சனி, 11 ஜூலை, 2015

நத்தம் விஸ்வநாதன்::மின்வாரியத்தில் ஊழல் நடக்கவே இல்லை! கலைஞர் பொய் சொல்கிறார்?

கருணாநிதி, நத்தம் விஸ்வநாதன் | கோப்புப் படம்
மின் வாரியத்தில் ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட சி.செல்வராஜ் தன்னை வளர்த்த மின் வாரியம் நசிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும், அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு முழு பயன்பாட்டில் இருக்கக்கூடாது என்ற நோக்கிலும் வெளியிட்ட செய்திகளையும் புகார்களையும் நம்பகமற்ற நாளிதழ் செய்திகள் வெளியிட்டிருந்தன.
மேலும், அவரின் கற்பனை அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஒரு பொது நல மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

சிதம்பரம் ஆவேசம்: நரேந்திர மோடி இந்தி பேசும் மக்களுக்கு மட்டுமா பிரதமர்?

திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார பிரதிநிதிகளின் மாநாடு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் வயலூர் முத்துலெட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ப.சிதம்பரம் பேசும்போது, கடந்த நாடளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து நாடு முழுவதும் மோடி குடுகுடுப்பைகாரன் போல நல்லாகாலம் பிறக்க போவுது என்று பிரச்சாரம் செய்தார். இப்போது யாருக்கு நல்லகாலம் பிறந்துயிருக்கு என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

வெள்ளி, 10 ஜூலை, 2015

நலந்தானா ஜெயலலிதா? வழக்குகளை வென்றது போல் நம்பிக்கையுடன் நோயையையும் வெல்ல வாழ்த்துகிறோம்!


ரசியல்வாதிகளுக்கு முதுமையும் முதலீடுதான்! உடலின் வலிமையைத் தாங்கும் சக்தி, தன் கால்களுக்கு இல்லை என உணர்ந்ததுமே வீல் சேரில் கூச்சப்படாமல் உட்கார்ந்தார் கருணாநிதி. 'வீல் சேரில் வலம்வரும் வில் பவரே...’ என்ற பட்டம் கிடைத்தது. இதை இயல்பான மாற்றமாக மாற்றிக்கொண்டார் கருணாநிதி.
ஒரு சினிமாவின் ப்ரிவ்யூ அது... இயக்குநர் மணிவண்ணன் அங்கு வந்திருப்பதை அறிந்தார் கருணாநிதி. அவரை அழைத்து வரச் சொன்னார். காலைச் சாய்த்துச் சாய்த்து மணிவண்ணன் நடந்து வந்தார். 'இந்த மாதிரி ஒரு வீல் சேர் வாங்கிக்கோய்யா... நிம்மதியா உட்கார்ந்துட்டுப் போகலாம். வசதியா இருக்கு; சோர்வும் இருக்காது’ எனச் சொன்னார் கருணாநிதி. அதாவது தன் உடல்நிலையைக்கூட சாதாரணமானதாக நினைத்து, அதை உள்வாங்கி விழுங்கப் பழகிக்கொண்டார் கருணாநிதி. 'இத்தனை வயதிலும், நடக்க முடியாத சூழலிலும் இத்தனை மணி நேரம் உழைக்கிறார்’ எனச் சொல்வதே, தனக்கான கம்பீரமாக கருணாநிதி மாற்றிக்கொண்டார்.

கும்பமேளாவையொட்டி நாசிக்கில் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகம்! பெண்கள் ஜாக்கிரதை?

மகா ராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் ஜூலை 14 அன்று கும்பமேளா என்ற அம் மணச் சாமியார்களின் கூட்டுக் களியாட்டம் நடைபெறும் இந்த நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள்  விநியோ கிக்கப்பட்டுள்ளன. மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமி டெட் என்ற இரண்டு நிறுவனங்களும் கடந்த மாதம் நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறை யில் அளவை 60 விழுக் காடு குறைத்துள்ளது.  இது குறித்து அந்த நிறு வனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள் ளது  அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,  மக ராஷ்டிரா நகரமான நாசிக்கில் ஜூலை 14 மகாகும்பமேளா நடை பெற உள்ளது இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நக ரத்திற்கு அனுப்பியுள் ளோம். ஆகவே முன்னேற் பாடான இதர மாநிலங் கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளவேண்டு கிறோம் என்று அனுப்பி இருந்தது.

பாகுபலிக்கு கேரளாவில் எதிர்ப்பு? ஷங்கரின் ஐ, கேரளாவில் 200 திரையரங்குகளில் வசூல் செய்ததுபோல் மீண்டும் வசூலிக்க ????

இன்று, பாகுபலி படம், உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆரவாரம் எல்லாம் கேரளாவில் இல்லை. அங்கு மலையாளத்தில் டப் செய்யப்பட்டு 200 திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த பாகுபலி, 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. காரணம், கேரளத் திரையுலகில் இப்படத்துக்கு எழுந்த எதிர்ப்புதான். மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் இந்தப் படத்தால் நேரடி மலையாளப் படத்துக்கு வருங்காலத்தில் பாதிப்பு வரும் என்பதால் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 
கேரளாவில் பாகுபலி படத்தை குளோபல் யுனைடெட் மீடியா வெளியிடுகிறது. பெரிய அளவில் படம் வெளியிடப்படுவதால், இதற்கு கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாலசந்தருக்கு சிலை? கூடவே நடிகை பிரமிளாவுக்கும் வையுங்க! பாலச்சந்தரை விட அவுக மேல்!

Director-K-Balachanderநல்லது. ‘பாலசந்தருக்கு சிலை வைக்க வேண்டும். தெருவுக்கு அவர் பெயர் வைக்க வேண்டும்’ என்று அவரைப் பெரிய தியாகிபோல் சித்தரித்துக் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. முதலில் பாலசந்தருக்கு ‘பாலசந்தர்’ என்ற பெயரை வைங்க. ‘இயக்குர் சிகரம்’, ‘காலத்தை வென்ற கலைஞன்’ இன்னும் பல பெயர்களால் தான் அவர் குறிக்கப்படுகிறார்.
என்ன பெரிய தியாகம் பண்ணார்? ஒரு வைதிகப் பார்ப்பனரை விட மிக மோசமான பார்ப்பன உணர்வு கொண்டவராகதான் தன் படங்களை எடுத்ததார். இடஒதுக்கீடு எதிர்ப்பு, மதமாற்ற கண்டிப்பு, தமிழின் முதல் முழு நீள முஸ்லீம் எதிர்ப்புப் படமான ‘ரோஜா’ தயாரிப்பு.. இதுக்கெல்லாமா சிலை வைப்பாங்க?
தன்னைத் திமுக அல்லது அண்ணாதுரையின் ஆதரவாளராகச் சில படங்களில் சித்தரித்துக் கொண்டதெல்லாம், பெரியார் எதிர்ப்பின் பின்னணிதான். அண்ணாவை உயர்த்துவதே பெரியாரை மட்டம் தட்டுவதற்காகதான்.

Airport டிசைன் பிடிக்காததால் ஆர்கிடெக்டை போட்டுத் தள்ளிய வட கொரிய அதிபர்

 புதிய முனையங்களை வடிவமைத்த நிபுணரை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. வட கொரியா தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள பியோங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் 2 புதிய முனையங்கள் கட்டப்பட்டுள்ளன. கண்ணாடி சுவர்கள் கொண்ட அந்த முனையங்கள் பற்றி தான் உலக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 1ம் தேதி தான் அந்த முனையங்களின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது.  இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு முனையத்தின் வடிவமைப்பு பிடிக்கவில்லையாம். வடிவமைப்பாளர் மா வன்-சுன் தனது அரசின் உத்தரவை மனதில் வைத்து செயல்படாமல் தவறு செய்துவிட்டதாக கிம் ஜோங் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மா வன்-சுன் மாயமாகியுள்ளார். அவர் ஒன்றும் மாயமாகவில்லை, கிம் ஜோங் உன் தான் அவருக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியிருப்பார் என்று கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் - இலங்கை இடையே பாலம், சுரங்கப்பாதை. ரூ.22,000 கோடியில் மத்திய அரசு புதிய திட்டம்..


டெல்லி: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு துவங்கவுள்ளது. 22,000 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும், கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்பட உள்ளது. rameswaram bridge டெல்லியில், சாலை போக்குவரத்து தொடர்பாக நேற்று நடந்த மாநாட்டில், மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார். மாநாட்டுக்குப் பிறகு நிதின் கட்கரி கூறியதாவது.. அண்டை நாடுகளுடன், வர்த்தக ரீதியான உறவை பலப்படுத்த, போக்குவரத்து இணைப்பு வசதி முக்கியமானதாக கருதப்படுகிறது.

வியாழன், 9 ஜூலை, 2015

ராஜேந்தர்: சிம்புவுக்கு எதிராக சதி நடக்கிறது! அச்சனும் மோனும் கொஞ்சம் கூடி முக கண்ணாடி நோக்கினால் மதி?

சிம்பு நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள வாலு படம் ஜூலை 17-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட உள்ளது.
இந்த நிலையில், வாலு' படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. 'தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக 2013-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது வேறு நபர் மூலமாக படத்தை வெளியிட உள்ளார்கள். எனவே வாலு படத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

வியாபம் ஊழல், 42 வது மரணம் ! மத்திய பிரதேஷ் சாட்சி காவலரும் மரணம்!


'வியாபம்' ஊழல் வழக்கில் சாட்சியாக இருந்த போலீஸ் காவலர் திடீர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகள் என மர்மமான முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப்பிரதேச மாநில தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த ஊழலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இது ஊழல் வழக்கை தற்போது மாநில உயர்நீதி மன்ற மேற்பார்வையின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகள் என அடுத்தடுத்து பலரும் மர்மமான முறையில் மரணம் அடைந்து வருகின்றனர்.

2018ல், இந்தியா வில் 4.37 லட்சம் கோடீஸ்வரர்கள் அல்ல அல்ல கொள்ளைக்காரர்கள்?

அப்போ வறுமை கோடு அழிஞ்சு போய்டுமா? புதுடில்லி: 'வரும் 2018ல்,
இந்தியா வில் 4.37 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பர்; 2023ல் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும்' என, புதிய ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து, சிங்கப்பூரைச் சேர்ந்த 'வெல்த் எக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல்கள்: சொத்து உருவாக்கல் அடிப்படையில், அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் காலமாக இருக்கும். கடந்த ஆண்டில், இந்தியாவில் 6.3 கோடி ரூபாய் அல்லது அதற்கு அதிக மதிப்பில் சொத்துடைய கோடீஸ்வரர் எண்ணிக்கை 2.5 லட்சம். முந்தைய ஆண்டை விட, 27 சதவீத புது பணக்காரர்கள் உருவாகி உள்ளனர்; வரும் 2018ல், இந்த எண்ணிக்கை, 4.37 லட்சமாக உயரும்; 2023ல், அதை விட, இரு மடங்கு கோடீஸ்வரர்கள் இருப்பர். இந்தியாவில் சிறப்பான சீர்திருத்தங்களை அமல்படுத்தி வரும் புதிய அரசு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் காரணமாக, புதிய உத்வேகத்துடன் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும், குறிப்பிடத்தக்க வகையில், புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடுகளாக திகழும். இவ்வாறு, 'வெல்த் எக்ஸ்' நிறுவன ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது dinamalar.com

சுஷ்மா சுவராஜ், லலித் மோடி – வசுந்தரா ராஜே! பா.ஜ.க டவுசரை உருவிவிட்டனர்.

லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.லித் மோடி – சுஷ்மா சுவராஜ், லலித் மோடி – வசுந்தரா ராஜே உறவு விவகாரங்களில் அம்பலத்துக்கு வந்திருக்கும் திரைமறைவு இரகசியங்கள் பா.ஜ.க.வோடு, ஊழலுக்கு எதிரானவராகவும், வலிமையான தலைவராகவும் முன்நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியின் டவுசரையும் உருவிவிட்டன. லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே – இந்த மூவரில் யார் மீது நடவடிக்கை எடுத்தாலும், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொண்டது போன்ற நிலையை உருவாக்கிவிடும் என்ற நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட மோடி, வழக்கமாக காது வரை கிழியும் தன் வாய்க்குப் பூட்டுப்போட்டு “மன்மோகன் சிங்” ஆகிவிட்டார். அவரது அமைச்சர்களெல்லாம் ஊடகங்களின் கண்ணில் படாமல் தப்பித்து ஓடுகின்றனர்.
அப்பாடக்கராக முன்நிறுத்தப்பட்ட மோடியின் டவுசரை உருவிய மும்மூர்த்திகள் : லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

மோடியின் செல்ஃபி ஆசனம்பொதுவாக யோகிகள் எனப்படுவோர் ஊனுடலை வெறுத்தவர்கள் என்றே கூறப்படுகின்றனர். ஆனால், இன்று புழக்கத்தில் இருக்கும் யோகாவோ, இதற்கு நேரெதிரான பொருளில், மூட்டு வலி, முதுகு வலி போன்ற ஊனுடல் சார்ந்த பிரச்சினைகளுக்கான மருந்தில்லா வைத்தியமாகவும், உடல் பருமனைக் குறைத்து அழகைப் பேணும் கலையாகவும் பயன்பட்டு வருகிறது.
பொய் புரட்டுகளால் கட்டமைக்கப்பட்ட இந்து பாரம்பரியம் குறித்த பார்ப்பன பாசிஸ்டுகளின் பெருமிதமும், தன்னை தேசத்தின் மீட்பனாகக் கற்பித்துக் கொண்ட மோடி என்ற வெட்கங்கெட்ட அற்பவாதியின் சுய விளம்பர மோகமும் கூடிப் பெற்றெடுத்திருக்கும் கேலிக்கூத்துக்குப் பெயர் – “சர்வதேச 
யோகா தினம்.
“கழிவறைக்கு ஒரு ஐ.நா. தினம் இருக்கும்போது, யோகாவுக்கு ஒரு தினம் இருக்கக்கூடாதா?” என்று கேட்டிருக்கிறார் ரவி சங்கர்ஜி. பொருத்தமான கேள்விதான்!
வருடம் 365 நாட்களுக்கும் ஏதாவது ஒரு தினம் என்று ஐ.நா. அறிவிக்கத்தான் செய்கிறது. இப்படி ஐ.நா. அறிவிக்கும் தினங்கள் குறித்து யாரும் பெருமை கொள்வதில்லை. ஆனால், மோடி பெருமை கொள்கிறார். “இது உலக அரங்கில் இந்தியா பெற்றிருக்கும் அங்கீகாரம்” என்றும், “இதன்மூலம் பாரதம் உலகத்துக்கே வழிகாட்டுகின்ற விசுவ குரு” ஆகிவிட்டதாகவும் பீற்றிக் கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரி தன்னைத்தானே ஜெகத்குரு என்று கூறிக்கொள்வதைப் போல!

தேர்தல் : 1000 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பை சட்டமன்றத்தில் ஜெ. வெளியிடுவாரு?

"ஹலோ தலைவரே... …முதல்வரான பிறகு எம்.எல்.ஏ.வாகி சாதனை படைச்ச ஜெ., சனிக் கிழமையன்னைக்கு அதற்கான பதவிப்பிரமாணம் செஞ்சிக்கிட்டதும் கொடநாடு போவாருன்னு எதிர்பார்க்கப்பட்டது.'"அது நடக்காததால பலவித யூகங்களோடு பரபரப்பாயிடிச்சே.சனிக்கிழமை எம்.எல்.ஏ.வா ஜெ. பதவியேற்கிறதுக்காக காலை 10.40க்கு கார்டனிலிருந்து கிளம்பினார். முன்பெல்லாம் ஸ்பீடா போகுற அவரோட கான்வாய் இப்ப 40 கி.மீ. ஸ்பீடுக் குள்ளேதான் கோட்டைக்குப் போனது. அங்கே அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களெல்லாம் உற்சாக வரவேற்பு கொடுத்தாங்க. ஜெ.வை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், டி.ஜி.பி அசோக்குமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சி.எம். செல் தனி அதிகாரி இன்னசன்ட் திவ்யா எல்லாரும் பொக்கே கொடுத்து வரவேற்றாங்க. யார்கிட்டேயும் பேசாம சபாநாயகர் அறைக்குப் போனாரு ஜெ.  அவர் பதவியேற்றப்ப மந்திரிகள் கைதட்டினாங்க. ஆனா இந்த நிகழ்ச்சியை கவரேஜ் பண்ண மீடியா, ஃபோட்டோகிராபர்ஸ் யாரையும் உள்ளே அனுமதிக்கலை. அரசாங்கம் கொடுத்த ஃபோட் டோக்கள்தான் மீடியாக்களில் வெளியானது.''

மலப்புரம்:13 வயது சிறுமியை 40 பேர் பாலியல் பலாத்காரம் தாய் உடந்தை? 12 பேர் கைது!.


திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கணவனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள ஒரு பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் அண்மையில் சென்றிருந்தனர். பிற ஆண்களிடம் எப்படி பழக வேண்டும்?.. பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகாமலிருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து ஆறாம் வகுப்பு மாணவிகளிடையே அவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது, 13 வயது சிறுமி அந்த அதிகாரிகளிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்தாள். தனது தாயார் இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது துணையுடன் தன்னை கடந்த 2 ஆண்டுகளாக பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், தாயின் இரண்டாவது கணவரின் மகன் உள்பட சுமார் 40 பேர் இதுவரை தன்னை பலாத்காரம் செய்து, சீரழித்ததாகவும் அந்த சிறுமி கண்ணீருடன் தெரிவித்தாள்.

புதன், 8 ஜூலை, 2015

அதிமுகவினர் 4 ஆண்டு வேதனை விளக்கக் கூட்டம் நடத்தலாம்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் | கோப்புப் படம்
அதிமுகவினர் நான்கு ஆண்டு கால சாதனைகளை விளக்கி கூட்டம் நடத்த சொல்வது மிகவும் கேலிக்குரியது. அதை விட நான்கு ஆண்டு கால வேதனைகளை விளக்கிக் கூட்டம் நடத்தலாம்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனைகளை விளக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தவறான தகவல்களை வழங்கியிருக்கிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு மின்தேவை முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் இப்பொழுது ஒளிர்கிறதாக கூறியிருக்கிறார். இதன்மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்திருக்கிறார்.

குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த பிளஸ்–2 மாணவி

 கோவையில் பரபரப்பு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் 16 வயதான பிளஸ்–2 மாணவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார். இருந்த போதிலும் திவ்யாவுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார்.

ஜாதிவெறி ? எச்சரிக்கையான வார்த்தை? வெட்டியது வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறி !

இவ்வளவு நடந்த பிறகும் கூட பொதுவாக ‘ஜாதி வெறி, ஜாதி வெறி‘என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எந்த ஜாதி வெறி என்று சொல்ல முடியவில்லை என்றால், நம்மால் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்? ‘கோகுல் ராஜ் கழுத்தை வெட்டியது வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறி‘ என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். அது ஜாதி வெறியர்களை மட்டும் குறிக்கிற சொல்தானே. மற்றவர்களுக்கு எப்படி கோபம் வரும்? வந்தால் அவர்களும் யுவராஜ் தானே.mathimaran.wordpress.com

ஜெயலலிதா, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் ! எல்லா நீதிபதிகளுக்கும் ஒரு விலை உண்டு.? அது உண்மை என்றே நீதிபதி குமாரசாமி நிரூபித்துக் காட்டினார்.

Sathyanarayana
FL12_kumaraswamy_j_2418095mநீதிபதி சத்யநாராயணா
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் அப்பழுக்கற்ற நேர்மையான நீதிபதிகளின் எண்ணிக்கை சொற்பமே.   அதுவும், முதுகெலும்போடு உள்ள நீதிபதிகள் மிகவும் குறைவு.  குறிப்பாக அரசுக்கு எதிரான வழக்கு என்றால், பெரும்பாலான நீதிபதிகள் பம்முவார்கள்.    அவர்கள் அவ்வாறு பம்முவதற்கு, அச்சம் மட்டும் காரணமல்ல.   அடுத்து தலைமை நீதிபதியாகவோ, உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ பதவி உயர்வதற்கு, அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தால், ஆபத்து வந்து விடுமே என்பதற்காக எவ்வளவோ சமரசம் செய்து கொள்ளும் நீதிபதிகள்தான் அதிகம். தொடக்க காலத்தில் நேர்மையாக இருக்கும் பல நீதிபதிகள், இது போன்ற காரணங்களால், நிலை தடுமாறி, நேர்மையிலிருந்து பிறழ்கிறார்கள்.   பிரேமானந்தா வழக்கை விசாரித்த நீதிபதி பானுமதி, பிரேமானந்தாவுக்காக ஆஜரான ராம் ஜெத்மலானியை பகைத்துக் கொண்டதால், அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வு, நான்கு வருடங்களுக்கு மேல தாமதமானது.   

எம்எஸ் விஸ்வநாதன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. 87 வயதாகும் எம் எஸ் விஸ்வநாதனுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நிலை மோசமடைந்தது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.  சில தினங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்த சீரற்ற முறையில் அவர் உடல்நிலை காணப்பட்டதால், மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது மகன்கள் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
Read more at: /tamil.filmibeat.com/ne

செவ்வாய், 7 ஜூலை, 2015

விசாகா சிங் : Facebookஇல் சொந்த முகத்தை காட்டக் கூட தைரியம் இல்லை உங்களுக்கு!

திரைநட்சத்திரங்களுக்கும் ரசிகர்களுக்குமிடையேயான தூரம் என்பது மிக நீ......ண்டதாக இருந்தது. ஆனால் இப்போதோ சமூக வலைதளங்களின் மூலமாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகையுடன் மிக நெருக்கமாகிவிட்டனர். இதனால் நடிகர்/நடிகைகளுக்கு பல லாபம் இருந்தாலும் சில சமயங்களில் பிரச்சனைகளும் ஏற்பட்டுவிடுகின்றன. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் அறியப்பட்ட நடிகை விகாஷா சிங் தனது படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார். அந்த படத்தில் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்துவிட்டார். இந்த கீழ்த்தரமான செயலால் மனம் நொந்து அமைதியாக போய்விடாமல் அவரை காய்ச்சி எடுத்துவிட்டார் விஷாகா. ’சொந்த முகத்தை காட்டக் கூட தைரியம் இல்லை உங்களுக்கு. என்னைப் பற்றி பேசியது போல் உங்கள் வீட்டிலிருக்கும் பெண்களிடமும் பேசுவீர்களா?’ என விஷாகா கேட்டிருக்கிறார்.

இரட்டை மலை சீனிவாசன் (7.7.1860).!மைலாப்பூரில் ஜட்ஜ் வசிக்கும் பிராமணர் தெருவில் பறையர் வரக் கூடாது என்ற விளம்பரப் பலகை....

ஆரியர்கள் நமது தேசத்தில் குடியேறி வந்து ஜாதி கோட்பாடுகளை உண் டாக்கியபோது, இப்போது பறையர், பஞ்சமர், ஆதி திராவிடர்களென்னும் திராவிடர்கள் இசையாமல், பல துன்பங்களுக்குட்பட்டு கொண்டு, தனியே சேரி என்னும் தங்கள் கிராமங் களையுண்டாக்கி கோயில், குளம் குரு கிராம தலைவர் (நாட்டாண்மைக்காரர்) பஞ்சாயத்தார், வண்ணான், அம்பட்டன், சுடுகாடு, இடுகாடு, விதவா விவாகம், விவாக சம்பந்த விலக்கு முதலியவையுடன் கிராமங் களில் தனி சமுதாயமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 1895ஆம் வருஷத்தில் அச்சம்பவம் நேரிட்டது. அதவாது லண்டன் நகரில் சிவில் சர்வீஸ் பரீஷை நடந்து கொண்டிருந்தது. அந்த பரீஷையில் தேருகிறவர்கள் ஆங்கிலேயரே, அவர்கள் தான் கலைக்டர்களாகவும், இன்னும் தேச பரிபாலனத்தில் உத்தரவாதமான உயர்ந்த பதவிகளினின்று தேச பரிபாலனஞ் செய்து கொண்டு வந்தார்கள். அந்த பரீஷை இந்தியாவிலும் நடைபெற வேண்டுமென பிரிட்டிஷ் பார்லிமெண்டில் காங்கிரஸ்காரர்கள் ஒர் மசோதா சமர்ப்பித்தார்கள். அந்த பரீஷையானது இந்தி யாவிலும் நடந்தால் ஜாதி இந்துக்கள், உயர்தர உத்தி யோகங்களை வகித்து ஏழை ஜாதியாரானவர்களை தீண் டாதார் என்று இம்சிப்பார் களென பறையர் மகா ஜன சபையார் (இதன் செயலாளர் இரட்டைமலை சீனிவாசன்)

ஆருஷி இரட்டைக் கொலை வழக்கு: தீர்ப்பை டைப் செய்த நீதிபதியின் மகன்

இளம் பெண் ஆருஷி - ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பின் முதல் சில பக்கங்களை  வழக்குரைஞரான தனது மகனை வைத்தே டைப் செய்ததாக புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஹிந்தி மட்டுமே தெரிந்தவர்கள் என்பதால், டைப் செய்ய ஆங்கிலம் தெரிந்த நீதிமன்ற ஊழியர்கள் கிடைக்கவில்லை. எனவே, தனது மகனை வைத்து தீர்ப்பை நீதிபதி எழுதியுள்ளார்.

எம்.ஜி.ஆரை பயன்படுத்தி தி.மு.க.வை உடைத்தார் இந்திரா ! மோகன் குமாரமங்கலம், கம்யூனிஸ்ட் பாலதண்டாயுதம் கூட்டு சதியில்???

Minister of steel in the Indira Gandhi government, Kumaramangalam was killed in a plane crash in New Delhi May 30, 1973சென்னை: எம்.ஜி.ஆர். மூலம் தி.மு.க.வை இந்திரா காந்தி உடைத்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைமுகமாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதி கூறியுள்ளதாவது: மொழி விவகாரம், மாநில சுயாட்சி விவகாரம், சோஷலிச அடிப்படையிலான திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில் காட்டிய தொடர் அக்கறை, வடக்கு - தெற்கு பாகுபாட்டு அணுகுமுறையில் எங்களுக்கு இருந்த விழிப்புணர்வு, சர்வ வல்லமை படைத்த மத்திய அரசை எதிர்த்துத் துணிச்சலாக அறைகூவல் விடுக்கும் அணுகுமுறை இப்படி எவ்வளவோ விஷயங்கள் காரணமாக திமுக தொடர்ந்து குறிவைக்கப்பட்டிருக்கிறது.
திமுக ஒரு தேச விரோத சக்தி என்கிற அளவுக்கு கருத்துகளை விதைப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் எங்களுடைய இயக்கத்தின் தொடக்கக் கால எதிரிகள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்கள்.

ஆயுத மோகத்தால் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சேர்ந்த பெண்கள் செக்ஸ் அடிமைகளான கொடுமை!

நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் உள்ள பெண்கள் படை ஆட்களை பணியமர்த்துவது, உளவு பார்ப்பது, செக்ஸ் அடிமை சந்தைக்கு ஆட்களை அனுப்புவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருவது தெரிய வந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் பெண் படையும் உள்ளது. ஆனால் அந்த பெண் படையில் உள்ளவர்கள் பிற தீவிரவாத அமைப்புகளைப் போன்று தாக்குதல் செயல்களில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தவரின் மனைவியான உம் சயப் அமெரிக்கப் படையிடம் சிக்கியுள்ளா