சென்னை வெசிலியன் மிஷன் காலேஜ் ஆலில் 1893ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஒரு பெருங் கூட்டம் கூடி அந்த மசோதாவை எதிர் மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப் பங்கள் சேகரித்து ஜெனரல் சர்ஜார்ஜ் செஸ்னி (நிமீஸீவீக்ஷீ நிமீஷீ. சிலீமீஸீமீஹ்) என்னும் பார்லிமென்ட் மெம்பரைக் கொண்டு சமர்ப்பித்தார்கள். அதனைக் கண்ட காங்கிரஸ் காரர் தங்கள் மனுவை பின்னித்துக் கொண்டார்கள். அதன்பின் கீழ்தர உத்தியா கங்களிலிருந்து மேல் தர உத்தியோகத்தை வகிக்க யோக்கியதையுள்ளவர்களை நியமிக்கலாமென இந்திய செக்ரேட்டிரியார் உத்தர வளித்தார்.
***
கிராமங்களில் இவ்வின குடியானவர்கள் நிலை மையை திட்டமாய் குறித்த தோடு
சென்னை நகரத் திலுங்கூட மைலாப்பூரில் அய்க்கோர்ட் ஜட்ஜாக விருந்த ஓர்
இந்தியர் வசிக்கும் வீட்டுக்குச் சமீப மாயுள்ள பிராமணர் தெரு வில் பறையர்
உள்ளே வரக் கூடாது என்ற விளம்பரப் பலகையொன்று இருப்பதாகவும், இந்துக்கள்
ஸ்தாபித்து இருக்கும் பச்சையப்பன் கலா சாலையில் இவ்வினத்துப் பிள்ளைகளைச்
சேர்ப்ப தில்லை என்றும் மனுவில் கண்டிருந்தது. அந்த பலகையெடுபட்டு போகவும்
கலாசாலையில் பிள்ளை களைச் சில காலத்திற்கு பிறகு சேர்க்கவும் இம் மனுவே
காரணம் (ஆதாரம்: இரட்டை மலை சீனிவாசன் ஜீவிய சரித்திர சுருக்கம்
பக்.25-271)
- மயிலாடன்
குறிப்பு: இன்று இரட்டை மலை சீனிவாசன் அவர் களின் பிறந்தநாள் (7.7.1860 viduthalaidaily.blogspot.c
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக