திங்கள், 24 நவம்பர், 2014

43 நாடுகளுக்கு இ-விசா திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகம்

புதுடில்லி:ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் இ-விசா வழங்கும் திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தெரியவந்துள்ளது.இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளனர்.முதற்கட்டமாக, ரஷ்யா, பிரேசில் ஜெர்மனி, தாய்லாந்து, உக்ரைன், ஜோர்டான், நார்வே, மொரிஷியஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளதாகவும் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக இத்திட்டத்தினை கொண்டு வர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை எழுந்து வந்த சூழலில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக இருக்கும் என இந்திய சுற்றுலா கழக தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்துள்ளார். பலநாடுகள் இந்த ஆன்லைன் விசாவை அறிமுக படுத்திவிட்டன ,இலங்கை கூட அறிமுக படுத்தி இரண்டு வருடங்களாகி விட்டன.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

காவிரி : ரஜினி அரசியலுக்கு வந்தே விட்டார்! பாரதிராஜாவின் காவிரி போராட்டத்தை என்கவுண்டர் செய்த போதே வந்துட்டார்!

தஞ்சை: காவிரியில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில்  முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஏராளமான இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடந்தது.  மறியலில் ஈடுபட்ட வைகோ உள்பட பல ஆயிரம்பேரை போலீசார் கைது செய்தனர்.காவிரி  நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். ஆனால் கர்நாடகா அதன்படி தண்ணீர் தருவதில்லை. அங்குள்ள அணைகள் நிரம்பிய பின் உபரி நீரே தமிழகத்திற்கு வருகிறது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேலும் 2 அணைகள் கட்டி 48 டிஎம்சி தண்ணீரை தேக்க  நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தற்போது வரும் உபரி நீரும் தமிழகத்திற்கு கிடைக்காமல் தமிழகம் பாலைவனமாகி விடும். குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகும்.

மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அற்புத பூனை America :cat can sense death b4 it happens


ரோட்: அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்து சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில்  வசிக்கும் டேவிட் என்ற மருத்துவர், கடந்த ஏழு  ஆண்டுகளாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.அவரது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து சொல்லும் அபூர்வ சக்தியை கொண்டுள்ளதாக டாக்டர் டேவிட் கூறியுள்ளார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் அறைகளுக்கு அந்த பூனை சுற்றுச் சுற்றிவிட்டு, நோயாளியின் அருகில் போய் நிற்கிறது.  அந்த பூனை என்ற சில மணி நேரத்தில் அந்த நோயாளி மரணத்தைச் சந்தித்து விடுகின்றனர்.மேலும் அந்த பூனையைப் பற்றி டேவிட், புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார்  dinakaran.com

வேப்பேரி:பெண்கொலை கணவரே கொலையாளி ! ஹேமந்த் ராஜ் ஜெயின் (50) மனைவி மஞ்சு

சென்னை வேப்பேரி காளத்தியப்பன் தெருவில் 3 மாடி வீட்டில் வசிப்பவர் ஹேமந்த் ராஜ் ஜெயின் (50). இவரது மனைவி மஞ்சு (48). இவர்களுக்கு ஆசிஷ்குஞ்ச் (23) என்ற மகனும், பூஜா (21) என்ற மகளும் உள்ளனர்.
ஹேமந்த்ராஜ் சவுகார் பேட்டையில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஹேமந்த்ராஜ் கடைக்கு சென்று விட்டார். மகன் ஆசிஷ், மகள் பூஜா இருவரும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் மஞ்சு மட்டும் தனியாக இருந்தார். மாலை 5.30 மணியளவில் பூஜா வீட்டுக்கு வந்தார். அப்போது மஞ்சு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த தகவல் அறிந்ததும் கணவர் ஹேமந்த்ராஜ் கடையில் இருந்து வீட்டுக்கு வந்தார். இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், வேப்பேரி உதவி கமிஷனர் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ரங்கசாமி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

வாசனுக்கு மைக் பிடித்து பேசவோ, சிந்திக்கவோ தெரியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாக்கு

நாமக்கல்: காங்கிரஸில் இருந்து வெளியேறிவருக்கு மைக் பிடித்து பேசவோ, சிந்திக்கவோ தெரியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டாக்டர் செழியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸில் இருந்து வெளியேறிவருக்கு மைக் பிடித்து பேசவோ, சிந்திக்கவோ தெரியாது. அவருடன் வெறும் 5 சதவீதம் பேர் தான் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்த 5 சதவீதம் பேரும் வரும் 28ம் தேதிக்கு பிறகு காங்கிரஸுக்கே வந்துவிடுவார்கள். ஆனால் பிரிந்து சென்ற தலைவர்கள் யாரையும் மீண்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம். வாசனுக்கு பின்கதவால் பேரம் பேசி  துட்டு சேர்க்க மட்டுமே தெரியும் இப்படிப்பட்ட ஆசாமிகளை ராஜ்யசபா மத்திய  மந்திரின்னு உயத்தி வச்ச காங்கிரசை என்ன சொல்ல உங்க ஜோட்டாலேயே உங்க தலைல அடிக்கணும்லே?

Kenya இஸ்லாமிய பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாத பஸ்பயணிகள் 28 பேரை சுட்டு கொன்றனர்! குர்ரான் படித்து காட்டுமாறு கேட்டு கொலை!

Muslims execute 28 non-Muslims in Kenya bus attack
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மன்டேராவில் இருந்து தலைநகர் நைரோபிக்கு ஒரு பயணிகள் பஸ் வந்து கொண்டிருந்தது. 69 பேர் பயணம் செய்த அந்த பஸ்சை தீவிரவாதிகள் வழிமறித்து நிறுத்தினர். அவர்களில் முஸ்லிம் அல்லாத பயணிகளை மட்டும் தனியாக நிறுத்தினர். பின்னர் அவர்களை மட்டும் பஸ்சில் கடத்தி சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் 28 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 19 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள் ஆவர்.கென்யாவில் எலாம்பாசா நகரில் சமீபத்தில் 4 மசூதிகளில் புகுந்து தீவிரவாதிகள் உள்ளனரா? என போலீசார் அதிரடி சோதனை நடத்திகென்யாவில் பஸ் பயணிகள் 28 பேர் சுட்டுக்கொலை ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மன்டேராவில் இருந்து தலைநகர் நைரோபிக்கு ஒரு பயணிகள் பஸ் வந்து கொண்டிருந்தது. 69 பேர் பயணம் செய்த அந்த பஸ்சை தீவிரவாதிகள் வழிமறித்து நிறுத்தினர். அவர்களில் முஸ்லிம் அல்லாத பயணிகளை மட்டும் தனியாக நிறுத்தினர்.பின்னர் அவர்களை மட்டும் பஸ்சில் கடத்தி சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் 28 பேர் உயிரிழந்தனர்.

Kiss of Love போராட்ட அறிவிப்பால் கோவை Fun Mall மூடிக் கிடக்கிறது

கோவை: கோவையில் உள்ள பிரபல வணிக வளாகமான ஃபன் மாலில் முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து வணிக வளாகமே இழுத்து மூடப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக மால் மூடப்பட்டுக் கிடக்கிரது. கேரள மாநிலத்தில் உள்ள காபி ஷாப் ஒன்றில் சமீபத்தில் முத்தப்போட்டி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் சம்பவ இடத்துக்குள் அதிரடியாக புகுந்தனர். முத்தப்போட்டிக்கு வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. கலாசார சீரழிவு என்று குற்றஞ்சாட்டினர். அதே நேரத்தில் முத்தப்போட்டிக்கு இளவட்டங்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஐடி வாசலில் காரித் துப்பும் போராட்டத்தை இந்து முன்னணி அமைப்பினர் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாச்சுலர் வாழ்க்கையை கெடுத்த தமிழ் சினிமா! கொண்டாட்டம் என்றாலே சாராயம்தான் என்று உருவாக்கியது தமிழ் சினிமாதான்

பேச்சிலர் லைஃபின் முக்கியமான பகுதி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். நம்ம தமிழ் சினிமாக்களில் ‘மச்சீ ஒரு குவார்ட்டர் சொல்லேன்!’ எனக் கொண்டாட்டத்தை மிகவும் சுருக்கிவிட்டார்கள். பாலிவுட்டும், ஹாலிவுட்டும் தாய்லாந்து, லாஸ் வேகஸ், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று நண்பர்கள் சும்மா கன்னா பின்னானு செலவு செய்து ஆட்டம் போடுவது மாதிரிக் காண்பித்து, பார்ப்பவர்களை ஏக்கப்பட வைத்துவிடுகிறார்கள்.
நாம் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத இடங்கள் அவை எனச் சாதாரண மக்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றுதான் நீங்கள் பேச்சிலர் லைஃப்பைக் கொண்டாட வேண்டும் என்பது அவசியமல்ல. நமது நாட்டிலேயே அதைப் போன்ற அட்டகாசமான இடங்கள் இருக்கின்றன. சரியாகத் திட்டமிட்டால் பணத்திற்கு வேட்டு வைக்காமல் உங்கள் பாக்கெட் மணியிலேயே சொகுசுச் சுற்றுலாப் பயணம் போகலாம். உங்கள் நண்பர்களோடு ஒரு ஜாலி டிரிப் போக இதோ சில இடங்கள்...சினிமாவில் ரஜினி கமல் தொடங்கி நேத்து வந்த விடலை வரை அரிவாளையும் சாராயத்தையும்  வல்கர் காமத்தையும்  glorify பண்ணி காட்டியே பணம் பண்ணீட்டாய்ங்க ! இவிங்க நடிச்ச பல படங்கள் பச்சை போர்னோவும் வெறும் ரத்த வெறி சாமியாட்டமும் தான்.சமுக பொறுப்பு இருக்கிற மாதிரிஅவ்வப்போது பாவ்லா  காட்டுவாங்க,மத்தபடி கல்லாவில்தான் குறி.

சாமியாருக்கு பாலாபிஷேகம் செய்த பாலில் பாயசம் செய்து பக்தர்களுக்கு (ராம்பால்) பிரசாதமாக வழங்கினார்

ஹிசார்: அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, தற்போது, 'கம்பி எண்ணி' வரும் சாமியார் ராம்பாலுக்கு, அவரின் ஆசிரமத்தில் பால் குளியல் நடந்ததாகவும், அந்த பாலில் பக்தர்களுக்கு பாயாசம் தயாரித்து வழங்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த மனோஜ் என்பவர் கூறியதாவது: சாமியார் ராம்பாலுக்கு, ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும், பக்தர்கள் சார்பில் பால் குளியல் நடத்தப்படும். குடம் குடமாக அவர் மீது பால் ஊற்றப்படும். பின், அந்த பால் முழுவதையும், பாத்திரத்தில் பிடித்து, பால் பாயாசம் தயாரிக்கப்படும்.இன்னும் இந்தமாதிரி பாலெல்லாம் குடிக்க ரெடியா இருக்கோம்ல? இன்னும் நெறைய சாமியாருங்க இருக்காக கொஞ்சம் பொறுங்க  தினுசு தினுசா வருவாய்ங்க  இந்த பீல்டுதாய்ன் நஷ்டமே இல்லாத பீல்டு   

சனி, 22 நவம்பர், 2014

இசையமைப்பாளர்களில் ஒரு நிறைகுடம் திரை இசை திலகம் கே.வி.மகாதேவன்!

இசைக் கலைஞர்கள் ஓய்வு பெறுவதில்லை.  அவர்களுக்குள் இசையே இல்லாத நிலை தோன்றும் போது அவர்கள் நிறுத்திவிடுகிறார்கள்.  - லூயி ஆர்ம்ஸ்ட்ராங்.
நினைப்பது நடந்துவிட்டால் அது அதிர்ஷ்டம்.
ஆனால் நினைத்ததற்கும் மேலே கிடைத்துவிட்டால்... அதைத்தான் பேரதிர்ஷ்டம் என்று சொல்கிறார்களோ?
கே.வி. மகாதேவன் விஷயத்திலும் அதுதான் நடந்தது.
கந்தன் கருணை படப் பாடல்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படும் என்று எதிர்பார்த்தார்.
அது நடக்கவும் செய்தது.
ஆனால் அதற்கு ஒரு படி மேலாக 1967-ஆம் ஆண்டுக்கான "சிறந்த இசையமைப்பாளருக்கான" தேசிய விருதும் அவருக்கு கந்தன் கருணை படத்துக்கு அமைத்த இசைக்காகக் கிடைத்தது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அதுவரை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஜனாதிபதி விருதுகளில் சிறந்த இசைக்கான விருது வழங்கப்படவே இல்லை. முதல் முதலாக 1967-ஆம் வருடம் தான் இசைக்கான தேசிய விருது அறிமுகப்படுத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து முதல்முதலாக சிறந்த இசைக்கான தேசியவிருது பெற்ற இசையமைப்பாளர் என்ற கௌரவம் கே.வி.மகாதேவனுக்குத்தான் கிடைத்தது.அதுவும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இசையமைத்தற்காக. "இது நான் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு மிகப் பெரிய அங்கீகாரம்" என்று தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருது குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார் கே.வி.மகாதேவன்.

பீகார் CM ஜித்தன் ராம் மாஞ்சி : கோவில் பெயரால் சுரண்டல்! கோவில்பூஜைகள் பார்பன ஜாதிக்கு மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்?.

பாட்னா, நவ.22_ கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா? என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கூறி னார். மேலும் நான் எனது வீட்டில் கடவுள் படங்களை வைக்க வில்லை, அதற்குப் பதி லாக தலைவர்களின் படங்களை வைத்துள் ளேன் என்று கூறினார்.  பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது,  சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே என்றார். மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக் கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுப வர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்குச் சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால் இங்கே (இந்தியாவில்) ஒரு மதத்தைச் சார்ந்தவர் களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக் கிறது.
ஜாதியின் பெயரால் பிளவு
இங்குள்ள (இந்து) மதத்தில் தன்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக் கிறார்கள். இதன் காரண மாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடு கிறது. இங்கு (இந்தியா வில்) மாத்திரமே பிறப் பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன.   உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறனர். அதேநேரத்தில் கடுமை யாக உழைக்கும் சமூகத் தினரை ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கின்றனர்.   கோவில் பெயரால் சுரண்டல்!
ஒரு குறிப்பிட்ட பணிக் காக பிறந்தவர்கள்போல் பரம்பரை பரம்பரையாக செய்து வருவது இந்தியா வில் மாத்திரமே நடக் கிறது. கோவில்களில் பூஜை செய்வது, அதன் மூலம் வரும் வருமானத் தில் சுகபோகமாக வாழ் வது, ஏழைகளின் உடலு ழைப்பைச் சுரண்டி வாழ் வது போன்ற செயல்களை ஒரு சாரார் செய்து சமூ கத்தில் பெரிய வேறு பாட்டை ஏற்படுத்தி வைத் துள்ளனர்.  கோவில்களுக்குப் பூஜை செய்ய இவர்கள் என்ன பரம்பரை ஒப்பந் தக்காரர்களா? அப்படி யென்றால் அந்த சாமிப் படங்களை ஏன் நீங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர் கள்? சாமிப் படங்கள் ஏன்?

கதையல்ல, வாழ்க்கை! சட்டம் வென்றது. கொலையாளிகள் தண்டிக்கப்பட்டனர்.

பிரதீப் அழகாக ராகம் போட்டு பாடுவார். ஏதோ பழைய படத்தில் சரத்பாபு பாடும் பாட்டுதான் அவருக்கு ஃபேவரைட். “நான் உன்னை நெனைச்சேன். நீ என்னை நெனைச்சே. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சி… நம்மை யாரு பிரிச்சா.. ஒரு கோடு கிழிச்சா…” அச்சு அசலாக எஸ்.பி.பி. குரல். கேட்கும் யாருமே மயங்கிவிடுவார்கள். சுசிலா மட்டும் விதிவிலக்கா என்ன? “வணக்கம் தோழர், நான் பிரதீப்” என்று முதன்முதலாக அவர் அறிமுகமானபோது சுசிலா, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸம்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள காரணம். எனவே காரல்மார்க்ஸுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

CM பன்னீர்செல்வம்: சட்டப்பேரவையை கூட்டச் சொல்ல கருணாநிதிக்கு அருகதையில்லை? சபாஷ் ? நீதான்யா இனி அதிமுக!

சென்னை: சட்டப் பேரவைக்கே வராத கருணாநிதி, சட்டப்பேரவையை கூட்டச் சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் "சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது" என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி "சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. சட்டப்பேரவை பற்றியோ, சட்டப்பேரவைக் கூட்டங்கள் பற்றியோ அல்லது சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது பற்றியோ பேசுவதற்கு ஒரு சிறிதளவேனும் அருகதை உள்ளவரே அதைப்பற்றி பேசலாம். சட்டப் பேரவைக்கே வராதவர் சட்டப்பேரவை கூட்டப்படுவது பற்றி பேசுவது, "அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்" என்னும் சொலவடையைத்தான் நினைவுபடுத்துகிறது. MGR ஆரம்பித்த அதிமுகவின் அடிப்படை கொள்கையே எப்படி  எப்படி எல்லாம் கலைஞரை  தாக்கலாம் அவமான படுத்தலாம் என்றே இருந்து வந்திருக்கிறது. அதிமுக தொண்டனுக்கு அதுதான் ஆக்சிஜன்  அதுதான் கனவு அதுதான் போதை!   பன்னீரு சரியாத்தான் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. கில்லாடி ஜெயாவை மண் கவ்வ வைச்ச உங்க சாயா புத்திக்கு ஒரு சபாஷ் . இப்படியே கலைஞரை சதா திட்டிகிட்டே இருந்தா  நிச்சயமாக  அதிமுக ஒட்டு வங்கியை உங்க பர்சுக்குள் அடைச்சுடுவீங்க .கலைஞரை இப்படி தாறுமாறாக பன்னீரு காய்ச்சியது தனது  முதலவர் நாற்காலியை  நிரந்தரமாக்கும் முயற்சிதான். அதற்கு ஒரே  டெக்னிக் கலைஞர் மீது கல்லு எறிதல்தான் .வேறு எந்த விபரமும் அதிமுக தொண்டர்களுக்கு புரியாது.

தமிழக பாஜகவில் உள்ள அதிமுக உளவாளி யார்? ம்ம் ஒண்ணா ரெண்டா மூணா......

கட்சியில் இருந்தபடி, அ.தி.மு.க.,வுக்கு உளவு சொல்லிக் கொண்டிருந்த தலைவர்கள் குறித்து கண்டறியப்பட்டு, மேலிடத்துக்கு சொல்லப்பட்டிருப்பதால், தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர், 'கிலி'யில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், 2016ல் ஆட்சி அமைக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து, தமிழக பா.ஜ., செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'தனித்தே போட்டியிடும் அளவுக்கு, கட்சியை தயார்படுத்துங்கள்' என்றும் சொல்லப்பட்டுஇருக்கிறது. இதை தொடர்ந்து தான், தமிழக பா.ஜ., தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசின் தவறுகளை, தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறார். அடுத்தடுத்த கட்டங்களில், தமிழக அரசுக்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுஇருக்கின்றனர். இந்நிலையில், இலங்கையில் சிக்கிய, ஐந்து தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர். இதில், மோடியின் முயற்சியை, தமிழக மக்கள் மத்தியில், தீவிரமாக கொண்டு செல்ல முயல்கிறது, தமிழக பா.ஜ.,வேறு என்ன காசு பணம் துட்டு மணிமணி

சாமியார் ராம்பால் ஆஸ்ரமத்தில் கைக்குண்டுகள் துப்பாக்கிகள் அசிட் போத்தல்கள் சொகுசு மெத்தைகள் .....

அரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் சாமியார் ராம்பால் ஆசிரமம் அமைத்து ஏராளமான பெண் சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கி இருந்தார்.
ஆசிரமத்தையும், தன்னையும் பாதுகாக்க தனியாக பாதுகாப்பு படை அமைத்து தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார். இங்கு ஏராளமான முறைகேடுகளும், சட்ட மீறல்களும் நடந்தன. 2006–ம் ஆண்டு ஆசிரமத்தில் நடந்த கொலை தொடர்பாக ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.
கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகததால் போலீசார் ஆசிரமத்துக்குள் புகுந்து சாமியார் ராம்பாலை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியானார்கள். கைதான சாமியார் ராம்பால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நம்மள போல உள்ள  ஆசாமிகளை இன்னுமா உலகம் நம்புது? என்ன பண்றது இன்னும் நெறைய பேரு நம்புறாய்ங்க 

சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ கமலின் நினைவுப் பகிர்வு... "சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம். சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.  நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது.

மேயர் சைதை துரைசாமி ராஜினாமா? கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை?

 முன்பு மேயர்களாக இருந்த மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது சைதை துரைசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்திலும் அவர்கள் மீது சைதை துரைசாமி குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மேயர் சைதை துரைசாமி கீழ்ராஜ மங்கலத்தில் 10 ஏக்கரில் பண்ணை வீடு கட்டி இருப்பதாக குற்றச்சாட்டு கூறி இருந்தார். இந்த புகார் எழுந்த சில தினங்களுக்குள் மேயர் சைதை துரைசாமி அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

துடைப்பம் சீன காட்டுற கோஷ்டியில் சமந்தாவும் சேந்துட்டாய்ங்க

துடைப்பத்தை எடுத்து அரைமணிநேரம் தெருவோரத்தை சுத்தம் செய்து, தூய்மை இந்தியா திட்டத்தை நாங்களும் செயல்படுத்திட்டேமில்ல... என்று நடிகர், நடிகைகள் சீன் காட்டி வருகிறார்கள். தமன்னாவைத் தொடர்ந்து சமந்தாவும் இந்த சீனில் அங்கத்தினராகியிருக்கிறார். ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளிக்கருகில் துடைப்பத்துடன் தனது தூய்மைப் பணியை சில மணி நேரம் செய்தவர் அந்த புகழ்பெற்ற டயலாக்கை தானும் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. முன்னதாக, இந்த மாதிரி துடைப்பம் ஏந்தி சீன் போட மாட்டேன் என்று ஷாருக்கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2ஜி: தலைமை விசாரணை அதிகாரியாக ஆர்.கே. தத்தா நியமனம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கின் தலைமை விசாரணை அதிகாரி பொறுப்பு சிபிஐ கூடுதல் இயக்குநர் ஆர்.கே. தத்தாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் தத்தாவிடம் மட்டுமே இனி தங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிப்பர். 2ஜி அலைக்கற்றை தொடர்புடைய வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் இருக்க சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதன்படி, அந்தப் பொறுப்பில் இருந்து ரஞ்சித் சின்ஹா விலகினார். இதையடுத்து, 2ஜி அலைக்கற்றை விசாரணை நடவடிக்கைகளை அவருக்கு அடுத்த நிலையில் மேற்பார்வையிட்டு வந்த ஆர்.கே. தத்தா, இனி இந்த வழக்கை மேற்பார்வையிடும் தலைமை அதிகாரியாக செயல்படுவார் என்று சிபிஐ கூறியுள்ளது.

பிரியங்காவின் கணவர் வதேராவின் சொத்து குவிப்பு மோசடிகள் ஹரியான அரசு கடும் நடவடிக்கை!

வதேராவுக்கு கடும் நெருக்கடி:- இழுத்து மூடிய நிறுவனங்கள், சொத்து விவரத்தை தோண்டுகிறது ஹரியானா அரசு!! 
குர்கான்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வாங்கிக் குவித்த சொத்துகள், இழுத்து மூடிய நிறுவனங்கள் விவரங்களை ஹரியானா அரசு திரட்டி வருகிறது. இதனால் வதேரா மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயக் கூடும் என்று கூறப்படுகிறது. சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பல மாநிலங்களில் ஏழைகள் மற்றும் அரசு நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கிக் குவித்து 'நிலக் கொள்ளை'யில் ஈடுபட்டார்.எவ்வளவு சீக்கிரம் இந்த ஆளு தண்டிக்கப்படுவாரோ அந்த அளவு பிரியங்காவுக்கு நல்லது ,

பா.ம.க கூட்டணி: 8 கட்சிகளுக்கு அழைப்பு! ரஜினி வாய்ஸ் கொடுக்க கோரிக்கை!!

சென்னை: வரும் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் மாற்று அணி அமைக்கப்படும் என்று அக் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அணியில் இணைய 8 கட்சிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பாமகவின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ராமதாஸ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பாமக தலைமையிலான மாற்று அணியின் முழக்கமாக பூரண மதுவிலக்கு இருக்கும். இதையே தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல உள்ளோம். 2016-இல் பாமக தலைமையில் ஆட்சி அமையும்.

தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்! உ.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு -


உத்தரபிரதேசத்தின் அமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான அசம்கான், ‘தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு முஸ்லிம்களின் சமாதி இடம் பெற்றுள்ள தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்த விரும்புகிறார்கள். எங்கெல்லாம் முஸ்லிம்களின் சமாதியும், நினைவிடங்களும் உள்ளனவோ அவை அனைத்தும் மத்திய வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மோசமான இடங்களாக இருந்தால் அது வக்பு வாரியத்திடம் இருக்கும். மிகவும் விலை மதிப்பு உடையது எல்லாம் மத்திய அரசுக்கு சொந்தமாகுமா?தாஜ்மகாலில் இருந்து வரும் வருமானத்தை முஸ்லிம் குழந்தைகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்த வேண்டும். அதனைக் கொண்டு இரண்டு பல்கலை கழகங்களை வக்பு வாரியத்தால் நடத்தி விட முடியும் என்றார்.

பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்! மௌனமான ஒரு கண்ணீர் காவியம்.

பிரதமர் மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவருடைய மனைவி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, திருமணம் ஆனவரா? இல்லையா? என்பதே நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியிலும் மோடி போட்டியிட்டார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற இடத்தில் யசோதாபென் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகுதான், அவர் திருமணம் ஆனவர் என்று தெரிய வந்தது. இருவருக்கும் 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு 20 வயது கூட ஆகவில்லை. ஓரிரு மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்து விட்டார். யசோதாபென், ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். 62 வயதான அவர், குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் ஐஸ்வர்வாடா கிராமத்தில் தன்னுடைய இரு சகோதரர்களுடன் வசித்து வருகிறார். இந்த  அம்மையாருக்கு  சார்பாக பேச இந்தியாவில் எவரும் முன்வர மாட்டார்கள் .இவரது கண்ணீரை நான்கு சுவர்களுக்குள் மறைக்க சகல சக்திகளையும் மத்திய அரசு ...

ரஜினி Punch:அரசியலும் சினிமாவும் துட்டு , இது தெரியாத குஞ்சுகளின் வாயில மண்ணு!


வெள்ளி, 21 நவம்பர், 2014

குற்றம் கடிதல் அதிர்ச்சியில் ஆழ்த்திய உண்மை! இயக்குனர் பிரம்மா!

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருக்கும் ஒரே தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’. “கோவா மட்டுமல்ல, இதற்கு முன் மும்பை, ஜிம்பாப்வே திரைப்பட விழாக்களுக்கும் தேர்வாகித் திரையிட்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்புற திட்டம் இருக்கு.” என்று சந்தோஷத்துடன் ஆரம்பித்தார் அந்தப் படத்தின் இயக்குநர் பிரம்மா...
‘குற்றம் கடிதல்’ படத்தில் என்ன செய்தி சொல்லியிருக்கீங்க?
முதல்ல இது செய்தி சொல்ற படம் கிடையாது. ஒரு சம்பவத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட த்ரில்லர் கதை. ஆனால், அந்தச் சம்பவத்தின் பின்னணியில் சமூக அடுக்குகளில் மேலும் கீழுமாக வாழக்கூடிய மக்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, என்ன மாதிரியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதுதான் படம். நிறைய விஷயங்களைச் சாடியிருக்கிறோம். நிறைய கேள்வி கேட்டிருக்கிறோம். படம்கூட கேள்வியோடுதான் முடியும்.
என்னதான் கதையம்சம் இருந்தாலும், சிறு முதலீட்டுப் படங்கள் மக்களுடைய கவனத்தைப் பெறாமலேயே போய்விடுகின்றனவே?
கவனிக்கப்படுவதற்கும், கவனிக்கப்படாததுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று விளம்பரங்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. பெரிய நடிகர்கள் இல்லை என்றால், விளம்பரத்திற்கு மட்டுமே பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. அந்த அளவுக்குப் பண்ணாவிட்டால், மக்களுக்குத் தெரியமலே போய்விடுகிறது.