திங்கள், 18 நவம்பர், 2024

அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர்களுக்கு ஆதரவானவர் அல்ல! ஊடகங்கள் எப்போதும் அவரை தவறாகவே காட்டுகின்றன

 ராதா மனோகர் : ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றி எப்போதும் ஒரு எதிர்மறையான கருத்தையே அமெரிக்க ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் உண்மையில் டொனால்டு ட்ரம்ப் போர்களுக்கு ஆதரவானவர் அல்ல.
2020 தேர்தல் பிரசாரத்தின் போது ; அமெரிக்க அரசின் மத்திய கிழக்கு போர்களை பற்றி தெளிவாக விமர்சித்துள்ளார்.:
எங்களால் (அமெரிக்காவால்) நாசமாய் போன நாடுகளை பாருங்கள்.
ஆப்கானிஸ்தான் முற்று முழுதாக அழிந்து விட்டது
நாங்கள் அங்கே என்ன செய்கிறோம்?
அங்கிருந்து வெளியேறுங்கள்
நாங்கள் ஒரு போதும் இராக் மீது படையெடுத்திருக்கவே கூடாது
நாங்கள் மத்திய கிழக்கை குலைத்துவிட்டோம்
நாங்கள் பொய் சொன்னோம்
அங்கு பெரும் மனித அழிவுக்கான ஆயுதங்கள் இருப்பதாக கதை கட்டினோம்


ஆனால் அங்கு அப்படி ஒன்றுமே இருக்கவில்லை
அப்படி இல்லை என்று நாம் அறிந்திருந்தோம்
லிபியாவில் பெரும் நாசம் விளைவித்தோம்
சிரியாவில் நாம் என்ன செய்கிறோம் என்று எனக்கு தெரியும்
அங்கு நடப்பது பேரழிவுதான்
அந்த நாடுகளை நாசமாக்க தேவையான எல்லாவற்றையும் நாம் செய்கிறோம்
ஐ எஸ் ஐ எஸ் உடனானன் போரை ரஷ்யாவின் பொறுப்பில் விடுவோம்
மேற்குலகின் முன்னேற்றங்களையும் கலாசார விழுமியங்களையும் உலகிற்கு எடுத்து சொல்வோம்
இதன் மூலம் உலகில் சிறந்த வாழ்வியலை நாம் முன்னெடுக்கலாம்
ராணுவ படை எடுப்புக்களை விட இவையே சிறந்த பலனை தரும்
இப்படி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் கூறிக்கொண்டிருந்த இதே காலக்கட்டத்தில்
உலகின் சமானதான புறாக்கள் போன்று தோற்றமளித்த ஹிலாரி கிளிண்டன் வகையறாக்கள்
எப்போதும் போரையும் போரினால் ஏற்படும் அழிவுகளையும் கண்டு அவற்றை தங்களின் சாதனைகளாக கருதியவர்கள்தான்
   

கருத்துகள் இல்லை: