சனி, 21 பிப்ரவரி, 2015

ஹிந்தி மொழி இணைய / விஞ்ஞான உலகில் தோற்றது ஏன் ? மாநிலமொழிகளை ஒடுக்க எண்ணி தானே ஒடுங்கிய சோகம் .....

கடந்த ஆண்டு புதுடெல்லி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின்போது, 50 ஆண்டு கால அனுபவமுள்ள இந்திப் பதிப்பாளர் ஒருவரிடம் கேட்டேன்: “இந்தியில் ஒரு புத்தகம் பெஸ்ட் செல்லர் என்றால், எத்தனை பிரதிகள் விற்கும்?” அவரது பதில்: “அதிகபட்சம் 5 ஆயிரம்.” 
தமிழர்கள் என்றால் இந்தியை எதிர்த்துத்தான் பேச வேண்டுமா என்ன? நஹி. உலக தாய்மொழிகள் நாளான இன்று, எல்லா தாய்மொழிகளுக்கும் ஆதரவாகப் பேசலாமே! குறிப்பாக, இந்திக்கு ஆதரவாக. அதுவும் இது மோடி அரசின் கணக்குப்படி இது ‘மாத்ரிபாஷா திவஸ்’ அல்லவா?
கடந்த வாரம் ட்விட்டரில் இந்திய மொழிகளுக்கான ஹேஷ்டேகுகள் புதிய போக்கை உருவாக்கின. உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றவுடன், #ஜெய்ஹிந்த் என்கிற இந்தி வாசகம் ட்விட்டரின் (இந்தியப் பதிப்பில்) டிரெண்டிங் பட்டியலில் முதலாவதாக வந்தது. ஆனால், மறுநாளே தமிழ்ப் பயனர்கள் #தமிழ்வாழ்க என்றொரு ஹேஷ்டேகை ட்விட்டரில் வெளியிட்டு அதை ட்விட்டர் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டுவந்தார்கள். இது வேறு ஒரு விளையாட்டு!
இந்தியின் மீது தமிழர்கள் சற்றுக் கரிசனம் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. பாவம், இந்தி!  இன்று  உலக தாய்மொழி தினம் கெடுவான் கேடு நினைப்பான் , ஏதோ நம்மால் ஆன அறிவுரை

காதலுக்கு கொலை! எங்க தெரு பெண்ணை காதலிச்சான்! கைதான 7 மாணவர்கள் வாக்குமூலம்!!

நெல்லை: "எங்கள் தெரு பெண்ணை காதலித்ததால் கொலை செய்தோம்" என்று கல்லூரி மாணவன் கொலையில் கைதான 7 மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூர் அருகே உள்ள நம்பியான்விளையை சேர்ந்த சுடலைமுத்து மகன் டேவிட்ராஜா. இவர் வள்ளியூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை டேவிட் ராஜா, தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். அப்போது, ராதாபுரம் ரோட்டில் உள்ள சாஸ்தா கோவில் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்துள்ளது. அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் டேவிட் ராஜாவை தாக்கி உள்ளனர். உயிருக்கு பயந்து டேவிட்ராஜா தப்பி ஓடியபோது அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது.  இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் டேவிட் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.நிச்சயமாக  வாள்வெட்டு  போன்ற  வன்முறையை மாணவர்கள் மத்தியில்  விதைத்தது  சினிமாதான்

திரையுலகை புதிதாக கலக்க வரும் ராகுல் பரீத்

மலையாளத்திலிருந்து தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள ‘பெங்களூர் டேஸ்'  படத்தில் சித்தார்த், சமந்தா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் சித்தார்த்-சமந்தாவுக்கு இடையே காதல் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் இப்படத்திலிருந்து விலகினர். சமந்தா நடிக்கவிருந்த கதாபாத்திரம் ஸ்ரீதிவ்யாவுக்கு கைமாறியது. இந்நிலையில் அனு வைத்லா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவிருந்த படம் மற்றும் ராம் நடிக்கும் ‘பண்டக சேசுகோ'  பட வாய்ப்பும் சமந்தாவின் கை நழுவிப்போயிருக்கிறது. இதை ரகுல் ப்ரீத் சிங் கைபற்றி இருக்கிறார்.

முடக்கப்பட்ட 6 கம்பெனிகளும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதல்ல: கம்பெனிகளின் வக்கீல்கள் வாதம்

பெங்களூரு:"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், முடக்கப்பட்ட ஆறு கம்பெனிகளும், வங்கி கடனில் தான் இயங்கின. ஜெயலலிதாவுக்கு சொந்தமானதல்ல,” என, கம்பெனிகளின் வக்கீல் உதயஹொல்லா வாதாடினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், முடக்கி வைக்கப்பட்ட, மெடோ அக்ரோ பார்ம், ரிவர்வே அக்ரோ, இண்டோடோகா, சயனோரா, லெக்ஸ் பிராபர்ட்டி, ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் ஆகிய, ஆறு கம்பெனிகள், 'சீல்' வைத்தது குறித்த வழக்கு விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வக்கீல் உதய ஹொல்லா: சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், ஆறு கம்பெனிகளுக்கும் எந்த தொடர்புமில்லை. இக்கம்பெனிகள் தில்லை நாயகம், சண்முகம், குமார், செந்தமிழ் செல்வனுக்கு சொந்தமானது. கம்பெனிகளில் ஒன்றான, இண்டோ டோகா வுக்கு, அசையா சொத்துகளே கிடையாது. இதை தெரிந்து கொள்ளாமலேயே, கம்பெனிக்கு சொந்தமான, அசையா சொத்துகளை, பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதி குமாரசாமி: கம்பெனியின், இரு இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதன் நிர்வாக இயக்குனர் யார்?  நாலு கம்பெனிகளும் தொழிலாளர்களால் நடத்த படுகிறது. ரெண்டு கம்பெனிகளுக்கு தான் ஓனர்கள் இருக்கிறார்கள்..ஹஹஹஹ நம்பள எப்படி முட்டாளாக்க பாக்குறாங்க அப்படின்னு குன்ஹா கடுப்பாயிட்டார்...ரெண்டு பினாமிங்களை தான் பிடிக்க முடிஞ்சதோ? //கம்பெனியின் சொத்து கம்பெனிக்கு தான் தனி உரிமையாளருக்கு சொந்தமில்லை// கம்பெனி தானாகவே உருவாகுமோ? அந்த தனி மனிதர் முதலீடு போடவில்லையோ? அதாவது வங்கி வந்து கடன் கொடுத்து இருக்கு ஆனா கம்பெனிக்கு ஓனர் இல்லை..அப்ப அந்த வங்கி யாருக்கு கடன் கொடுத்தது? காத்துகிட்ட கடன் கொடுத்ததா? நிர்வாக இயக்குனரே இல்லாமல் வங்கி கடன் கொடுக்குமா? அப்ப வங்கி யாருகிட்ட கடன் கொடுத்தது யார் பேரில் கடன் கொடுத்தது யார் கையெழுத்து இட்டு கடன் வாங்கினார்..தினமலர் செய்தியை விளக்கமா விரிவா போடுங்கப்பா..ஒரே கொழப்பமா இருக்குது..எங்களுக்கே இப்படின்னா நீதிபதிக்கு எப்படியோ.....

சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தி , ஜெசிக்கா ,ஹரிப்பிரிய பரத்.ஸ்ரீஷா.அனுஷா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

விஜய் டி.வி, வழங்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4, பாட்டு போட்டிகள் பல கட்டங்களாக நடைபெற்றன. அதன் இறுதிச்சுற்று இன்று சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தங்கவேலு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல குழந்தைகள் கலந்து கொண்டாலும் முதல் ஆறு இடத்தை பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா, ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர். அவர்களுக்கு ஒன்றரை கோடி பார்வையாளர்கள் வாக்களித்தனர். இந்த ஆறு பேரில் முதல் மூன்று இடங்களை ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர். இதனால் போட்டியில் இருந்து வெளியேறிய பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா ஆகியோருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னர் மூன்றாவது இடத்தை ஹரிப்ரியா பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஜெசிக்கா பிடித்தார். அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. அதை ஜெசிக்கா பெற்றுக் கொண்டதும் மேடையில் பேசிய அவரது தந்தை, பரிசு தொகை முழுவதையும் அனாதை குழந்தைகளுக்கு தருவதாக கூறினார். இதையடுத்து முதல் இடத்தை பிடித்த ஸ்பூர்த்திக்கு 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

Thought is a Invitation for Creation எண்ணங்கள் எல்லாமே சம்பவங்களுக்கான அழைப்பிதழ்கள்தான்

உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன.
உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும்
ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது.
இதை விளங்கி கொள்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால் , நீங்கள் உங்களை அறியாமலேயே அழைப்பிதழ்களை அள்ளி வீசி கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமான விடயங்களுக்கும் வீசுகிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமே இல்லாத விடயங்களுக்கும் கூட அழைப்பிதழ்களை அள்ளி அள்ளி வீசுகிறீர்கள்.
நீங்களே அழைப்பை அனுப்பி அனுமதியும் கொடுத்துவிட்டு பின்பு எனக்கு ஏன் இது வரவேண்டும் அல்லது இப்படி நடக்கவேண்டும் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் குழம்புகிறீர்கள்.
தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மனதில் வந்து போகும் எண்ணங்கள் எல்லாமே மின்சாரம்தான் . அவை மிகவும் சக்திவாய்ந்த தொழிற்சாலைகள்தான் .
இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது கேட்டது விரும்பியது வெறுத்தது என்று ஒன்றும் கிடையாது.
உங்கள் மனம் என்ற தொழிற்சாலையில் வரும் மூலபொருள் அதாவது எண்ணங்கள் எல்லாமே  சம்பவங்கள்  அல்லது பொருட்களாக உருப்பெற்று வெளியேவரும் .
 எவ்வளவுக்கு   எவ்வளவு  அழுத்தமாக மீண்டும் மீண்டும் நினைக்கின்றீர்களோ  அவ்வளவு  சீக்கிரமாகவும்   முழுமையாகவும்  அது  வெளிவரும் . அதாவது அதை  நீங்கள்  அனுப்பவமாக  பெறுவீர்கள்.

மோடியின் ஆடை ரூ.4.31 கோடிக்கு ஏலம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் பட்டேல் இந்த கோட்டை ஏலத்துக்கு எடுத்துள்ளார்.
மோடியின் ஆடையை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதி, கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. dinamani.com

பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பிப்.22-ல் பதவியேற்பு

பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் இம்மாதம் 22-ம் தேதி பதவியேற்கிறார். அம்மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பிஹாரில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ் குமாருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அழைப்பு விடுத்தார்.
ஆளுநரைச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசிய நிதிஷ் குமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மார்ச் 16-க்கு முன்பாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி தன்னிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
இம்மாதம் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு பிஹார் முதல்வராக பதவியேற்குமாறு தன்னிடம் ஆளுநர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

சுப்பர் சிங்கர் தெரிவுக்கு சவால் விடும் தமிழுணர்வு ? முன்பு bbc பாடல் போட்டியையும் இதே போல.....

supersingerjesikaதமிழ்நாட்டு சனல்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் சிறு குழந்தைகளுக்கான இசைப்போட்டி நிகழ்ச்சி ஒன்று தற்போது நடைபெறுகிறது. ஜூனியர் சூப்பர் சிங்கரைத் தேர்வு செய்யும் போட்டி அது.
இலங்கைத் தமிழ் மக்களாகிய நமது குணங்களிலொன்றைத் தெரியப்படுத்தும் விதமான சான்று உதாரணமொன்று அந்தப் போட்டி நிகழ்ச்சியில் காணக்கிடைத்தது.
இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்கு கனடாவில் பிறந்த சிறுமி ஒருவரும், பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் இந்தியக் குழந்தைகளுக்கு நிகரான இசைத்திறமை யோடு முதல் பத்துப் பேருள் ஒருவராக வந்திருக்கிறார். அது மிகவும் பாராட்டுக்குரியதே.
இசைவிற்பன்னர்களான நடுவர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்குத் தகுதியான முதல் மூன்று பேரை அந்தப் பத்துப் பேரிலிருந்தும் தேர்வு செய்தார்கள். அதில் இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த அந்தச் சிறுமி தேர்வாகவில்லை.

Qissa பார்க்கவேண்டிய ஒரு இந்திய படம் ! மீரா நாயர் .

பஞ்சாபி மொழிப் படமான ‘கிஸ்ஸா’ (Qissa) ஆங்கில சப்-டைட்டிலுடன் பிப்ரவரி 20-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ‘கிஸ்ஸா’ என்றால் அரேபிய மொழியில் வாய்மொழி வரலாற்றையும், பண்பாட்டையும் பேசும் கதைகளைக் குறிக்கும்.
இப்படத்தை இயக்கி இருக்கும் அனுப் சிங் இந்திய மண்ணைச் சார்ந்தவர். ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். இவர் இலக்கியத்திலும் தத்துவப் படிப்புகளிலும் பட்டம் பெற்று, பூனே திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இவர் ஏற்கெனவே ‘லாஸ்யா’ (Lasya-The Gentle Dance) என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார். இது ஜெர்மன் திரைப்பட விழாவில் பரிசு வென்றிருக்கிறது.
இவரது முதல் முழுநீளத் திரைப்படம் ‘கிஸ்ஸா’. ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை போன்ற பல விருதுகளை வென்றது. “இப்படத்தைத் தவற விட்டுவிடாமல் கண்டுகளியுங்கள்” என சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியப் பெண் இயக்குநர் மீரா நாயர் பரிந்துரைத்திருக்கிறார்.

Bihar:கொலை மிரட்டல் வந்தது: பதவி விலகிய மாஞ்சி பேட்டி! பீகார் நெருக்கடிக்கு பா.ஜனதா பின்னணியில்?

பாட்னா, பிப். 20– பீகார் முதல் – மந்திரி மாஞ்சி இன்று காலை 10 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். பின்னர் அவர் தனது வீட்டில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது மாஞ்சி கூறியதாவது:–
பீகாரில் என்னை முதல் – மந்திரி ஆக்கியதும் நிதிஷ்குமார் சொல்படி என்னை ஆட்டுவிக்க முயற்சி செய்தார். நான் அவருக்கு உடன்பட வில்லை. இதனால் என்னை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்ததால் என்னை எல்லா வகையிலும் புறக்கணித்தனர்.
சபாநாயகர் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் நிதிஷ்குமார் சொல்படி கேட்டு செயல்பட்டார். எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைப்படி செயல்படவில்லை.
என்னை ஆதரித்த எம்.எல்.ஏ.க்களுக்கும் எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய ஒட்டெடுப்புக்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். எனக்கு 140 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. ஆனால் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் மிரட்டலுக்கு ஆளாவார்கள்.
எனவே வேறு வழியன்றி நான் ராஜினாமா செய்து சட்டசபையை கலைக்க கவர்னருக்கு சிபாரிசு செய்தேன்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய விசா சட்டதிருத்தம்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய விசா சட்டதிருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! புதுடெல்லி: பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது நியூயார்க்கில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகால விசா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் அவர்கள் இந்தியா வரும்போதும் காவல் நிலையங்களுக்குச் சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதும் நடைமுறையில் உள்ளது. இந்த 2 விதிமுறைகளும் தளர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

M.A.M.ராமசாமியை கொல்லத்துணிந்த வளர்ப்பு மகன் முத்தையா? 10 ஆயிரம் கோடி சொத்துக்கள் அறக்கட்டளைக்கு உயில்


தனது பெயரில் புதிதாக தர்ம அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இருக்கும் தொழி லதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, தனக்குப் பிறகு தனது சொத்துகள் அனைத்தும் அந்த அறக்கட்டளைக்கு சேர வேண்டும் என முறைப்படி உயில் எழுதி இருக்கிறார்.
ஐயப்பன் என்ற முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை குல வழக்கப்படி கடந்த மாதம் ரத்து செய்தார் எம்.ஏ.எம். இதன் தொடர்ச்சியாக ’எம்.ஏ.எம்.ராமசாமி தர்ம அறக்கட்டளை’ என்ற புதிய அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இதன் நிர்வாக அறங்காவலரான எம்.ஏ.எம்., தனது அண்ணி குமார ராணி மீனா முத்தையா, ஏ.சி.முத்தையா உள்ளிட்ட மேலும் நான்கு அறங்காவலர்களையும் நியமித்திருக்கிறார்.
இதுகுறித்து செட்டிநாடு அரண்மனைக்கு நெருக்கமான வட்டத்தினர் ’தி இந்து’விடம் கூறியதாவது: முத்தையாவின் சுவீகாரத்தை குல வழக்கப்படி ரத்து செய்த எம்.ஏ.எம்., சட்டப்படியும் அதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதை ஊகித்திருக்கும் முத்தையா, அப்படி சட்டப்படி சுவீகாரத்தை ரத்து செய்வதாக நீதிமன்றத்தில் எம்.ஏ.எம். மனு தாக்கல் செய்தால் தன்னையும் விசாரிக்க வேண்டும் என தேவகோட்டை நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து வைத்திருக்கிறார்.

கிரானைட் ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் தீபிகா–ஜோஸ்னா

கிரானைட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி கனடாவின் டோரண்டோவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் 11-8, 9-11, 11-6, 7-11, 13-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜென்னி டன்கால்ப்பை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11-11, 11-8, 11-6 என்ற நேர் செட்டில் ரசால் கிரின்ஹாமை (ஆஸ்திரேலி
யா) வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். அரை இறுதி ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா-ஜோஸ்னா கோதாவில் இறங்குகிறார்கள். maalaimalar.com

ஏன் பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்கள் காலி?

பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சத்துக்கும் கூடுதலான இடங்கள் ஒவ்வோர் ஆண்டும் காலியாக இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, ஆத்தூர் தொகுதியில் புதிதாக பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. சு.மாதேஸ்வரன் (அதிமுக) கேள்வி எழுப்பினார்.

தினமலர்: கனிமொழியுடன் கைகோர்த்த ஸ்டாலின் !

அழகிரியை கட்சியில் சேர விடாமல் செய்வதற்காக, கட்சியில் எதிரும் புதிருமாக இருந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழியும், திடீரென கைகோர்த்திருப்பது, கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தி.மு.க., வட்டாரத்தினர் கூறியதாவது: தி.மு.க.,வில் கடந்த பல ஆண்டுகளாகவே, ஸ்டாலினும், கனிமொழி யும் எலியும், பூனையுமாக தான் இருந்து வருகின்றனர். கட்சியில் எப்போதெல்லாம் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் தன் முழு வலுவையும் பயன்படுத்தி, அதற்கு கட்டை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார், ஸ்டாலின். அதனாலேயே, கட்சியில் கனிமொழியால் பெரிய அளவிற்கு வளர முடியாமல் இருந்தது. இதற்காக, சமயங்களில் ஸ்டாலின் தன்னுடைய பரம வைரியாக கருதும், சகோதரர் அழகிரியுடன், அவ்வப்போது சமாதானம் செய்து கொண்டதும் உண்டு. இருந்தும் கட்சியில், தவிர்க்க முடியாத சக்தியாக, கனிமொழி தன்னை வளர்த்துக் கொண்டே வந்தார்.

பெரியாருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது பெரியார் இயக்கங்களே.மதிமாறன்

பெரியாரிடம் தத்துவமும் இல்லை. கோட்பாடும் இல்லை’ என்று அவதூறாகப் பேசுகிற தீவிர விடுதலைப்புலி ஆதரவு பெரியார் எதிர்ப்புத் தமிழ்த்தேசியவாதிகளைப் பார்த்து, ‘இவை இரண்டும் பிரபாகரினடம் இருக்கிறதா?’ என்று தன்மையாகக் கூடக் கேட்கிற தைரியம், பெரியார் தொண்டர்களுக்கும் பெரியார் இயக்கங்களுக்கும் சுத்தமாக இல்லை. இது தான் பெரியாருக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி. பெரியாருக்கு இந்த நெருக்கடியை ஏற்படுத்தியது பெரியார் இயக்கங்களே. அவர்களின் தமிழ்த்தேசிய உணர்வே.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

47 ஆண்டுகளாக வெறுங்கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்ட மூதாட்டி

ஸ்ரீ வில்லிபுத்தூர், பிப். 19–> விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஊரணிபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 85). ஆண்டு தோறும் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் மகாசிவராத்திரி நாளன்று கொதிக்கும் நெய்யில் முத்தம்மாள் வெறுங்கையால் அப்பம் சுடுவார். இதனை முத்தம்மாள் 47 ஆண்டுகளாக செய்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டும் மகாசிவராத்திரி நாளில் கோவில் வளாகத்தில் கொதிக்கும் நெய்யில் வெறுங்கையால் அப்பம் சுட்டார். நள்ளிரவில் 12 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. வெறுங்கையில் அப்பம் சுடுவதைகாண அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். முத்தம்மாள் சுட்ட அப்பம் பத்ரகாளி அம்மனுக்கு படைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. maalaimalar.com

விகடன் :ஆதரிப்பார் யார்...?- கூட்டணிக்கு வலை வீசும் திமுக! : stalin stalin stalin I love you என்னை விட்டு போகாதே மன்னன் உன்னை எந்தன்

டந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தின் அரசியல் வானத்தில்  சுருங்கிய புள்ளியாக மாறிப்போன திமுகவுக்கு,  ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆளும்கட்சியின் அத்தனை அதகளத்திற்கு பின்னரும் டெபாசிட்டை பறிகொடுக்காமல் கவுரவமான வாக்குகளை பெற்றது,  அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை துணிவுடன் சந்திக்கும் தெம்பை கொடுத்துள்ளது.
தனித்து நின்றே கிடைத்த டெபாசிட் திமுகவிற்கு  `பூஸ்ட்`  அளித்துள்ளது என்பதை அதன் மாநில செயற்குழு கூடும் அறிவிப்பு காட்டுகிறது. வரும் 2016 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத்  தேர்தலைச்  சந்திக்க கண்டிப்பாக வலுவான கூட்டணி அவசியம் என்று  நிலையில் இருக்கும் திமுக தலைமை, அதற்கான முஸ்தீபுகளில் இறங்கி உள்ளது ஆனால் இந்த முறை திமுக தலைமையை ஏற்று, கூட்டணியில் இடம்பிடித்து தேர்தல் வடம் பிடிக்க தமிழக அரசியல் கட்சிகளிடையே அவ்வளவாக ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. கலைஞர் அய்யா மன்னிக்கவேண்டும் : ஸ்டாலின். துர்கா .உதயநிதி. கிருத்திகாவிடம் இருந்து திமுகவுக்கு விடுதலை கிடைக்காது. ஒரு சுயமரியாதை பகுத்தறிவு  நதியின் இறுதி அத்தியாயம் தொடங்கி விட்டதாக ஒரு சந்தேகம் ? 

திருப்பதி : இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிரிசேனாவும் அவரது மனைவி ஜெயந்தி புஷ்பகுமாரியும் சுப்ராபாத பூஜையில் ....


"இலங்கை அதிபருக்காக உடைக்கப்பட்ட திருப்பதி கோவில் தங்க கதவு" / திருப்பதி,பிப்.19 (டி.என்.எஸ்) இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள சிரிசேனா, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வழிபாட்டுக்காக வந்துள்ள சிரிசேனா, நேற்று அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை அதிபர் சிறிசேனா தனது மனைவியுடன் வந்தார்.அப்போது ஏழுமலையான் கோவிலின் மூலவர் அறையில் உள்ள தங்க கதவை கோவில் ஊழியர்கள் சாவி மூலம் திறக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சாவி உடைந்து பூட்டுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் மூலவரின் அறையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு மூலவரின் தங்க கதவின் பூட்டை உடைத்து, கதவு திறக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் நடந்த சுப்ரபாதம் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேனா கலந்து கொண்டார்.

பாஜக தெலுங்கு தேசம் கூட்டணி உடைந்தது ! after shock of Aam Aadhmi bang bang

ஐதராபாத்: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை, தே.ஜ., கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அந்த கூட்டணியிலிருந்து வெளியேற, தெலுங்கு தேசம் திட்டமிட்டு உள்ளது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த, அசோக் கஜபதி ராஜு, விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், ஆந்திராவிலிருந்து பிரிந்து, தனி மாநிலமாக உதயமாகியுள்ள தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியான, டி.ஆர்.எஸ்., கட்சி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் டில்லி சென்ற சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து, மத்திய அரசில், டி.ஆர்.எஸ்., சேரப் போவதாகவும், சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு, மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இது, தெலுங்கு தேசம் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிருப்தி கதையெல்லாம்  டூப்பு பாஜகவின்  சாயம் மோடியின்  கவர்ச்சி எல்லாம் ஆம் ஆத்மியின் துடைப்பத்தால சுத்தமா போச்சு . இனி அங்க இருந்து ஒன்னும் புடுங்க முடியாது . இந்த நாயுடுகாரு பக்கா பிசிநேஸ்மன் இனி பாருங்க மூணாவது அணின்னு தூக்கி பிடிப்பாரு

நீதிபதி குமாரசாமி : குன்ஹா கொடுத்த தீர்ப்பை தவிர வேறு வழியில்லையே? ஏனுங்க வேறு வழிதேடறதுதான் உங்க வேலையோ?

அப்பீல் வழக்கு விசாரணைதானே?''

""ஆமாங்க தலைவரே.. .. அப்பீல் கேஸை விசாரிக்கும் நீதிபதி குமாரசாமி தி.மு.க சார்பில் பேராசிரியர் அன்பழகனை மூன்றாவது பார்ட்டியா சேர்க்கக்கோரும் மனுவையும் ஏற்கலை. அரசு வக்கீலா பவானிசிங் நீடிக்கக் கூடாதுங்கிற மனுவையும் ஏற்கலை. அதனால ஜட்ஜ் நமக்கு சாதகமாகத்தான் இருப்பார்னு கார்டனுக்கு வேண்டிய வட்டாரம் ரொம்பவே நம்பிக்கைக் கொடுத்திருந்தது. அந்த நம்பிக்கை தகர்ந்து போற மாதிரி திங்கட்கிழமையன்னைக்கு ஓப்பன் கோர்ட்டிலேயே நீதிபதி குமாரசாமி சரமாரியா விளாசிட்டாரு.''"எதுக்காகவாம்?''

""இது அரசியல் ரீதியா பழிவாங்கும் வழக்குன்னு ஜெ. வக்கீல் குமார் சொல்ல, ஆதாரமில்லாம பேசாதீங்க. பழிவாங்கப் போடப்பட்ட வழக்கா 18 வருசமா நடக்குதுன்னு கேட்ட நீதிபதி, முதல்வருக்கு சம்பளம் எவ்வளவுன்னு கேட்டாரு. 1 ரூபாய்னு சொன்னதோடு, இந்த சம்பளத்துக்காகப் அவரைப் பாராட்டணும்னு ஜெ. தரப்பில் ஆஜரானவங்க வாதாடுனாங்க. அப்ப அங்கே இருந்த வக்கீலும் எம்.பி.யுமான நவநீதகிருஷ்ணன்கிட்டே உங்க சம்பளம் எவ்வளவுன்னு நீதிபதி கேட்டாரு. 1 லட்சத்து 8ஆயிரம் ரூபாய்னு அவர் சொல்ல, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினாலும் பப்ளிக் சர்வண்ட்தான். அவங்க மேல 66 கோடி ரூபாய்க்கான சொத்து சேர்த்த வழக்குப் போடப்பட்டு, தீர்ப்பும் கொடுக்கப்பட்டிருக்குது. அந்த 66 கோடிக்கு கணக்கு காட்டுங்கன்னு கேட்டா இதுவரைக்கும் எந்த ஆதாரத்தையும் உங்க தரப்பில் காட்டல. 60 ஜட்ஜ்மெண்ட்டுகளை உங்க வாதத்திலே எடுத்து வச்சிருக்கீங்க. அதெல்லாம் பொருத்தமான ஜட்ஜ்மெண்ட்டா? நீங்களே யோசிங்கன்னு சொன்ன நீதிபதி அதற்கப்புறம்தான் சரமாரியா ஓப்பன் கோர்ட்டிலேயே பொரிஞ்சி தள்ளிட்டாரு.''"என்ன சொன்னாரு?''""20 நாளா நீங்க வாதம் செய்றீங்கன்னு ஜெ. தரப்பைப் பார்த்து சொன்ன நீதிபதி குமாரசாமி, ஸ்பெஷல்  கோர்ட்டிலே நீதிபதி குன்ஹா கொடுத்த ஜட்ஜ்மெண்ட் தப்புன்னு சொல்றமாதிரி ஒரு பாயிண்ட்டைக்கூட இது வரைக்கும் எடுத்துவைக்கலை. வழக்கில் சொல்லப்பட்டிருக்கிற கணக்கெல்லாம் தப்புன்னு சொல்றீங்களே தவிர, சரியான கணக்கு எதுன்னு காட்டலை. சரியான கணக்கை நானே ஒரு ஆடிட்டரை வச்சிப் பார்த்துக் குறேன். நீங்க இப்படியே வாதாடிக்கிட்டுப்போனா, ஜான்மைக்கேல் டி குன்ஹா கொடுத்த அதே தீர்ப்பை நானும் தருவதைத் தவிர வேறு வழியில்லைன்னு ஓப்பன் கோர்ட்டிலே சொல்ல, ஜெ. தரப்பு வக்கீல்கள் முகத்தில் பயங்கர ஷாக். நீதிபதியோட விளாசல் பற்றிய தகவல் கார்டனுக்குத் தெரிஞ்சதும், ரொம்ப அப்செட்டாகி, தங்களோட சட்ட டீம்கிட்டே ஆலோசனை நடந்திருக்குது. வழக்கு விசாரணை இதே ரீதியில் போனால், இந்த நீதிபதி..nakkheeran.in 

திருக்குறளை வெறும் தியான/மந்திர சூத்திரமாக்க ஜெயமோகன் புறப்பட்டுவிட்டார் !

Jeyamohan :திருக்குறளை சமூகவயப்படுத்தும் ஒரு முயற்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. அது சிறந்த விஷயம்தான். அது பரவலாக மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது. மக்களுக்குப்புரியக்கூடிய வகையில் உரைகள் எழுதப்பட்டன
ஆனால் அந்த உரைகள் வழியாக குறள் எளிமைப்படுத்தப்பட்டது. அல்லது அதன் பொருள் குறைக்கப்பட்டது. குறைந்தபட்ச அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் நிலை உருவானது. இன்று அதிலிருந்து குறளை மீட்பது கடினம்
குறள் ‘சூத்திரம்’. எல்லா சூத்திரங்களும் தியான மந்திரங்களே. மனனம்- ஸ்வாத்யாயம்- தியானம் என்னும் மூன்றடுக்குப் பயில்முறைக்கு உரியவை. ஸ்வாத்யாயம் என்பது அதுவரையிலான அர்த்தங்களனைத்தையும் அறிவது. தியானம் என்பது தனக்கே உரிய அர்த்தத்தை அறிவது
அதற்குரிய வழிமுறைகள் சமண-பௌத்த- வேதாந்த முறைகளில் நீண்டநாட்களாக குருமுறையாக பயிலப்பட்டு வந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் எழுதவேண்டும் என எண்ணம் உண்டு
கீதை குறள் இரண்டுக்கும் இரு உரைகளை எழுதிமுடிக்கவேண்டும், அடடே இந்த கூறு கேட்ட ஆள் என்னதான் சொல்ல வாறாரு ? தனது  காலத்திலேயே  எப்படியாவது  திருக்குறளை வெறும் பார்ப்பன  காயலாங்கடைக்கு  அனுப்பி விடவேண்டும் என்று  துடியா துடிப்பது தெரிகிறது .  இவர் தூக்கி பிடிக்கும் சம்ஸ்கிருத மற்றும் பார்ப்பனீய கருத்துக்கள் எல்லாம் வேகம் வேகமாய் சாயம் வெளுக்க திருக்குறள் மட்டும் சுனாமியாக இவரை பயமுறுத்துகிறதோ ?

வோல்டாஸ் நில வழக்கு: கருணாநிதி குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?

சென்னையில் உள்ள வோல்டாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் கைமாறிய விவகாரத்தை சிபிஐ மீண்டும் தோண்டத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக்கு நெருக்கமான ஒருவரிடம் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி 2010-ல் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகி யோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளனர். அவ்வழக் கின் விசாரணை தற்போது நடை பெற்று வருகிறது.

வசந்த மாளிகை தயாரிப்பாளர் ராமா நாயுடு காலமானார்

பிரபல தமிழ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ராமா நாயுடு (79) ஹைதராபாதில் புதன்கிழமை காலமானார்.
இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் நடிகர் வெங்கடேஷ், சுரேஷ், மகள் லட்சுமி ஆகியோர் உள்ளனர். தெலுங்கு திரையுலகின் பிரபல இளம் நடிகர் ராணா இவரது பேரன் ஆவார்.
"வசந்தமாளிகை', "தனிக்காட்டு ராஜா' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களைத் தயாரித்த இவர், சினிமா துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக தாதாசாஹேப் பால்கே விருது பெற்றவர்.
ராமா நாயுடு ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் கரம்சேடு என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கலைத் துறையில் மிகுந்த ஆர்வம் காரணமாக கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டார். 1962 இல் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
தனது நண்பர் ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து தனது மகன் பெயரில் "சுரேஷ் புரொடெக்ஷன்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.