வெள்ளி, 26 மே, 2017

குடியரசு தலைவர் வேட்பாளர் .. எதிர்கட்சிகள் டெல்லியில் முக்கிய ஆலோசனை!

The opposition's candidate for the next President of India will be decided on today. டெல்லி: பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை முடிவு செய்ய இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன.
குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளராக தங்களது கட்சியை சேர்ந்தவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதற்கான ஆலோசனைகளில் இரு தரப்பும் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் , நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலாஜி மனைவியை அடித்து சைக்கோ மாதிரி? நிஜ சைக்கோ? ... போலீசில் புகார்

‘பாலாஜிகூட வாழ்ந்தது போதும்!’’ – கலங்கும் நித்யாநடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பாலாஜி, தன்னை சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாக, சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அவரது மனைவி நித்யா. இந்த பிரச்னை குறித்து பாலாஜியிடம் கேட்டபோது, அவரது தரப்பு வாதத்தை நேற்று கூறியிருந்தார். தன்னிடம் எதைப் பற்றியும் கேட்க வேண்டாம் என நேற்று வரை மறுத்துவந்த நித்யா, பாலாஜியின் பேட்டியைப் படித்ததும் நம்மிடம் பேசினார்>”பாலாஜிக்கும் எனக்கும் காதலாகி கல்யாணத்தில் முடிஞ்சப்போ என் வயசு 21. அப்போது அவருக்கு 36 வயசு. ஆனாலும், அவர் மேலே வெச்சிருந்த ஆழமான காதலாலும் அளவிட முடியாத நம்பிக்கையாலும் வீட்டை மீறி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
கல்யாணமான புதுசுல சென்னை, அண்ணா நகரில் இருந்தோம். அப்புறம் ஷிஃப்ட் பண்ணிட்டு, பெரியார் நகர் வீட்டுக்குக் குடிவந்தோம். அப்படி ஷிஃப்ட் பண்றதுக்கு பொருள்களை எடுத்துவெச்சப்போதான் அந்தப் பெட்டியைக் கவனிச்சேன்.

நாய்க்கு பிரியாணி கொடுத்ததால் அடித்து கொலப்பட்டார் ஆட்டோ ஓட்டுனர் .. சென்னை

சென்னை: நாய்க்கு பிரியாணி கொடுத்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 Auto Driver murdered in chennai சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவரான இவர் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரைப் போலவே பெரம்பூரில் பிளாட்பார்மில் வசித்து வரும் வெள்ளை பிரபு என்பவரும் நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், இவர்கள் இருவரும் உணவளிக்கும் நாய் ஒன்று குட்டி போட்டுள்ளது. அந்த குட்டிகளில் அழகாக இருந்த ஒரு நாய்க்குட்டியை விஜய் தனது வீட்டிக்கு தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் நேற்று அதே இடத்தில் அந்த நாய்க்குட்டியை விஜய் விட்டுள்ளார்.

என்னைப் பத்தி படமெடுக்க என்ன இருக்கு?’ – மறுத்த டி.எம்.எஸ்.. விடாத விஜயராஜ்! #TMS

TMS
‘சந்திர ஈரமும் சூரிய வீரியமும்
சேர்த்துச் செய்த சுடர்கவிதை
டி.எம்.சௌந்தரராஜன்!’ – பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜனின் சிம்மக்குரலுக்கு அடிமையான கோடானுகோடி ரசிகர்களில் ஒருவரின் கவிதை இது!

தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்புடன் தமிழ்த் திரையுலகை இன்றைக்கும் ஆட்கொண்டிருக்கும் இசை ஆளுமை டி.எம்.எஸ் அவர்களின் நினைவுநாள் இன்று.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என ஆரம்பித்து, சத்யராஜ், விஜய்காந்த் வரைக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர் ஒவ்வொருவருக்கும் பொருத்தமாகத் தனித்தனிக் குரலில் பின்னணி பாடி, காலத்தால் அழியாத கலைஞனாக நிலைத்துநிற்கிறார் டி.எம்.எஸ்!
TMSசௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் தனது கந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட மாபெரும் கலைஞன். இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவரின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டுக் கௌரவித்துள்ளது மத்திய அரசு.
அவரது சாதனையை ஆவணப்படுத்தும்விதமாக, ‘இமயத்துடன்!’ என்ற தலைப்பில், தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்றைத் தயாரித்து இயக்கியுள்ளார் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த விஜயராஜ்.

ரஜினியின் ஆஸ்ரம் பள்ளிகூட சிஸ்டம் ரொம்பவே மோசம் .. Flashback நில அபகரிப்பு .. சம்பள பாக்கி ... ஒரு ஓட்டுனர் இறந்தே விட்டார் ...



ரஜினிக்கு சொந்தமான ‘தி ஆஸ்ரம்’ பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது சம்பள பாக்கியை வைத்துவிடுகிறதாம் நிர்வாகம். இந்த விஷயத்தை அமுக்கி பாதுகாத்து, அறைக்குள்ளேயே சால்வ் பண்ண வேண்டியவர்கள் அதை செய்யாமல் விட்டதால், வெட்ட வெளியில் பற்றிக் கொண்டது. ஆசிரியர்கள் சிலர் பள்ளி வாயிலின் முன் நின்று போராட்டம் நடத்துகிற அளவுக்கு போய் விட்டது நிலைமை. எல்லா ஊடகங்களிலும் செய்தி வர... செய்வதறியாமல் நிற்கிறார்களாம் இப்போது. ரஜினி படம் வந்தாலும் வசூல் பாக்கி பிரச்சனை. ரஜினியின் பள்ளிக்கூட விஷயத்திலும் சம்பள பிரச்சனை. என்னாச்சு சார் உங்களுக்

தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளியை நிர்வகிக்கும், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த், ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஜனவரி 25-ந்தேதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடந்த 12-ந்தேதி தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். ஜனவரி 29, 2016, 05:00 AM சென்னை, தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி அமைந்துள்ள நிலம் தொடர்பான பிரச்சினையில் கல்வி அதிகாரி முன்பு நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் 2 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 25 மே, 2017

ஜந்தர் மந்தர்... பீம் ஆர்மி தலித் எழுச்சிக்கு வழி கோலுகிறதா? சகரான்பூர் எரிகிறது – ஆதித்யநாத்துக்கு ஆப்பு

Has the Bhim Army emerged as the new face of Dalit uprising in an effort to fill the vacuum created by a sinking BSP or is it just political proxy? On Reality Check, we debate whether the new Dalit assertion in UP is a response to the Yogi Adityanath government.

பீம் ஆர்மிக்குப் பின்னால் நக்சலைட்டுகள் இருக்கிறார்கள்” என்று சந்தேகிப்பதாக உ.பி அரசு கூறியிருக்கிறது. இந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சும் நிலையில் தலித் மக்கள் இல்லை.
கரான்பூர் எரிகிறது. மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கு புகழ் பெற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “வெறியூட்டும் பேச்சுக்கு பலியாகாதீர்கள்”  என்று தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடவேண்டிய நிலமைக்கு ஆளாகியிருக்கிறார்.
144 தடை உத்தரவு, இணைய சேவைகள் முடக்கம், எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கம், மாவட்ட ஆட்சியர் மாற்றம், சீனியர் போலீசு சூப்பிரெண்டு மாற்றம், டி.ஐ.ஜி மாற்றம் – இவையெல்லாம் வரலாறு காணாத தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைத்த உ.பி மாநிலத்திலிருந்து வரும் செய்திகள்.
சகரான்பூர் மேற்கு உ.பியில் உள்ள மாவட்டம். இந்த மேற்கு உ.பி-யில் முசாபர்நகரில்தான் இசுலாமியர்களுக்கு எதிராக மத வன்முறையைத் தூண்டி நாடாளுன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது மோடி – அமித் ஷா கூட்டணி.

பாலக்கோடு : அந்த கிணறும் வத்திருச்சுன்னா போய்ச் சேர வேண்டியதுதான் !

நாங்க இங்க வறட்சியில செத்துக்குட்டு இருக்கோம், நம்ம பிரதமர் ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்காரு, அவருக்கு விவசாயிங்க கஷ்டம் எங்க தெரியப்போவுது, ஜெயா செத்த மாதிரி இந்த மோடியும் செத்திருந்தா நல்லாயிருந்துருக்கும்பா.
ருமபுரி மாவட்டத்தில் உள்ள 9 அணைகளில் ஒன்று பாலக்கோடு கெசர்குளி அணைக்கட்டு . 25.20 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 134 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். 2014-க்குப் பிறகு மழை பொய்த்துப் போனதால் இந்த அணையில் சொற்ப நீரே இருந்தது. இந்த வருடம் இந்த அணைக்கட்டு முற்றிலும் வறண்டு போய் ஒன்றிரண்டு அடிகள் அளவுள்ள தண்ணீரே தேங்கியுள்ளது.

பல கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள இந்த அணையில் நீர் நிரம்பினால் ஏறக்குறைய 4000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன உதவியளிக்கிறது. இதையன்றி கோட்டூர் ஏரி உள்ளிட்ட சில ஏரிகளுக்கும் தண்ணீர் வழங்கும் ஆதாரமாக இருக்கிறது.

வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி !

ற்ற மாவட்டங்களை விட தஞ்சையின் பசுமைக்கு தனி அழகுண்டு. அடர்ந்த மரங்கள் கிடையாது. மலை குன்றுகள் கிடையாது. பரந்த வெளியில் பயிர்களும் அதன் மேல் கடல் அலை போல வருடும் காற்றும் தனியொரு கவர்ச்சிதான். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையின் காட்சியை விவரித்தும் வர்ணித்தும் எழுத வேண்டிய அந்த் மண் இன்று வறண்ட கற்பாறை போல கண்ணை உறுத்துகிறது. தஞ்சையின் கடந்த கால  பசுமையை நினைத்துப் பார்க்கும் நேரத்தில் தமிழகத்திற்கு இனி எந்த நெற்களஞ்சியம் சோறு போடும் என்ற பயமும் வருகிறது.
மே தினத்தன்று விவசாயத் தொழிலாளர்களை சந்திக்க வெகு தூரம் அலைந்தோம். ஆழ் குழாய் பாசனம் வைத்துள்ள வெகு சிலரே விவசாயம் செய்திருந்தனர். அங்கு மட்டுமே சிலரை சந்திக்க முடிந்தது. நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் ஆழ்குழாய் பாசனத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதி பயிரைத்தான் காப்பாற்றி உள்ளனர். கண்ணுக்கு எதிரே குழந்தை நோய்வாய்பட்டு இறக்கும் போது காப்பாற்ற முடியாத கையறு நிலையை போன்றதுதான் பாதியிலே பயிர் வாடும் காட்சியும். அதை ஒரு விவசாயி போல நம்மால் கற்பனை செய்ய முடியாது.

தந்தி டிவி .. சீமான் வீசிய பந்துகள் .. அடி விழுந்தது ரஜினிக்கு? பாஜகவுக்கு?


நேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர்.
நேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர். முதல் இருபது நிமிடங்கள் சீமான் மட்டும் பேசினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் ரஜினி எனும் தமிழரல்லாத நபர் ஆள நினைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பேசினார். நெறியாளர் அசோக வர்ஷினி கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் அவர் மேற்கண்ட கருத்திலேயே நின்று கொண்டு வேறு வேறு விளக்கத்தை கொடுத்தார்

BBC : 8 நடிகர்கள் பிடியாணைக்கு எதிரான மனு தள்ளுபடி .. ..கண்டிப்பாக நீதிமன்றில் ...

பிடிவாரண்டிற்கு எதிராக தமிழக நடிகர்கள் தாக்கல் செய்த மனுவை உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களும் வரும் ஜூன் மாதம் 17 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் இன்றைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. நேற்று புதன்கிழமையன்று இந்த 8 நடிகர்கள் தரப்பிலான வழக்கறிஞர் விஸ்வநாத், உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த 23 ஆம் தேதி, செவ்வாய்கிழமையன்று, நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.

எடப்பாடி அரசை சிறையில் இருந்தே காப்பாற்றிய சசிகலா .. 30 MLA அணியை வழிக்கு கொண்டுவந்து ..

அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும், துணைப் பொதுச்செயலாளரும் சிறைக்குச் சென்று விட்டார்கள். ஓ.பி.எஸ்.தரப்பினர் ஆட்சியையும், கட்சியையும் கைப்படுத்த எடுத்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், கட்சியை மீட்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ.-வுமான பழனியப்பன் தலைமையில், மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடசலம் போன்றவர்கள் 30 ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் தனி அணியாக, எடப்பாடி பழனிசாமியை மிரட்டும் விதமாகக் கடந்த சிலதினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எம்.எல்.ஏ பழனியப்பனுடன் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பில் இருந்து வருகிறார். இதையடுத்து, எம்.எல்.ஏ பழனியப்பன் செயல்பாடுகளை தெரிந்த முதல்வர் பழனிச்சாமி, அவரது கருத்துக்களை சசிகலா கவனத்திற்கு கொண்டு சென்றார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் காலா ! BR 1956.. ?

BR என்ற வார்த்தை யாரை குறிப்பது? இந்த 1956 வருடம் யார் இறந்த வருடம்?
மிக சிறு குழந்தைக்கும் புரியும்
காலா’ படத்தின் தலைப்பு பற்றி இயக்குநர் ப.ரஞ்சித் கூறும் போது: நெல்லை வட்டாரங்களில் எமனை ‘காலா’ சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையைச் சொல்வது “காலா”. மேலும் கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமே காலா, ரஜினிக்கு பிடித்த பெயர் என்பதால் காலா என வைக்கப்பட்டுள்ளது என்றார். 

'2.0' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. தனுஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார்.
இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து, தனது தந்தையை தவறாக சித்தரித்துப் படம் எடுத்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா, ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

நத்தம் விஸ்வநாதன் மீது மோசடி வழக்கு!

நத்தம் விஸ்வநாதன் மீது மோசடி வழக்கு!முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த லோகநாதன் என்பவர், மே 25-ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்சப் புகார் அளித்துள்ளார். சூரிய மின் தகடுகள் பதிப்பதற்கு அனுமதி அளிக்க 50 லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாக தன்னிடம் வாங்கியதாகவும், பணத்தை வாங்கிவிட்டு அனுமதி அளிக்கவில்லை எனவும் நத்தம் விஸ்வநாதன் மீது லோகநாதன் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் தன்னுடைய பணம் 50 லட்ச ரூபாயை திரும்ப பெற்றுத்தருமாறு லோகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வழக்கை திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (மே 25) விசாரித்தது. இந்த புகார் குறித்து நத்தம் விஸ்வநாதன், காமராஜ், அருண்குமார், பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த திருச்சி கே.கே.நகர் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மின்னம்பலம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி : தனியார் பாலில் இரசாயன கலப்படம் ... பேரம் படியல்லையோ?

பாலில் கலப்படம் செய்யப்படவில்லை என்பதை தனியார் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.;தனியார் பால் நிறுவனம் ஒன்றின் பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக
நேற்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்புப் புகாரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து,  'பொதுமக்கள் குடிக்கும் பாலில் யாராவது கலப்படம் செய்வது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், கலப்படம் செய்ததாகப் புகார் கூறப்பட்ட பால் மாதிரி புனேவில் இருக்கும் ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் வந்தவுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் கூறினார். ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அரசு இன்று திடீர் என்று இப்போ ஒரே அடியாக தனியார் பால் பலசமயங்களில் முழுக்க முழுக்க இராசாயன பால்தான் என்று கூறப்படுவது நிச்சயம் கண்டிக்க தக்கது .. இன்று வரை ஒழுங்காக வந்து சேர்ந்த மாமூல் தற்போது வரவில்லையா? ஆட்சி தள்ளாடி கொண்டிருக்கும் போது பேரம் பேசுவது கடினம்தான் ?

ஷீனா போரா கொலைவழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் மனைவி கொலை செய்யபட்டார்

>தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போரா கொலை வழக்கு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக இந்திராணி கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த கொலை பற்றிய செய்திகள் மீண்டும் ஊடங்களில் வெளியானது.இந்நிலையில், ஷீனாபோரா கொலை வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.>இந்த நிலையில் கொலை வழக்கை விசாரித்த டீமை சேர்ந்த இன்ஸ்பெக்டர் தியானேஸ்வர் கனோரின் மனைவி அவரது வீட்டுக்குள் வைத்தே குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.>அவரது மகன் மாயமாகிவிட்டார். எனவே, இன்ஸ்பெக்டரின் மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோனத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுயுள்ளனர். இந்த கொலை மற்றும் கடத்தல் மும்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வெப்துனியா

ஜெயலலிதாவின் சகல சொத்துக்களையும் கிரிஷ்ணப்பிரியா கைபற்றி விட்டார் ... மிடாஸ் உட்பட ..

தன்னை ஜெயலலிதாவின் வாரிசாகக் கூறி அதிமுகவில் புதிய பவர் சென்ட்டரை உருவாக்கி கட்சியின் மூத்த நிர்வாகிகளை கலங்கடித்து வருகிறார் கிருஷ்ணப்பிரியா. யார் இந்த கிருஷ்ணப்பிரியா?, இவ்வளவு காலம் எங்கிருந்தார்?. ஜெ.,வின் மரணம் வரை ஏன் தன்னை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. மர்மங்களை விளக்குகிறது இந்த கட்டுரை ஜெயலிதாவின் மிடாஸ் மது ஆலையின் வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் கிருஷ்ணப்பிரியா தான் தற்போது கவனித்து வருகிறார். மிடாஸ்  தற்போது முழுக்க முழுக்க கிருஷ்ணப்பிரியாவின் கணவர் கார்த்திகேயன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.  பையனூர், சிறுதாவூர் பங்களாக்கள் கிருஷ்ணப்பிரியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாம். ஜெயலலிதாவின் கஜானாவே தற்போது கிருஷ்ணப்பிரியாவின் கைக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இரோம் ஷர்மிளாவுக்கு இனி கொடைக்கானல்தான் நிரந்தரமாக வசிக்க போகிறார் !

இரோம் ஷர்மிளாவுக்கு இனி கொடைக்கானல்தான் வசிப்பிடம்!இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்தவர் இரோம் ஷர்மிளா. மணிப்பூரில் 2000ஆம் ஆண்டுக்கு முன் நடந்த வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக இருந்த, ஆயுதப்படை சட்டத்தை அரசு வாபஸ் பெற வலியுறுத்தி, கடந்த 2000ஆம் ஆண்டு, நவம்பர் 2இல் இருந்து ஆகஸ்ட் 9, 2016 வரை 16 ஆண்டுகள் அறவழியில் உண்ணாவிரதம் இருந்தவர். சமீபத்தில் மணிப்பூர் தேர்தலில் நின்றவர், மிகக்குறைந்த வாக்குகளைப்பெற்று தோல்வியுற்றதால் மன அமைதிக்காக தென் தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், அழகான அமைதியான இடமாக இருப்பதால் தமிழ்நாட்டில், கொடைக்கானலிலேயே நிரந்தரமாகத் தங்கப்போவதாகத் தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ: 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை!

சென்னை மெட்ரோ: 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை!சென்னை மெட்ரோ ரயில் சேவையில், திருமங்கலம் - நேரு பூங்கா பாதாள ரயில் பாதையில் பயணிப்பதற்காக இதுவரையில், சுமார் 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், திருமங்கலம் - நேரு பூங்கா வழித்தடத்தில் பாதாள ரயில் சேவை மே 14ஆம் தேதி தொடங்கப்பட்டது. சேவைத் தொடங்கப்பட்டது முதல் இதுவரையில், 2,82,621 பேர் பயணித்துள்ளனர். பயணத்துக்கான அனுமதிக்குச் சுமார் 1,23,817 ஸ்மார்ட் கார்டுகள் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. நேரு பூங்காவிலிருந்து பரங்கிமலைக்கான டிக்கெட் கட்டணம் 45 ரூபாயாகவும், நேரு பூங்கா முதல் ஏர்போர்ட் வரையில் டிக்கெட் கட்டணம் 54 ரூபாயாகவும் உள்ளது.

அதிமுகவின் அடுத்த தலைவி கிருஷ்ணப்பிரியா? அடுத்த முதலமைச்சரும் இவர்தானோ?

அ.தி.மு.க-வில் உங்களுக்கு இளவரசியைத் தெரியும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவோடு கைதாகி, பெங்களூரு சிறையில் இருக்கிறார்.

அடுத்த இளவரசியைத் தெரியுமா? அவர், கிருஷ்ணபிரியா. இளவரசியின் மூத்த மகள். போயஸ் ராணியாக இவர்தான் வரப்போகிறார்’’ என ஆளும்கட்சியின் அதிகார மையத்தில் வலம் வருபவர்கள் இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
ஆட்சியிலும் கட்சியிலும் மிகமிக மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே அறிந்த முகம் இவர். அதிகம் அறியப்படாத முகமான இவருக்கு, அ.தி.மு.க-வின் இளவரசியாக மகுடம் சூட்டிக்கொள்ள ஆசை பிறந்து விட்டது என்ற தகவலால் ஒட்டுமொத்த சசிகலா உறவுகளும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
அடுத்த தலைவர்!அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா சிறையில் இருக்கிறார். சிறை செல்லுமுன் கட்சியை வழிநடத்த அவர் துணைப் பொதுச்செயலாளராக நியமித்த டி.டி.வி.தினகரனும் திகார் சிறையில் ஜாமீனுக்காகக் காத்திருக்கிறார்.

ஜெயலலிதா படம் திறப்பு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா பிரதமர் மோடிக்கு அழைப்பு

ஜெயலலிதா படம் திறப்பு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா
பிரதமர் மோடிக்கு அழைப்புடெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பட திறப்பு விழாவிலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவிலும் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். புதுடெல்லி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்</ இந்த சந்திப்பின் போது வறட்சி நிவாரணம், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் அவர் வழங்கினார்.

டெல்லியில் தமிழக முதல்வரை முற்றுகை இட்ட பசு பாதுகாவலர்கள் .. எடப்பாடி பழனிசாமி தங்கிருந்த ...

எடப்பாடி பழனிசாமியை பசு பாதுகாவலர்கள் முற்றுகை!
எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மே 23-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். மே 24-ம் தேதி பிரதமர் இல்லத்திற்கு சென்று மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பில் தமிழகம் சம்பந்தமான முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த அறையை, பசு பாதுகவலர்கள் அமைப்பு முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். டெல்லியில் முதல்வர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தை பசு பாதுகாவலர்கள் முற்றுகையிட்டு இறைச்சிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினர். முதலில் முதல்வரை சந்திக்க வேண்டும் என பசு பாதுகாவலர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் முதல்வர் தங்கியிருந்த அறையை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். திருச்சியில் செயல்பட்டு வரும் சட்டவிரோதமான இறைச்சிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இவர்கள் கோரிக்கை விடுத்தனர். பிறகு 3 இளைஞர்களுக்கு மட்டும் முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சட்டவிரோதமான இறைச்சிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.மின்னம்பலம்

புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு மக்கள் தீ வைப்பு !

பார்களுக்கு தீ வைப்பு!minnambalam.com :தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, தமிழகத்தில் 3,500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மதுபானக் கடையை திறக்க தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று, புதுச்சேரியில் 164 மதுக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு எதிராக, அடுத்தடுத்து அமைந்துள்ள 9 மதுபானக் கடைகளை உடைத்தும், மதுபான பாருக்கு தீ வைத்தும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BBC :லண்டனில் முக்கிய இடங்களின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு

மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து, லண்டன் மாநகரின் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய லண்டனில் குவிக்கப்படும் இராணுவத்தினர். நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலைக்கு உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மத்திய லண்டனின் சாலைகளில் இராணுவத்தினர் ரோந்துவர ஆரம்பித்துள்ளது, மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எமது செயதியாளர் கூறகிறார்

கவிஞர் நா.காமராசன் உடல்நலக்குறைவால் காலமானார்!

 poet Na.kamarasan was no more சென்னை: கவிஞர் நா.காமராசன் நேற்று இரவு சென்னையில் திடீரென காலமானார். அவருக்கு வயது 75.
நா.காமராசன் 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ.மீனாட்சிபுரம் கிராமத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்கு பிறந்தார். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் படிக்கும் பொழுது உடன் பயின்ற மாணவர்களான கா.காளிமுத்து பா. செயப்பிரகாசம் இன்குலாப் ஆகியோருடன் கவிஞர் நா. காமராசன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்புடன் கலந்து கொண்டார். முதுகலைப் பட்டம் பெற்ற இவர் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
எம்.ஜி. ஆரால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க வில் பல்வேறு முக்கிய பதவியில் இருந்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி ஆகியோரின் படங்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

புதன், 24 மே, 2017

வைகோ ஜாமீனில் விடுதலை ... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



சென்னை: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 50 நாட்களுக்கு பின்னர் அவர் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். தேசத்துரோக வழக் கில் ஏப்ரல் 3 ம் தேதி வைகோ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அரசு மறுப்பு தெரிவிக்காததால் வைகோவை ஜாமீனில் விடுவிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது..தினகரன்