திங்கள், 13 ஜூன், 2016

ஆர்லாண்டோ கொலைகாரனின் தந்தை ஆப்கான் அரசியல்வாதி ...

Seddique MateenOmar Mateen and familyGunman's father 'running for president of Afghanistan'
More information about the extraordinary background of Mateen's family.
Omar Mateen's father, Seddique Mateen, who has said he believes that gays should be "punished by God," poses with the Afghan flag in military fatigues in this image.
And in a video he posted online, Mateen Snr also declares his candidacy for president in Afghanistan.
Pictured: Killer Omar Mateen smiles in photo with ex-wife and child 
 Beaming for the camera with his wife and child, this could be the image of any cheerful family man.
But behind the smile, the people of Orlando discovered on Sunday, lurked the mind of a cold-hearted killer who gunned down dozens of gay and lesbian fellow Americans, reportedly after being enraged by the sight of two men kissing.
In this photo, killer Omar Mateen poses with one of his ex-wives, Noor Zahi Salman, and his son, whose face has been blurred to protect his identity. www.thetelegraph.uk

அமெரிக்க துப்பாக்கி சூடு! ஆயுததாரி ”கலிபா சிப்பாய்” என ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு

வாஷிங்டன் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட ஆர்லாண்டோ துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று வானொலியில் அறிவிப்பு வெளியிட்டு உள்ள ஐ.எஸ். அமைப்பு ஆயுததாரி ”கலிபா சிப்பாய்” என்று அறிவித்து உள்ளது. அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்திய வாலிபர் உமர் மாதீன்; இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெற்றோருக்கு 1986-ம் ஆண்டு பிறந்தவர், புளோரிடா மாகாணத்தின் போர்ட் செயின்ட் லூசி நகரில் வசித்து வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. இவருக்கு போராளிகள் குழுக்களுடன் தொடர்பு எதுவும் இருந்ததா என்பது பற்றி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருவது மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. 

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்த 5 தனியார் ஆஸ்பத்திரிக்கு 700 கோடி அபராதம்

The five hospitals are – Max Super Speciality Hospital (Saket), Fortis Escorts Heart Institute, Shanti Mukand Hospital, Dharamshila Cancer Hospital and Pushpawati Singhania Reasearch institute. The notice was sent to these erring hospitals demanding an explanation for why they should not be fined for violating the regulations. None of them furnished the satisfactory replies and the fine amount was calculated as per the basis of an high court order passed in 2007 on a PIL on provision for free treatment of poor and action against culprit hospitals.

ஏழைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க மறுத்த 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு ரூபாய் 700 கோடி அபராதம் விதித்துள்ளது. மானிய விலையில் ஒதுக்கீடு செய்யப்படும் இடத்தில் கட்டப்படும் மருத்துவமனைகளில் 10 சதவீத நோயாளிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சட்ட விதிமுறை அமளில் உள்ளது. ஆனால் மருத்துவ மனைகள் இந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிவிடுகின்றன.

எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; வன்கொடுமை செய்யும் போலீசார்

இந்த படத்தை பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறேன்.எழுத்தாளர் துரை குணா காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை பாருங்கள்.பூபதி கார்த்திகேயனும் துரை குணாவும் தன்னை கத்தியால் குத்தினார்கள் என்று புகார் கொடுத்ததாக சொல்லபடுகிற சிவானந்தம், தனக்கு துரை குணா யார் என்று கூட தெரியாது.போலிஸ் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி அவர்களாகவே புகார் எழுதி இருக்கின்றனர் என்கிறார்.அது மட்டும் அல்ல சிவானந்தம் மீது சின்ன கீறல் கூட இல்லை.இன்று அப்பகுதிக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டு இப்போதுதான் திரும்பி இருக்கிறேன்.நாளை விரிவாக எழுதுகிறேன்.பல அதிர்ச்சி தகவல்கள் உண்டு.( பட உதவி திரு.கண்ணன்)

அமெரிக்க விடுதியில் பேர் 50 சுட்டு கொலை .. இஸ்லாமிய பயங்கரவாதி உமர் மைதீன் ஆப்கான் வம்சாவளி

Nightclub Shooting Florida"It has been reported that Omar Mateen made calls to 911 this morning in which he stated his allegiance to the leader of the Islamic State," said Hopper, the FBI's assistant special agent in charge on the case.
Omar Mateen opened fire inside the crowded gay nightclub in Orlando, Fla., killing 50 people before dying in a gunfight with SWAT officers, police said. (Associated Press)
வாஷிங்டன், அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன. துப்பாக்கிச்சூடு அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியவாறு அங்குமிங்கும் ஓடினர். சிலர் கழிவறைகளுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர். இன்னும் சிலர் வெளியே ஓட்டம் பிடித்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க அதிமுக முடிவு ?

உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே சீட் வழங்க முதல்வர் ஜெயலலிதா சீக்ரெட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக134 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சி அமைத்தது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.இந்த நிலையில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரஉள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலிலும், அதிக இடங்களை கைப்பற்ற, ஆளுங்கட்சியான அதிமுக தற்போது களத்தில் இறங்கி வியூகங்களை வகுத்துள்ளது.இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள பெண்கள் கவரும் வகையில்,  இந்திய அரசியல் வரலாற்றில், யாரும் செய்யாத, செய்யமுடியாத புதுமையான சாதனையான, உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே வழங்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் உள்ள பெண்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளர்.இதை அப்படியே முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினால், எதிர்கட்சிகள் அவர்களது கட்சியில் பெண் வேட்பாளர்களை தேடி கண்டிபிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.வெப்துனியா.காம்

ஞாயிறு, 12 ஜூன், 2016

தருண் விஜய்: கங்கையில் திருவள்ளுவரின் 12 அடி சிலை 26ம் தேதி திறக்கப்படும்... அடுத்தது பெரியார் சிலையும் திறக்கப்படும்?

12 feet statue for Thiruvalluvar in banks of river Gangaஉத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் திருவள்ளுவரின் 12 அடி உயர சிலை, வரும் 26ம் தேதி திறக்கப்படும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், திருக்குறளால் ஈர்க்கப்பட்டவர். கடந்த பல வருடங்களாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திருக்குறளின் பெருமை குறித்து பரப்புரை நிகழ்த்தி வருகிறார். திருவள்ளுவருக்கு தமது சொந்த மாநிலத்தில் சிலை அமைக்க வேண்டும் என்றும் அவர் முயற்சி மேற்கொண்டு வந்தார்.   தமிழ்நாட்டில இதுத்வா  வேரூன்ற என்னவும் செய்வாங்க ...

சாதிக் பாட்சா கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு? வைகோ ஜெயலலிதாவின் அடுத்த மூவ்?

சென்னை; முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்திருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்புத் துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது. ---- நீ பாதி நான் பாதின்னு பாடுறமாதிரில்லா பாக்கிராய்ங்க?

ஆஸ்கருக்கு செல்லும் "கோர்ட்" ! நீதித்துறையின் அவலத்தை...சென்னையில் இன்று திரையிடப்படுகிறது ... சர்வதேச விழாக்களில் விருதுகளை குவித்த

ஆஸ்கார் போட்டிக்கு இப்படம் இந்தியா சார்பில் தெரிவாகி உள்ளது .வெனிஸ் திரைப்பட விழா உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்த படம் ‘கோர்ட்’. இந்திய நீதித்துறையின் அவலத்தை பதிவு  செய்யும் இப்படம் சென்னையில் வருகிற 18ம் தேதி ‘மறுபக்கம்’ என்கிற அமைப்பால் திரையிடப்படுகிறது. அனுமதி இலவசம். இயன்றவர்கள் படம் பார்த்துவிட்டு தங்கள் பங்களிப்பை செலுத்தி இதுபோன்ற திரையிடல்களை ஊக்குவிக்கலாம். ஓவியர் டிராட்ஸ்கி மருது, ஒளிப்பதிவாளர் செழியன், இயக்குநர் பிரசன்னா ராமசாமி, எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன், பத்திரிகையாளர் கவின்மலர் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். முகவரி: எம்.எம் பிரிவியூ தியேட்டர், தி நகர் (கோடம்பாக்கம் ஃபிளை ஓவர் அருகில்) தொடர்புக்கு: 9940642044; 8695279353

மருத்துவம் பொறியியல் போதுமா? நீதிமன்றம்,சட்டம், அரசு எல்லாம் நமக்கு எதிராக இருக்கிறதே?

தனியார் பள்ளி - அரசுப் பள்ளிசென்ற வருடம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த சமயத்தில் நமக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்? கல்விக்கான நமது அடிப்படை உரிமையை மீட்டெடுக்க போராடுவதன் அவசியம் என்று எனது பள்ளி கல்லூரி வாழ்க்கை அனுபவத்தை (மாணவர் + பெற்றோருக்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் கடிதம்) உங்களிடையே பகிர்ந்திருந்தேன். இப்பொழுது இந்த வருட தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் நாம் பெற்ற அனுபவம்; பெற்றுக்கொண்ட படிப்பினைகள், போக வேண்டிய தூரம் என்ன என்பதை இக்கட்டுரையில் தொட்டுச் செல்வோம்.

வாக்காளர் பட்டியல் இனி சரிபார்த்து என்ன பயன்? திருடு போனபின்பு தேர்தல் ஆணையம் பூட்டு போடபோகிறது

தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த பின், தற்போது தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த உத்தரவு பிறப்பித்து என்ன பயன்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு அனுப்பியிருக்கிறது. அந்த உத்தரவில், ''தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த வேண்டும்.

அமெரிக்க இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 20 பேர் மரணம் 42 பேர் காயம்


Authorities in Florida said at a news conference Sunday morning that “as many as 20 people died” in a shooting at an Orlando nightclub. ... Orlando Police Chief John Mina said at least 42 people have been transported to area hospitals. .
நியூயார்க், புளோரிடாவில் இரவு விடுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஓர்லிண்டோ நகரில் பல்ஸ் என்ற இரவு விடுதி உள்ளது. இந்த விடுதியில் அதிகாலை நேரத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் கூட்டத்தை பார்த்து சரமாறியாக சுட்டார். இதனால் இரவு நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட துவங்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சுமார் காலை 7 மணி வரை நீடித்தது.

ஜெர்மனி : நீச்சல் குளத்தில் இஸ்லாமிய உடைக்கு தடை

ஜேர்மனில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும்போது Burqini ஆடையினை அணியக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. என்ற இடத்தில் உள்ள குளத்தில் பெண்கள் மட்டும் குளிப்பதற்கு ஏதுவாக வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கு வரும் இஸ்லாமிய பெண்கள், Burqini ஆடையினை அணிந்து குளிக்கின்றனர், இந்த ஆடை நீச்சல் ஆடை போன்று இருக்காமல் உடல் முழுவதும் மூடப்பட்டபடி, சற்று மொடனாக இருக்கும். மற்ற பெண்கள் நீச்சல்ஆடையில் குளிக்கையில், இஸ்லாம் பெண்கள் மட்டும் Burqini ஆடை அணிந்து குளித்துள்ளது சக பெண்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு பணியில் ஆர் எஸ் எஸ் ! வீரமணி கடும் கண்டனம்

கி.வீரமணி | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத் மத்திய அரசு பணிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை சேர்க்கும் முடிவு சரியல்ல என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்கள் மத்திய அரசு பணிகளில் சேரலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்ற செய்தி அபாயகரமானது. இதன் மூலம், சிறுபான்மையினரும், மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களும் ஒவ்வொரு நொடியையும் அமைதியற்ற முறையில் கழிக்க வேண்டும் என்ற நிலைக்கு கத்தியைத் தீட்டிவிட்டார்கள் என்று தெரிகிறது.

தந்தையை போட்டு தள்ளிய மகள்... காதலுக்கு குறுக்கே நின்றாராம்

>காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை, மகள் தன் காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொலை செய்யதுள்ளார். >கோவை சொக்கம்புதூரை சேர்ந்த நாகராஜன் என்னும் விவசாயி கடந்த மே 23ஆம் தேதி நெகமம் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்றவர், மறுநாள் காலை சாலையில் இறந்து கிடந்துள்ளார்.>இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த விவசாயின் மகள் மகாலட்சுமி அவரது காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தந்தையை தனது காதலன் சதீசுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொலை செய்துள்ளார்.

சனி, 11 ஜூன், 2016

மதுரை அரசு மருத்துவமனை: லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மகனை பறிகொடுத்த தந்தை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஊழியருக்கு 300 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் தாமதமான சிகிச்சையால் மகனை பறிகொடுத்த தந்தை போலீஸில் புகார் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. தட்டச்சு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். மகன் ராஜேந்திர பிரசாத்துக்கு, (18) கடந்த 2-ம் தேதி காலை 10.30 மணியளவில் வலிப்பு ஏற்பட்டதால், 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் இறங்கியதும் உடனடியாக அவசர சிகிச்சை வெளிநோயாளிகள் வார்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல், மருத்துவர் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்நோயாளிகள் பிரிவுக்குக் கொண்டு செல்லும்படி கணபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?

thetimestamil.com :வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது:
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க 10 யோசனைகள்!


0a2wசினிமா மீதான ஆர்வம் கொண்டவர்களுக்கும், குறைவான முதலீட்டைக் கொண்டோ, ‘ஜீரோ’ பட்ஜெட்டிலோ படம் எடுக்க நினைக்கும் அறிமுக இயக்குநர்களுக்கும் அனுராக் காஷ்யப் பத்து வழிமுறைகளை ‘எம்.டிவி இந்தியா’ மூலம் வழங்கியிருந்தார். அதன் எழுத்து வடிவம் இதோ..
  1. குறைவான இடங்களில் கதைக்களம் அமைப்பீர்

பாரிவேந்தருக்கு ஜால்ரா அடிக்கும் இயக்குனர்கள் சங்கம்... வள்ளல் வழுக்கை வேந்தர் எங்க முதலாளி....

parivendharஎங்க முதலாளி, நல்ல முதலாளி; வள்ளல் குணம், நல்ல மனம் உள்ள முதலாளி” பார்வேந்தர் குறித்து பாட்டாகவே பாடிய இயக்குநர்கள் சங்கம்
கடந்த இரண்டு வாரங்களாக தமிழக ஊடகங்களில் பாரிவேந்தருக்கும் வேந்தர் மூவிஸ் மதனுக்குமான ‘சண்டைகள்’தான் தவிர்க்க முடியாத செய்தியாக இடம்பெறுகின்றன.  பாரிவேந்தர் என்று அழைக்கப்படும் எஸ் ஆர் எம் குழுமத் தலைவர் பச்சமுத்துக்குச் சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி சில நாட்கள் இந்தச் செய்தியைத் தவிர்த்து வந்தது, பிறகு மதன் தரப்பிலான செய்திகளும் இடம் பெற ஆரம்பித்தன. மதனின் கடிதம், மருத்துவக் கல்லூரிக்காக லட்சக் கணக்கில் பணம் பெற்றதை உலகத்துக்குச் சொன்னது. பணம் கொடுத்து ‘ஏமாந்த’ பல மாணவர்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரிசை கட்டி நின்றார்கள். மருத்துவ கல்லூரியில் ஒரு சீட்டுக்கு ரூ. 1 கோடி கேட்டதாகவும், மதனிடம் முன்பணமாக 10 லட்சம் தந்ததாகவும் புகார் அளித்தார் ஒரு மாணவர். விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

துணைவேந்தர் பதவிகள் எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது'

தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. ' கடந்த காலங்களில் 3 கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர் பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக போராசிரியர் கணபதி நியமிக்கப்பட்டிக்கிறார். அதேபோல், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பாஸ்கரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நீடித்து வந்த குழப்பங்கள் நீங்கிவிட்டன. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக்காலம் நிறைவடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

திண்டுக்கல். தலித் பெண் கொலை... 3 கொடியவர்கள் பாலியல்... ஜாதி பார்க்கும் போலீஸ்

திண்டுக்கல் அருகே 21 வயது பெண் கடந்த மாதம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்த பின்னரும் கூட, இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்று சரிவர தெரியவில்லை என பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
ரேகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கடந்த மேய் மாதம் 2 ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இந்நிலையில் அவரது சடலம் மேய் 6 அன்று  திண்டுக்கல் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ரேகாவின் உறவினர்கள், அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினாலும், போலீசார், அவர் கற்பழிக்கப்பட்டார் என்ற  குற்றச்சாட்டை ஏற்க மறுத்து வருகின்றனர்.

வெள்ளி, 10 ஜூன், 2016

ஷகீலா ; சினிமா வாய்ப்புக்காக நான் ஒருபோதும் தரம் தாழ்ந்தது இல்லை

சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக நான் எங்கேயும் கீழ்ப்படியவில்லை. யாருக்கும் இரையாகவில்லை”: ஷகிலாவின் சுயசரிதையிலிருந்து எதிர்பார்க்கவே இல்லை. ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்ற என் முதல் படம் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய ஹிட் ஆனது. சில்க் ஸ்மிதாவுடன் நடித்த அந்த சினிமாவின் வெற்றி என்னை ஆனந்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. சினிமா என்னும் பிரம்மாண்ட உலகத்தில் என் எதிர்காலம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அத்தனை நாள் யாராலும் அறியப்படாமல் கோடம்பாக்கத்தின் ஒரு சாதாரண இளம்பெண்ணாக இருந்த நான் தென்னிந்தியா முழுக்க அறியப்பட்டுவிட்டேன். சினிமாவின் டிக்ஷனரியில் ஷகீலா என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டுவிட்டது. இவ்வளவு பெரிய வெற்றியும் கவனமும் எனக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.  மலையாள திரையுலகில் பெரிதாக கலை கொள்கை  முழக்கம் இடும் மோகன்லால் மம்முட்டி போன்ற வியாபாரிகள் நடிகை ஷகீலாவை ரொம்ப மோசமாக திரை உலகை விட்டு அப்புறப்படுத்தினார்கள் ..

விகடனின் புண்ணாக்கு ஒப்பீடு : வடிவேலு ,பெரியார், அம்பேத்கர், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்

இந்த விகடனின் தடம் என்ற இதழ், ஏதோ கலை, இலக்கியத்தை உய்விக்க ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டது என்ற ரீதியில் எழுதி சூடம் கொளுத்தி தங்களின் பக்தியை பறைசாற்றும் பதிவுகளை வாசிக்க முடிந்தது. நானும் இதழை வாங்கி புரட்டிப் பார்த்தேன், பக்கவாட்டில் சாய்த்து, அண்ணாந்து தூக்கிப்பார்த்தேன், குனிந்து கீழே இறக்கிப் பார்த்தேன், சிரகாசனத்தோடு கண் சிவக்க பார்த்தேன். எந்த கோணத்திலும் பார்த்தாலும் எனக்கு இலக்கியமும் தெரியவில்லை, லேகியமும் தெரியவில்லை. இப்படி சகட்டு மேனிக்கு பார்த்ததில் உடலில் கண்ட இடத்தில் சுளுக்கு வந்ததுதான் மிச்சம். போதாக்குறைக்கு அட்டைப்படத்தில் பெரியார், அம்பேத்கர், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் கோட்டோயோவியங்களோடு சிரிப்பு நடிகர் வடிவேலு படத்தையும் போட்டு யாரை கேவலப்படுத்துகிறார்கள் எனத்தெரியவில்லை.    எஸ் எஸ் வாசனே கொக்கோக சாத்திரம் என்றா காம கிளர்ச்சி நூலை அந்த காலத்திலேயே எழுதி பணம் பார்த்தவர் .. விகடன் குழுமம் புலிகளின் அத்தனை  மோசமான விடயங்களையும் நியாயப்படுத்தி பணம் பண்ணியவர்கள்

அதிமுகவில் சேர்ந்தால் எல்லாம் பெறலாம்.. பகிரங்கமாக வலைவிரிக்கும்"570 கழகம்"

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது அதிமுக. வலிமையான எதிர்கட்சியாக திமுக சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த மாநில மகளிரணி துணைச் செயலாளர் ஜி.விஜயகுமாரி , திமுக மாநில பிரசாரக்குழுச் செயலாளர் கண்மணி,
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளரும், போளூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவருமான ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான செந்தில்குமார், நகைச்சுவை நடிகர் கேதீஸ்வரன் என்ற போண்டா மணி உள்ளிட்டோருடன் மேலும் சிலர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

ராமதாஸ் கட்சிக்காக என்னிடம் கைநீட்டினார் ! பாரிவேந்தர் பச்சமுத்து கிளறிய பிளாஷ்பேக்

சென்னை: வேந்தர் மூவிஸ் நிறுவனத்தன் மதன் காணாமல் போன விவகாரத்தில் பாரிவேந்தர் மீது ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில், கட்சி மாநாட்டுக்காக ராமதாஸ் என்னிடம் கை நீட்டினார் என பாரிவேந்தர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாரிவேந்தர் வெளியிட்ட அறிக்கை:
எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மற்றும் வேறுபல கல்லூரிகளிலும்  இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பொய்யான வாக்குறுதி மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்ட மதன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீதும் தனிப்பட்ட முறையில் என் மீதும் அடுக்கடுக்கான பொய்களை கோர்த்து சற்றும் மனசாட்சியின்றி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். .. வழுக்கை வேந்தர்  லேசுப்பட்ட ஆளில்லை  பாஜகவின்  அடியாள் இவர் ..  மதன் விவகாரம் இவரது கைவண்ணம்தான்