ராதா மனோகர் SJV செல்வநாயகம் அமைதியானார் சேருவிலை தொகுதி உருவானது! 1970 க்கும் 1977 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் கிழக்கு மாகாணத்தில் சேருவிலை தொகுதி உருவாக்கப்பட்டது இத்தொகுதியனது வடக்கு மாகாணத்திற்கு கிழக்கு மாகாணத்திற்கு இடையில் சிங்கள வாக்காளர்களை பெரும்பான்மையராக கொண்ட ஒரு தொகுதியாகும். வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் ஒரு முயற்சியாக இது அப்போது கருதப்பட்டது. ஆனால் இதற்கு எஸ் ஜே வி செல்வநாயகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஏன் தெரியுமா? அந்த காலக்கட்டங்களில்தான் தமிழரசு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தமிழர் விடுதலை கூட்டணியாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது. அப்போது வவுனியா எம்பியாக தமிழரசு கட்சியை சேர்ந்த எக்ஸ் எம் செல்லத்தம்பு இருந்தார்
தினமலர் : லண்டன்: போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 250 பேர் கடத்தப்பட்டனர். இது தொடர்பான போர்க் குற்றங்களுக்காக, மூன்று ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை கோரப்பட்டிருந்தது. அவர்களில் இருவர் கொல்லப்பட்டனர். மற்றொருவரான டொய்ப் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.com - Mani Singh S : இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள பழங்குடியின பகுதியில் பயணிகள் வாகனத்தை குறிவைத்து, துப்பாக்கி ஏந்திய நபர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 29 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள பழங்குடியின மாவட்டம் குர்ரம். இங்குள்ள இடத்தில் இருந்து பெஷாவருக்க சென்று கொண்டிருந்த பயணிகள் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்னம்பலம் -Selvam : சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,110 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்பட 7 பேர் மீது அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் கெளதம் அதானி. இவரது அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2023-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.
மின்னம்பலம் - christopher ; மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் இன்று (நவம்பர் 20) முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி அரசான பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மஹாயுதி கூட்டணி என்ற பெயரில் களமிறங்கின.
மாலை மலர் : பார்ப்பனர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார். எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தமிழ் மிரர் : மன்னார் அரசு மருத்துவ மனையில் மகப்பேறின் போது தாயும் குழந்தையும் உயிரிழப்பு! இருவரின் உடல்களும் யாழ் அரசு பொதுமருத்துவ மனைக்கு அனுப்பி வைப்பு மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ராஜா ஜி : டெல்லியில் வசிப்பது தினமும் 40 சிகரெட் புகைப்பதற்கு சமம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா? டெல்லியில் மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது. இதனால் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இவை மட்டுமின்றி சென்னை உட்பட இந்தியாவின் பெரு நகரங்களில் காற்றின் தரம் தாறுமாறாக குறைந்து வருகிறது.
BBC : சௌதி அரேபியாவில் சமீபத்தில் நடந்த ஃபேஷன் ஷோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஷன் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட மேடையின் வடிவமைப்பு, புனித கபாவின் தோற்றத்தை ஒத்திருந்ததே இந்த சர்ச்சைக்கு காரணம். சௌதி அரேபியாவில் நடைபெற்ற ‘ரியாத் சீசன்' என்னும் வருடாந்திர கலாசார விழாவில், மேடை அலங்கரிப்பின் ஒரு பகுதியாக கபாவை ஒத்திருக்கும் கண்ணாடி அமைப்பு ஒன்று வைக்கப்பட்டது. மெக்காவில் இருக்கும் கபா இஸ்லாமியர்களால் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.
தினமலர் - நமது நிருபர் : சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்து செல்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் விருது வாங்கிய அவர், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றும் அவர் பிசியாக உள்ளார். 1995ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்தார். திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
தினமலர் : புதுடில்லி, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலின் முதல் சோதனை ஓட்டத்தை, ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள, ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் தயாரிக்கப்படுகிறது.
முகமது ஜமீல் : மலை வாழ் பழங்குடி மக்களுக்கு முழுக்க முழுக்க எதிராக இருந்த அம்பேத்கரை, மலைவாழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட அம்பேத்கரை, மலைவாழ் மக்களிடம் வம்படியாக திணிக்கும் வேலையை மகா லட்சுமி என்ற ஆசிரியை செய்கிறார்.. தோழர் மகா லட்சுமியின் சேவைக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.. ஆனால் நீங்கள் முன்னிறுத்தும் அம்பேத்கர் அப்படி பட்டவர் இல்லை..... பழங்குடியினர் தங்கள் அரசியல் அதிகாரத்தை பெறும் அளவிற்க்கு அறிவு இல்லாதவர்கள் என்றும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு பத்தி தெரியாதுனும் நான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பத்தி பேசல, மேலும் அவர்களுக்கு பிரிட்டீஸ் அரசு கொடுத்து இருந்த இட ஒதுக்கீட்டையும் பறிச்சு இருக்காரு அம்பேத்கர். வேணும்னா ஒரு 20 வருசம் கழிச்சு மலைவாழ் பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்னு பரிந்துறைக்குறாரு
மின்னம்பலம் -christopher : அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.50 கோடி, ரூ.100 கோடி கொடுங்கள் என்று கேட்கிறார்கள் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணியை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் மாவட்டந்தோறும் கள ஆய்வுக் குழு மூலம் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சி சோமரசம் பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் தலைமையில் கள ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
:இலங்கையின் புதிய கடல் தொழில் , நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். இவர் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழராவார். இவர் தனது கடமையை பொறுப்பேற்ற பின்பு ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியை இந்த காணொளியில் காணலாம் .
மாலை மலர் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஆவார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோதமான குடியேறிகள் மீது கடுமையான போக்கை டிரம்ப் கையாண்டார்.
மாலை மலர் : வன்கொடுமை தடுப்பு சட்டம் போல் பிராமணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசுகையில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
Hindu Tamil : சென்னை: ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வீராங்கனை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார்.
tamil.oneindia.com -Mani Singh S : தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை மிதித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாகன் மற்றும் அவரது உறவினர் என 2 பேரும் உயிரிழந்துள்ளனர். கோவில் யானை மிதித்ததாக இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. முருகனின் இரண்டாம் படை வீடுகளில் ஒன்றாக இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் 25 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையின் பெயர் தெய்வானை.
ilakkiyainfo.com : ஜனாதிபதி அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி ! புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு ! புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று வளர்ந்த நிலையில் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்ப்புக்களை பற்றி 1938 இலேயே தந்தை பெரியார் தீர்க்க தரிசனமாக கூறியிள்ளார் . சென்ற நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞான தீர்க்கதரிசி பெரியார்தான் .. ஆர்த்தர் கிளார்க் அல்ல ! இனிவரும் உலகம்"* எனும் தலைப்பில் *" சமுதாய விஞ்ஞானி "தந்தை பெரியார்* அவர்கள் 1938 லேயே கூறியது : போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்! ( flight Metro trains high speed cars and bus) கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்! (cell phones laptops and tabs) ரேடியோ ஒவ்வொரு தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்! ( headphones and Bluetooth instruments) உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத் தக்க சவுகரியம் ஏற்படும்! ( WhatsApp and video calling systems)
மாலை மலர் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அக்கட்சி கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. த.வெ.க. கொள்கைகள் மற்றும் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய உரை குறித்து அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு மற்றும் ஆதரவுக்குரல் எழுப்பினர். கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே, த.வெ.க. கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராதா மனோகர் : ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றி எப்போதும் ஒரு எதிர்மறையான கருத்தையே அமெரிக்க ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் உண்மையில் டொனால்டு ட்ரம்ப் போர்களுக்கு ஆதரவானவர் அல்ல. 2020 தேர்தல் பிரசாரத்தின் போது ; அமெரிக்க அரசின் மத்திய கிழக்கு போர்களை பற்றி தெளிவாக விமர்சித்துள்ளார்.: எங்களால் (அமெரிக்காவால்) நாசமாய் போன நாடுகளை பாருங்கள். ஆப்கானிஸ்தான் முற்று முழுதாக அழிந்து விட்டது நாங்கள் அங்கே என்ன செய்கிறோம்? அங்கிருந்து வெளியேறுங்கள் நாங்கள் ஒரு போதும் இராக் மீது படையெடுத்திருக்கவே கூடாது நாங்கள் மத்திய கிழக்கை குலைத்துவிட்டோம் நாங்கள் பொய் சொன்னோம் அங்கு பெரும் மனித அழிவுக்கான ஆயுதங்கள் இருப்பதாக கதை கட்டினோம்
தினமணி : நடிகர் தனுஷை கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார் நடிகை சுசித்ரா. தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரிய அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது. தென்னிந்தியளவில் முன்னணி நடிகையான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் ஒப்புதல் கேட்டிருக்கின்றனர். ஆனால், தனுஷ் தரப்பிலிருந்து ரூ. 10 கோடி கேட்டதாக விக்னேஷ் சிவன் கூறியதுடன் பிரச்னையை தீவிரப்படுத்தி வருகிறார்.
மாத்தறை மாவட்டத்தில் 18,000 தமிழ் வாக்காளர்களே உள்ளனர்! ஆனால் அங்கு வெற்றி பெற்ற சரோஜா சாவித்திரி பால்றாஜ் அவர்கள் பெற்ற வாக்குகள் 148 370! சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல - அவர்கள் திராவிடர்கள்தான்! Siraj Hakkeem : சுனில் ஹந்துன்நெதி - A great man with a broad mind... கடந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஹந்துன்நெதி அவர்கள் 37,236 வாக்குகள் பெற்று சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார். அப்போது NPP எதிரிகள் அவர் மாத்தறை சந்தியில் வடை விற்பது போன்று ஒரு மீம்ஸ் கிரியட் பண்ணி பரவ விட்டனர். அதற்கு ஹந்துன்நெதி புன்னகையுடன் இது ஒரு நல்ல தொழில் தானே, நான் மத்திய வங்கியை கொள்ளையடிக்க வில்லை என்று பதில் அளித்தார்...