திமுக ஒரு தேச விரோத சக்தி என்கிற அளவுக்கு கருத்துகளை விதைப்பதிலும்,
அவற்றை வளர்ப்பதிலும் எங்களுடைய இயக்கத்தின் தொடக்கக் கால எதிரிகள்
தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்கள்.
டெல்லியின் அதிகார மையத்தை மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இப்படியான ஒரு எண்ணத்தை உருவாக்குவதில் அக்காலகட்டத்தில் அவர்கள் மெல்ல மெல்ல வெற்றி கண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
டெல்லியின் அதிகார மையத்தை மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இப்படியான ஒரு எண்ணத்தை உருவாக்குவதில் அக்காலகட்டத்தில் அவர்கள் மெல்ல மெல்ல வெற்றி கண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அண்ணாவின் மறைவுக்குப் பின், திமுக சாய்ந்து ஓய்ந்துவிடும் என்று பலர்
மனக்கணக்கு போட்டார்கள். திமுகவோ மேலும் வலுப்பெற்று வளர்ச்சி அடைந்தது.
இது தாங்கிக்கொள்ள முடியாததாகப் பலருக்கும் இருந்தது
இந்திராவுக்கான கருவியாக எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில்தான் திமுகவிலிருந்து நண்பர் எம்ஜிஆர் பிரிந்தார்.
இந்திராவின் மனதில் சிலர் ஊன்றிய விஷ விதை தொடர்ந்து வளர்ந்த வண்ணம்
இருந்தது. அதனால், திமுகவை ஒதுக்கவும், ஓரங்கட்டவும், பலவீனப்படுத்தவும்
என்னென்ன ஆயுதங்கள் வலிய வந்து அவர் கைகளில் விழுந்தனவோ அவை எல்லாவற்றையுமே
அவர் பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை. அத்தகைய கருவிகளில் ஒன்றாக
எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார்.
எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது
பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு
இன்றுவரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லையே?
இவ்வாறு கருணாநிதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்
Read more at: /tamil.oneindia.com/இந்திராவால் ஜீரணிக்க முடியவில்லை....
Read more at: /tamil.oneindia.com/இந்திராவால் ஜீரணிக்க முடியவில்லை....
இந்தியாவின்
கட்டுப்பாடற்ற தீவுகள் என்று தமிழகத்தையும் குஜராத்தையும் ஒருமுறை
குறிப்பிடுகிறார் இந்திரா காந்தி. அப்படி என்ன கட்டுப்பாடுகளை அப்போது
தமிழகம் மீறியது? இதுவரை வெளியே சொல்லாத இந்திராவின் நெருக்கடிகள்,
நிர்ப்பந்தங்கள் ஏதும் இருக்கிறதா?
தமிழகத்தில்
திமுகவும் குஜராத்தில் ஸ்தாபன காங்கிரஸும் அப்போது ஆட்சியில் இருந்தன.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற எந்த விலையையும் தரத் தயாரான அரசுகளாக அவை இருந்தன.
இதை இந்திராவால் ஜீரணிக்க முடியவில்லை. வெளியே பலருக்குத் தெரியாத இன்னொரு
காரணம்: தமிழகத்தில் இந்திரா காங்கிரஸுடன் ஸ்தாபன காங்கிரஸ் இணைவதற்கு
நான் தடையாக இருக்கிறேன் என்ற எண்ணத்தை இங்குள்ள சிலர் இந்திராவிடம்
விதைத்து தூபம் போடும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருந்தனர் dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக