சனி, 22 நவம்பர், 2014

பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்! மௌனமான ஒரு கண்ணீர் காவியம்.

பிரதமர் மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவருடைய மனைவி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, திருமணம் ஆனவரா? இல்லையா? என்பதே நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியிலும் மோடி போட்டியிட்டார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற இடத்தில் யசோதாபென் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகுதான், அவர் திருமணம் ஆனவர் என்று தெரிய வந்தது. இருவருக்கும் 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு 20 வயது கூட ஆகவில்லை. ஓரிரு மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்து விட்டார். யசோதாபென், ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். 62 வயதான அவர், குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் ஐஸ்வர்வாடா கிராமத்தில் தன்னுடைய இரு சகோதரர்களுடன் வசித்து வருகிறார். இந்த  அம்மையாருக்கு  சார்பாக பேச இந்தியாவில் எவரும் முன்வர மாட்டார்கள் .இவரது கண்ணீரை நான்கு சுவர்களுக்குள் மறைக்க சகல சக்திகளையும் மத்திய அரசு ...


அவருக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், யசோதாபென்னிடம் நேற்று ஒரு தனியார் செய்தி சேனல் பேட்டி கண்டது. அப்போது அவர், ‘பிரதமர் நரேந்திர மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவர் என்னை அழைத்து செல்ல வந்தால், அவருடன் செல்லத்தயார்’ என்று கூறினார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: