிழக மக்களிடையே வதந்தியை பரப்ப தந்தி டிவி & ரங்கராஜ் பாண்டேவுக்கும் கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக திரு. பிணாய் ராய் அவர்கள் பேட்டியை முடிந்திருந்தார்...*
http://nidur.info/old/index.php…
*இப்போது புரிகிறதா ஏன் வைரமுத்து பலிகடா ஆக்கப்பட்டார் என்று...

நடிகர் விஜயின் சொத்து மதிப்பு ரூ 420 கோடி இருக்குமாம். .. நிச்சயம் அரசியலுக்கு வருவார் ... சொத்த காப்பாத்தனும்ல ?
விஜயின் வீடு சென்னை சாலி கிராமத்தில் உள்ளது. மிகவும் ஆடம்பரமாக காணப்படும் இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ 5 கோடிக்கு மேல் இருக்குமாம். இது மட்டும் அல்லாமல் நீலாங்கரையில் ஒரு பீச் ஹவுஸ் உள்ளது. இது இவர் பிரபல ஹாலிவுட் நடிகரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது பீச் ஹவுசை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். பின்னர் தானும் அதே போல ஒரு பீச் ஹவுசை கட்டி உள்ளார். இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதே போல 4 ஆடம்பர கார்களை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ 8 கோடி இருக்குமாம். மேலும் பிரபல நகைக்கடைக்கு பிரான்ட் அம்பாசிடராக உள்ளார். 3 திருமண மண்டபங்களை வைத்துள்ளார்.
இவை அனைத்தையும் சேர்த்தால் மொத்தம் ரூ 420 கோடி இருக்குமாம். என்னங்க கேட்டதுமே தலை சுற்றுகிறதா-. லைவ்டே
ரஜினிக்கு 17 வீத வாக்குகள் கிடைக்கும் .. நம்புறோம் சாமி
தினமலர் :புதுடில்லி: தமிழக சட்டசபைக்கு தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும் என்றும் ரஜினிக்கு 16 சத ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே நடத்திய பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாடுடே-கார்வி
2016-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாடுடே-கார்வி இணைந்து 77 தொகுதிகளில் நடத்திய கருத்து கணிப்பில் கிடைத்த தகவலின்படி:
தற்போதைய அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு 16 சதவீத ஓட்டு கிடைக்கும் எனவும், 33 தொகுதிகளை பிடிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரஜினி முதல்வராக வேண்டும் என 17 சதவீதம் விருப்பம் தெரிவித்துள்ளனர். 34 சதவீதம் பேர் ரஜினி அரசியலில் தோல்வி அடைவார் என்றும் 53 சதவீதம் பேர் வெற்றி பெறுவார் என்றும் , ரஜினி-கமல் இணைய வேண்டும் என 29 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜக
பாஜக எம்பி நடிகர் சுரேஷ் கோபி கைது .. வரி ஏய்ப்பு ... பிணையில் விடுதலை
Chinniah Kasi :
வரி ஏய்ப்பு மோசடி: பாஜக எம்.பி. நடிகர் சுரேஷ் கோபி கைதுமலையாள திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலர்,சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர். ரூ. 20 லட்சம் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததாக, நடிகை அமலா பால், பகத் பாசில் இருவரும் ஏற்கெனவே போலீசாரால் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வரிசையில், பிரபல மலையாள நடிகரும், பாஜகஎம்.பி.யுமான சுரேஷ் கோபியும், வரி ஏய்ப்பு புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு- ரூ. 1 லட்சம் பிணைத்தொகையாகவும் மற்றும் இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
பிப். 21-ல் கட்சிப் பெயரை வெளியிடுகிறார் கமல்ஹாசன்
மாலைமலர் : ப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை:< பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். < தமிழக அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் கட்சி குறித்தான அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி துவக்க இருக்கிறேன்
ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.
திமுக 130 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் ..இந்தியா டுடே கார்வி கருத்துக்கணிப்பில்
Oneindia Tamil Gajalakshmi :
டெல்லி
: தமிழக அரசியல் சூழலில் தற்போதைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் திமுக
கூட்டணி 130 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கார்வி நடத்திய
கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணி 34 சதவீத
வாக்குகளை பெறும்ட என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
ஜெயலலிதா உயிரிழ்ந்து ஓராண்டு ஆகும் நிலையில் தற்போதைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் எந்த கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கும் என்று இந்தியா டுடே மற்றும் கார்வி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் ஆளும் அதிமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 68 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற முடியும் என்று முடிவுகள் வெளிவந்துள்ளன. 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையின் கீழ்த அதிமுக 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று இன்றைய அரசியல் சூழலில் தேர்தல் நடைபெற்றால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்குடன் தேர்தல் களம் கண்டால் 130 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் 34 சதவீத வாக்கு வங்கியை திமுக பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2016 சட்டசபை தேர்தலின் போது திமுக 88 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)