வெள்ளி, 22 நவம்பர், 2024

SJV செல்வநாயகம் அமைதியானார் சேருவிலை தொகுதி உருவானது!

May be an image of 1 person
X.M.Sellathambu
May be an image of 1 person and beard
T.Sivasithambaram

ராதா மனோகர்  SJV  செல்வநாயகம் அமைதியானார் சேருவிலை தொகுதி உருவானது!
1970 க்கும் 1977 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் கிழக்கு மாகாணத்தில் சேருவிலை தொகுதி உருவாக்கப்பட்டது
இத்தொகுதியனது வடக்கு மாகாணத்திற்கு கிழக்கு மாகாணத்திற்கு இடையில் சிங்கள வாக்காளர்களை பெரும்பான்மையராக கொண்ட ஒரு தொகுதியாகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் ஒரு முயற்சியாக இது அப்போது கருதப்பட்டது.
ஆனால் இதற்கு எஸ் ஜே வி  செல்வநாயகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை
ஏன் தெரியுமா?
அந்த காலக்கட்டங்களில்தான் தமிழரசு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தமிழர் விடுதலை கூட்டணியாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.
அப்போது வவுனியா எம்பியாக தமிழரசு கட்சியை சேர்ந்த எக்ஸ் எம் செல்லத்தம்பு இருந்தார்


அதுவரை வவுனியா எம்பியாக இருந்த டி சிவசிதம்பரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.1977 தேர்தலில் வவுனியா எம்பி எக்ஸ் எம் செல்லத்தம்புவிற்குதான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
மறுபுறத்தில் எல்லைக்காவலர் என்று புகழ் பெற்ற வவுனியா சிவசிதம்பரத்திற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
முன்னாள் எம்பி திரு டி சிவசிதம்பரம் ஏற்கனவே அடங்கா தமிழன் சுந்தரத்திலிங்கத்தை தோற்கடித்து எம்பியானவர், மூன்று தடவை எம்பியாக வெற்றி பெற்றவர்
எனவே எப்படி பார்த்தாலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும்.
மறுபுறத்தில் திரு எக்ஸ் எம் செல்லத்தம்பு யாழ்ப்பாண எம்பி எக்ஸ் எம் மார்டினின் ( முன்னாள் நீதிபதி) நெருங்கிய உறவினர்.
இவர்களின் இந்த விடயங்களை ஸ்ரீமா அம்மையார் மிக நன்றாக கையாண்டார்.
உங்களுக்கு முல்லைத்தீவை பிரித்து புதிதாக ஒரு தொகுதி தருகிறேன்
சேருவிலை தொகுதி உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்
முடிவு .. செல்வநாயகம் அமைதியானார்
சேருவிலை தொகுதி உருவானது!
X,M,Sellathambu- T.Sivasithambaram

கருத்துகள் இல்லை: