புதன், 3 அக்டோபர், 2012
கொந்தளிக்கும் கேரளகட்சிகள் வரலாற்றுச் சின்னத்தை அழிக்காதே!
EVKSஇளங்கோவன்: தமிழர்களை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்
.வருகிறார்கள். ஆனால்
இதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வைகோ, சீமான் போன்றவர்கள்
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.E.V.K.S. Elangovan
நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக்கப்பட்ட ஆ.ராசா
Posted by: Chakra
டெல்லி:
நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி
ஜாமீனில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் திமுக
எம்பியுமான ஆ.ராசாவை காங்கிரஸ் நியமித்துள்ளது.
அரசுக்கு நஷ்டம் என்பதை ஊழல் என்று மாற்றியது ஏன்?திமுகவை அடக்கி வைக்கவே ராசா மீது மோசமான வழக்கு புனயப்பட்டதோ என்று என்ன தோன்றுகிறது . அண்மையில் உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக அளித்த ஒரு கருத்து, சேவைகள் மக்களுக்கு சேரவேண்டுமே அல்லாது லாபநோக்கம் மட்டுமே அரசு பார்க்க கூடாது என்ற கருத்து ராசாவின் கொள்கைக்கு கிடைத்த பூஸ்ட் என்று கொள்ளலாம்
எரிசக்தித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக ராசா நியமிக்கப்பட்டுள்ளனர்.
துரை தயாநிதி சொத்துக்களை முடக்கும் மெகா திட்டம்: “ஹா.. ஹா.. ஹா!
Viruvirup
கிரானைட்
மோசடி வழக்கில் போலீஸூக்கு டிமிக்கி (!) கொடுத்துவிட்டு தலைமறைவாக
உள்ளவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்
வெளியாகி, மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் சிக்கியுள்ள பி.ஆர்.பழனிச்சாமி, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 12 பேருக்குச் சொந்தமான ரூ. 20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ள விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக, மற்றொரு தகவல்.
பி.ஆர்.பி கிரானைட்ஸ் நிறுவன அதிபர் பழனிச்சாமிமீது மட்டும் இதுவரை 24 வழக்குகளைப் போலீஸார் போட்டுள்ளனர். அவர் சரணடைந்து, போலீஸ் காவலில் உள்ளார். இதனால் அவர், தலைமறைவு பட்டியலில் இல்லை. ஆனால், அவருடைய மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் இருவரும், தலைமறைவாக உள்ளனர். மறுபுறத்தில், துரை தயாநிதி கைதாகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்தியா பயிற்சி கொடுக்கா விட்டால், அடுத்த சாய்ஸ் பாகிஸ்தான்” -இலங்கை
Viruvirupu
“இலங்கை
ராணுவ வீரர்கள் சீனாவில் ராணுவப் பயிற்சி எடுத்துக் கொள்வதைவிட,
இந்தியாவில் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்” இவ்வாறு
கூறியுள்ளார், இலங்கை பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சரும், ஜனாதிபதியின்
சகோதரருமான பசில் ராஜபக்ஷே.
இன்று கொழும்புவில் இந்தியாவில் இருந்து சென்றிருந்த செய்தியாளர்களுடன் பேசியபோதே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.“தமிழ்நாட்டில் இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் பக்தி சுற்றுலா மேற்கொண்டபோது தமிழகத்தில் உள்ள கட்சியினரால் தாக்கப்பட்டதும், எமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், எமது ராணுவ வீரர்களை பயிற்சிக்காக இந்தியா அனுப்புவதையே நாம் விரும்புகிறோம். காரணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள நட்புறவுக்கு மிக நீண்ட வரலாறு உள்ளது” என்று தெரிவித்தார் அவர்.
சி.வி.சண்முகத்தின் அமைச்சர் பதவி பறிப்பு; கட்சி பதவியும் காலி- புதிய அமைச்சராக மோகன் நியமனம்!
ஜெ. கல்தா கொடுத்த சண்முகம்: சில மணி நேரத்தில் மர்மமாக என்ன நடந்தது?
இன்றைய
அமைச்சரவை பந்தாட்டத்தில் வெளியே வீசப்பட்ட சி.வி.சண்முகத்துக்கு, இன்று
காலை தமது அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ஒரு சான்ஸ் இருந்தது
என்கிறார்கள், அ.தி.மு.க. வட்டாரங்களில். இன்று காலை விழுப்புரம் வடக்கு
மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து மட்டுமே சி.வி.சண்முகத்தை
நீக்கியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.
“தலைக்கு வந்தது, தலைப்பாகையுடன் போனது” என்று சி.வி.சண்முகம், ஓரளவுக்கு மகிழ்ச்சியுடன்தான் இருந்தார் என்கிறார்கள், அ.தி.மு.க. புள்ளிகள்.
ஆனால், இன்று பிற்பகல் சி.வி.சண்முகத்தை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார் ஜெயலலிதா.

சோனியாவின் சிகிச்சைக்கு அரசு எந்த செலவும் செய்யவில்லை
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவச் செலவுக்காக
மத்திய அரசு எந்த செலவும் செய்யவில்லை என்று தேசிய தகவல் ஆணையம்
கூறியுள்ளது. இதன்மூலம் இந்த விஷயத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி ஆகியோர் சொல்லி வரும் புகார்கள்
தவறானவை என்பது உறுதியாகியுள்ளது.
சோனியா காந்தியின் வெளிநாட்டுப்
பயணங்கள், தங்கும் செலவு, மருத்துவ செலவுக்காக மத்திய அரசு ரூ. 1,880 கோடி
செலவிட்டுள்ளதாக முதலில் சாமியும் பின்னர் மோடியும் குற்றம் சாட்டி
வருகின்றனர்.இந் நிலையில் இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நவீன் குமார் என்பவர் மனு செய்தார். இதற்கு பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை மற்றும் மத்திய அரசின் பிற துறைகளிடம் இருந்து விவரம் பெற்று உடனடியாக பதில் தந்துள்ளது தகவல் ஆணையம்.
நடிகர் அம்பரீஷ்: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் நடப்பதே வேறு
“தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் நடப்பதே வேறு” -நடிகர் ஆர்ப்பாட்டம்! இவர் நம்ப ரஜினி தம்பிக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் ச
Viruvirupu
கர்நாடகம்
தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து மாண்டியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும்
கலந்து கொண்ட நடிகர் அம்பரீஷ், “தமிழகத்திற்குக் காவிரியிலிருந்து தண்ணீர்
திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறித் திறந்து விட்டால்,
தண்ணீர் திறப்பை எதிர்த்து பெங்களூருவில் ராஜ்பவனை முற்றுகையிடும்
போராட்டத்தை நடத்துவோம்” என்று அறிவித்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. இதற்கு கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரெட் காமிரா கமல்ஹாசன் கலந்தாய்வு பயிலரங்கம்
சினிமா தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம்: கமல் தகவல்
சினிமா தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம், சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த தகவலை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்திய
தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் அதன் ஊடக துறை
தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னையில் (02.10.2012) நிருபர்களுக்கு பேட்டி
அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
`பிக்கி, 1927-ம்
ஆண்டில் தொடங்கப்பட்டது. இது, இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான உச்சநிலை
தொழிற்கூடம் ஆகும். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், மகாத்மா
காந்தியினால் சேவை மனப்பான்மையுடன், இந்திய தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக
தொடங்கப்பட்டது.இது, ஒரு தொழில்
என்ற அந்தஸ்தை சினிமா துறைக்கு வாங்கிக்கொடுத்தது, இந்த அமைப்புதான்.
சினிமா துறையினரின் குறைகளையும், தேவைகளையும் கேட்டு, அரசுக்கு எடுத்து
சொன்னது.இதற்கான கலந்தாய்வு
கூட்டம் முதலில் மும்பையில் மட்டும் நடைபெற்றது. பின்னர் கொல்கத்தாவில்
நடைபெற்றது. கடந்த ஆண்டு முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்திய சினிமாவின்
100 ஆண்டு கொண்டாட்டமாக, சினிமா தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம் மற்றும்
பயிலரங்கம் வருகிற 16, 17-ந் தேதிகளில், சென்னையில் நடைபெற இருக்கிறது.அதில் மம்முட்டி,
மோகன்லால், திலீப், ஜெயராம், பிரியதர்ஷன், சிங்கீதம் சீனிவாசராவ், அனுராக்
கஷ்யப், ரோகன் சிப்பி, சோரப் சுக்கலா ஆகியோருடன் ஆஸ்கார் விருது வென்ற
`லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்' தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னும் கலந்து
கொள்கிறார். புகழ்பெற்ற ஹாலிவுட் கலைஞர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.இந்த நாட்டின் ஊடகம்
மற்றும் கேளிக்கை துறையின் பெருமை மிகுந்த தளமாக `பிக்கி' வெளிப்பட்டுக்
கொண்டிருக்கும் வேளையில் அறிவும், அனுபவமும், செயலாக்க பகிர்தலும் கொண்ட
இப்படிப்பட்ட நிகழ்வுகளை, ஒட்டுமொத்த ஊடகம் மற்றும் கேளிக்கை துறையுடன்
சம்பந்தப்பட்ட கலைஞர்களையும், வல்லுனர்களையும் கொண்டு நடத்துவதில்,
`பிக்கி' மகிழ்ச்சி அடைகிறது.இந்த கலந்தாய்வு
மற்றும் பயிலரங்க கூட்டத்தில், `ரெட் காமிரா' பயன்படுத்துவது பற்றியும்,
டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றியும் விளக்கம் அளிக்கப்படும்.'' இவ்வாறு
கமல்ஹாசன் கூறினார்.
ஜோராக பாதங்களை நோக்கி பாயக்கூடிய துடிப்பு
அம்மாவின் புதிய சபாநாயகர் தனபால்: “…இத்தனை நாளாய் எங்கிருந்தாய்”
Viruvirupu,
சபாநாயகராக
இருந்த ஜெயக்குமார் முதல்வர் உத்தரவுக்கிணங்க ராஜினாமா கடிதத்தை கொடுத்ததை
அடுத்து, புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவதற்காக தமிழக சட்டப்பேரவை
வரும் 10-ம் தேதி கூடுகிறது. அப்போது, புதிய சபாநாயகர் தேர்வு
செய்யப்படுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக ப.தனபால் போட்டியிடுவார் என்று
ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, தனபால் பற்றி அ.தி.மு.க. வட்டாரங்களில்
அதிகம் பேச்சு அடிபடுகிறது.
காரணம், “…இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” என்ற பாடல் வரிகள் பலரது வாயில் ஒலிப்பதுதான்.
காரணம், “…இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” என்ற பாடல் வரிகள் பலரது வாயில் ஒலிப்பதுதான்.
Siblings Fighting மறைந்த நடிகை செளந்தர்யாவின் ரூ. 50 கோடி
பெங்களூர்: மறைந்த நடிகை செளந்தர்யாவின் ரூ. 50 கோடி சொத்துக்காக அவரது குடும்பத்தினருக்கிடையே பெரும் சண்டை நடந்து வருகிறதாம்.
கர்நாடகாவைச்
சேர்ந்தவர் நடிகை செளந்தர்யா. கன்னடம் தவிர தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல
மொழிப் படங்களில் நடித்தவர். அழகான, நன்கு நடிக்கத் தெரிந்த நடிகை என்ற
பெயரைப் பெற்றவர். siblings fighting கடந்த 2004ம் ஆண்டு பாஜக தேர்தல் பிரசாரத்திற்காக ஆந்திராவுக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியதில் செளந்தர்யா மரணமடைந்தார். அந்த விபத்தில் அவருடன் அவரது சகோதரர் அமர்நாத்தும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் செளந்தர்யாவின் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துக்காக அவரது குடும்பத்தினருக்கிடையே பெரும் மோதல் மூண்டுள்ளது. செளந்தர்யாவின் தாயார் மஞ்சுளா, செளந்தர்யாவின் முன்னாள் கணவர் ராஜு ஒருபக்கமாகவும், அமர்நாத்தின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் மகன் சாத்விக் ஆகியோர் மறுபக்கமாகவும் பிரிந்து நின்று மோதி வருகின்றனராம்.
சந்தியா...தமிழில் ஏன் காணமுடியவில்லை
தமிழிலிருந்து மலையாளத்திற்கு சென்ற நடிகர் பாலா, தற்போது ‘ஹிட்
லிஸ்ட் என்ற படத்தை நடித்து இயக்குகிறார். இதில் சந்தியா
ஹீரோயின்.இவரை தமிழில் ஏன் காணமுடியவில்லை ? வேறொன்றும் இல்லை ஸ்டோரி டிஸ்கஷனுக்கு மறுக்கிறாராம் . அது ஏன் ? உண்மையில் அழகும் திறமையும் உள்ள நல்ல ஒரு நடிகைதான் இந்த கேரளத்து சுட்டிப்பெண்
காந்தி காலத்திலேயே காந்தியம் தோற்று விட்டது
தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச
நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி
நம்பிக்கையற்றோர், “கலப்பு’த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக்
குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, “காந்தி சாதி’
என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம்
வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என
வாதிட்டார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க
தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி
செய்தனர்.
நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர்
சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென
ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும்.
“பீ’யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு
சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர்
திரை கிழித்திருக்கிறார்.

திரை கிழித்திருக்கிறார். சோனியாவுக்கு 1,880 கோடி செலவிடப்பட்டதா? நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
அகமதாபாத் :காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாடு பயணத்துக்காக ரூ.1,880 கோடி செலவு செய்திருப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியிருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த வகையில் மத்திய அரசு ரூ.1,880 கோடி செலவு செய்திருப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த வாரம் பொதுக்கூட்டம் ஒன்றில் குற்றம் சாட்டினார்.
சென்னை EVP World ராட்டினத்திலிருந்து விழுந்து விமான பணிப்பெண் பலி
EVP WORLD பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்திலிருந்து விழுந்து பெண் பலி: சென்னையில் 3 பேர் கைது<
சென்னையில்
பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்திலிருந்து விழுந்து விமான பணிப்பெண்
பலியானார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.நாகாலாந்து
மாநிலத்தை சேர்ந்த சஸ்லாமேக் என்பவரின் மகள் அபியாமேக் (வயது 25).
கிங்பிஷர் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.
தற்போது சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், கோத்தாரி நகர், 5-வது
தெருவில் தன்னுடன் பணிபுரியும் தோழிகளோடு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.>02.10.2012 காலை
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள `இ.வி.பி. வேர்ல்டு' என்ற
தனியார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தனது தோழிகள் மற்றும் நண்பர்கள் 12
பேருடன் சென்றார். பொழுதுபோக்கு பூங்காவிற்குள் செல்ல டிக்கெட்டுகள்
வாங்கிக்கொண்டு அனைவரும் ஆனந்தமாக உள்ளே சென்றனர்.அப்போது அங்குள்ள
`ஆக்டோபஸ்' ராட்டினத்தில் பயணம் செய்ய ஆயத்தமானார்கள். இந்த ராட்டினம் மேலே
வளைந்தும், தலைகீழாகவும் செல்லக்கூடியது. இதில் சுமார் 20 பேர் பயணம்
செய்வார்கள். பயணம் செய்பவர்கள் அனைவரும் சீட்டில் அமர்ந்து பெல்ட் அணிந்து
கொள்ள வேண்டும்.>இந்த ராட்டினத்தை
ஆபரேட்டர் வில்லியம்ஸ் இயக்கினார். ராட்டினம் இயக்கப்பட்ட சிறிது நேரத்தில்
மேலே சென்ற அதிலிருந்து `ஆ' என்று அலறியபடி அபியாமேக் கீழே விழுந்தார்.
6 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு : 6 பேர் கைது
இதன்மூலம் அவர்
அனுப்பும் பணத்தைக் கொண்டு தங்களது பிள்ளைகளான மகள் காளீஸ்வரி (12), மகன்
பாலா (7), மகள் சரண்யா (5), சக்தி (ஒன்றரை வயது) ஆகியரோடும், தனது தந்தை
கருப்பையாவோடும் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தைக்கொண்டு
குடும்பத்தை நடத்தினாலும், இவர்கள் பாய் மற்றும் கிடுகு முடையும்
தொழிலையும் செய்து வந்தனர்.
இதனிடையே 30.09.2012
அன்று இரவு இவரது வீடு தீ பற்றி எரிந்தது. சுற்றிலும் காரைச்சுவர், உயரே
கூரை வேய்ந்திருந்த அந்த வீடு தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. வெளியே
வரமுடியாமல் தவித்த காளிமுத்து, அவரது தந்தை, தனது பிள்ளைகள் 4 பேர் உள்பட 6
பேரும் சம்பவ இடத்திலேயே கருதி இறந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது வீட்டின் கதவில் முன்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததாக கூறப் படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவ வழக்கு
தொடர்பாக இன்று ராமநாதபுரத்தில் முனியாண்டி, மங்களநாதன், லூயிஸ்ராஞ்,
பஞ்சாட்சரம், சுஜாகனி, காளிமுத்தன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படங்கள் : பாலாஜி
10 மணி நேர விசாரணைக்கு பின்பு மு.க.அழகிரி மருமகன் விடுவிப்பு
பத்து மணி நேர விசாரணைக்கு பின்னர் மு.க.அழகிரி மருமகன் விடுவிக்கப்பட்டார்.மதுரையில்
கிரானைட் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரில், கிரானைட் அதிபர் பி.ஆர்.பி.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிரானைட் முறைகேட்டில்
ஈடுபட்ட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.
இந்த
முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியின்
முன்ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் துரை
தயாநிதி குறித்து, அவரது நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் விசாரணை
நடத்தினர். மு.க.அழகிரியின்
மூத்த மகள் கயல்விழியின் கணவர் வெங்கடேசனிடம், துரைதயாநிதி குறித்து மதுரை
போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னையில் இருந்த அவரை மதுரை தனிப்படை
போலீசார் மதுரை அழைத்து வந்தனர். அவரை இன்று (02.10.2012) காலை
மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் ஏஎஸ்பி மயில்வாகணன் தலைமை யில் போலீசார்
விசாரணை மேற்கொண்டனர். 10 மணி நேர விசாரணைக்கு பின்னர் இன்று இரவு அவர்
விடுவிக்கப்பட்டார்.
காந்தி ஜெயந்தியில் சரக்கு விற்பனை அமோகமாக,,,
காந்தி ஜெயந்தி நாளான நேற்று, கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில், "சரக்கு' விற்பனை அமோகமாக நடைபெற்றது.
"அகிம்சா' வழியில் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த, தேசத் தந்தை காந்தியை கவுரவிக்கும் பொருட்டு, அவரது மதுவிலக்கு கொள்கையை அரசு, அவரது பிறந்த நாளான அக்., 2ம் தேதி அமல்படுத்தி வருகிறது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடலூர் மாவட்டத்தில், பல டாஸ்மாக் கடைகளில் நேற்று, "சரக்கு' விற்பனை ஜோராக நடந்தது. பெரும்பாலான விற்பனையாளர்கள், முன்னேற்பாடாக, நேற்று முன்தினம் இரவே, "சரக்குகளை" அருகில் உள்ள பார், கடைகள் மற்றும் வீடுகளில் வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர்.

தமிழக சாயப்பட்டறைகளின் கைங்கர்யம் காவிரி தண்ணீரில் சாயக்கழிவு
ஈரோடு : கஷ்டப்பட்டு வாங்கியுள்ள காவிரி தண்ணீரை, சாயப்பட்டறைகள்
மாசுபடுத்துவதை, இரு மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், வேடிக்கை
பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான, தஞ்சை டெல்டா பாசனப் பகுதிக்கு, தண்ணீர் வழங்கும் தாயாக, காவிரி ஆறு உள்ளது. பயிர் உற்பத்திக்கு மட்டுமின்றி, கூட்டுக் குடி நீர் திட்டம் மற்றும் மின் உற்பத்திக்கும், காவிரி ஆறு உதவுகிறது.காவிரியில், ஜூன் 12ம் தேதி, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டு மழையில்லாததால், குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. குடி நீர் வழங்கும் நோக்கில், நாள்தோறும், 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.

செவ்வாய், 2 அக்டோபர், 2012
தமன்னாவுக்கு சதி செய்யும் அந்த நல்ல மனிஷன் யார்?
நடிகை தமன்னா காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர்.
முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர
நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார்.
. இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு கிசுகிசுக்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நடிகர், தமன்னாவை நேசித்ததாகவே தகவல்கள் வெளியாயின. காரணம் வீர நடிகரின் அண்ணனும் ஒரு நடிகையைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், ஒருவழியாக சம்மதம் பெற்று திருமணம் முடித்து, குழந்தை குட்டியென்று சந்தோஷமாக வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார். அதனால் நம் காதலுக்கும் பெற்றோர் பச்சைக் கொடி காட்டுவார் என எதிர்பார்த்திருந்தார்.

வைகை பட தயாரிப்பாளர் கொலை: கூலிப்படையினர் 3 பேர் சரண்
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த
பிள்ளைப்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபரும், அண்மையில் வைகை என்ற படத்தின் தயாரிப்பாளருமான
பி.பி.ஜி.குமரன் நேற்று காலையில் வெடி குண்டு வீசி கொடூரமாக கொலை
செய்யப்பட்டார். அவருடன் காரில் சென்ற உதவியாளர்கள் மதியழகன், சங்கர்
ஆகியோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.வைகை பட தயாரிப்பாளர்
Chennai: In an attack that was no less than a scene
from a commercial film, a gang of 20 armed men killed film producer by
hurling country-made bombs at his car in full public view.
According to reports, PPG Kumaran, who is also a panchayat
councillor of Sriperumbudur town was attacked by assailants in fron of
the panchayat office on Monday.
The 35-year-old businessman had recently produced Tamil film
'Vaigai' and was an independent councillor in Pillaipakkam town
panchayat.
தொழில் போட்டியில்
கூலிப்படையினரை ஏவி குமரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மதுரையைச்
சேர்ந்த ரவுடிகள் 10 பேர் திட்டம் போட்டு அவரை தீர்த்துக் கட்டியுள்ளனர்.
நடிகர் முகத்தை காட்டி விலை பேசுகிறார்கள் : தங்கர்பச்சான்
இயக்குனர் தங்கர்பச்சான்
இயக்கும் புதிய படம் ‘அம்மாவின் கைப்பேசி’. சாந்தனு, இனியா, ரேவதி
உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரோஹித் குல்கர்னி இசை. இப்படத்தின் பாடல் கேசட்
வெளியீட்டு விழா நேற்று நடந்தது.பின்னர் தங்கர்பச்சான்
பேசியபோது, ‘’இன்றைக்கு தயாரிப்பாளர் கிடைப்பது கடினம். நான்கைந்து
பேர்தான் படம் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் தாங்கள் வாங்கிய
கடனுக்காக தயாரிக் கிறார்கள். தமிழ் சினிமா உயிரற்ற நிலையில் கிடக்கிறது.நடிகர்கள் கிடைப்பது
கடினமாக இருக்கிறது. ஒரு படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடத்த
மட்டுமே எனக்கு ரூ.23 லட்சம் செலவானது. எது மக்களுக்கு தேவை இல்லையோ அதற்கு
பல கோடி செலவு செய்கிறார்கள்.
ஒரு பாடல் காட்சிக்கு 6 கோடி ரூபாய் செலவு செய்ப வர்கள் ‘பாரதி’ படத்துக்கு ஒன்றறை கோடிதான் ஒதுக்குகிறார்கள்.‘பெரியார்’ படம்
தயாரிக்கவும் கஷ்டப்பட்டார்கள். நெருக்கடி யான சூழலில்தான் நல்ல படங்கள்
வருகி றது. நான் இயக்கிய ‘அழகி’ படத்தை வாங்க ஆள் இல்லை. அப்படி வாங்கிச்
சென்றவர்கள் மறுநாள் என் அலுவலகத்தின் எதிரே நடுரோட்டில் பட பெட்டிகளை வீசி
விட்டு சென்றார்கள். >படம் ரிலீஸ் ஆகி ஓடிய பிறகு மீண்டும் அப்படத்தை வாங்க ஓடி வந்தார்கள்.இன்றைக்கு
நடிகர்கள் முகத்தை காட்டி மாட்டுக்கு விலை பேசுவதுபோல் படத்துக்கு விலை
பேசி கைமாற்றிக் கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ‘அம்மாவின்
கைப்பேசி’ உங்களின் ஆன்மாவை தொடும்’’என்று தெரிவித்தார்.
கூடங்குளத்தில் உற்பத்தி தொடங்க சமக விழிப்புணர்வு பேரணி
சென்னை :கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைந்து மின் உற்பத்தி தொடங்க கோரி சமக சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கடுமையான மின்பற்றாக்குறை உள்ள நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. என்றாலும் தினமும் ஒரு போராட்டங்கள் அங்கு நடத்தப்படுகிறது. இதைக்கண்டித்தும், கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க வலியுறுத்தியும் சமக சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தப்படும். கூடங்குளம் திட்டம் தொடர்பான விளக்கங்கள் குறித்து 5 லட்சம் புத்தகங்கள் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் 40 தொகுதிகளிலும் பா.ஜ. தனித்துப் போட்டி
பீகாரில் 40 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ. போட்டியிட உள்ளதாக அம்மாநில
பா.ஜ. தலைவர் தெரிவித்தார். பீகாரில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி
நடக்கிறது. முதல்வராக நிதீஷ்குமாரும், துணை முதல்வராக பா.ஜ.வின்
சுஷில்குமார் மோடியும் உள்ளார். கடந்த சில மாதங்களாக பா.ஜ.வுடன் மோதல்
போக்கினை நிதிஷ்குமார் கடைபிடித்து வருகிறார். பிரதமர் வேட்பாளர்
மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை
மறைமுகமாக விமர்சித்தார்.
இந்த சூழ்நிலையில் பா.ஜ. பீகார் மாநில தலைவர் சி.பி.தாக்கூர் கூறுகையில், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் , 40 தொகுதிகளிலும் பா.ஜ. தனித்தே போட்டியிடும், இது குறித்து சமீபத்தில் சூரஜ்குந்த் நகரில் நடந்த பா.ஜ. தேசிய செயற்குழுக்கூட்டத்தில் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் விரிவான அறிக்கையுடன் வலியுறுத்தியுள்ளேன். எனவே பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தினை எதிர்த்து பா.ஜ. 40 தொகுதிகளிலும் போட்டியிடும்.

நீர்ப்பாசன ஊழல்: அஜித் பவாரின் பங்காளி நிதின் கட்காரி!
மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ள நீர்ப்பாசன ஊழலில்
சிக்கியுள்ள தேசியவாத காங்கிரசாருடன் பாஜக எம்.பி அஜய் சாஞ்செட்டியின்
நிறுவனம் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரிய
வந்துள்ளது. ஊழலுக்கெதிரான இந்தியா அமைப்பின் உறுப்பினரான அஞ்சலி தமானியா
இந்த ஊழல் பற்றி பாஜக தலைவர் நிதின் கட்காரியிடம் கூறிய போது பவார்
குடும்பத்துடன் வியாபார தொடர்பு இருப்பதால் எதிர்நிலை எடுக்க முடியாது என
அவர் மறுத்து விட்டாராம்.
விதர்பா நீர்ப்பாசன வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளின் படி ஒரு ஒப்பந்ததார நிறுவனத்துக்கு அதிகப்படியாக மூன்று திட்டங்கள் வரைதான் ஒதுக்க முடியும். 2005 இல் தனது நிறுவனப் பெயரை சக்திகுமார் எம் சாஞ்செட்டி லிட் என்பதிலிருந்து எஸ்எம்எஸ் இன்ப்ராஸ்டிரக்சர்ஸ் என மாற்றி உள்ளார் அஜய் சாஞ்செட்டி. இரு நிறுவனங்களும் இணைந்து ஒரே ஒப்பந்ததாரர் எண்ணில் (1083) பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன• 2007இல் விதர்பா நீர்ப்பாசன வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராக இருந்தவர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)